Home பாலியல் பெண்ணின் உறவு உச்ச இன்பநிலை பற்றிய தகவல்

பெண்ணின் உறவு உச்ச இன்பநிலை பற்றிய தகவல்

238

பெண்ணின் சுகம் தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும் பெண்கள் கட்டுப்பட்டியாக இருந்துவிட்டார்கள்.

ஆனால், இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, இன்டர்நெட், தொலைபேசி மூலமாகத் தெரியாத பல விஷயங்களையும் புரியவைத்திருக்கிறது விஞ்ஞானம்.

அதனால், இவ்வளவு காலம் இருந்ததுபோல் இனியும் பெண்கள் ஏமாளியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

தன்னுடைய இன்பத்தை மட்டும் பெண்களின் உடலில் தணித்துக்கொண்ட ஆண்கள், இனியும் அப்படியே சுயநலவாதிகளாக இருக்க முடியாது.

பெண்களும் இன்பம் வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகப் போராடவும் தொடங்கிவிட்டார்கள். பெண்களுக்கு இன்பம் கிடைக்காதபட்சத்தில், ஆண்களுக்கும் இன்பம் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.

அதனால், செக்ஸ் இன்பம் இனி பரஸ்பரம் இருவரும் அனுபவிப்பதாகவே இருக்க வேண்டும். ஒவ்வொரு கலவியின்போதும் ஆண்கள் எளிதில் உச்சகட்டம் அடைந்துவிடுகிறார்கள்.

அதுபோல் ஒவ்வொரு கலவியிலும் பெண்களும் உச்சகட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு உதவி செய்ய வேண்டியது ஆண்களின் கடமையாகும்.

இந்தச் செயல்பாடுகளில் இருந்து ஆண்கள் தவறினால் அல்லது தவிர்த்தால், குடும்ப உறவு சிதையும் சூழல் உருவாகிவருகிறது.

அதனால்தான், இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் குடும்ப வழக்குகள் பெரும்பாலும் ஆண்களால் திருப்திப்படுத்த இயலவில்லை என்ற குற்றச்சாட்டுகளுடனே வருகின்றன.

Previous articleபெண்களின் அடக்கமுடியாத உறவு பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்
Next articleவாழ்வில் நம்மை கடந்த செல்லும் பாலியல் வாழ்கை