Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் வயிற்றின் சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்

பெண்கள் வயிற்றின் சதைகளை குறைக்க தினமும் இதில் ஒன்றை சாப்பிடுங்கள்

93

உடல் கட்டுபாடு:உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்வது, கண்ட இடங்களில் வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவை முக்கிய காரணமாகும்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

வயிற்றுச் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் கொழுப்பு கரையும்.

Previous articleதாம்பத்ய வாழ்கையில் திருப்தி இல்லாமல்அவதிப்படும் நபரா நீங்கள்..?
Next articleசெக்ஸ் குறித்து மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!