Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பயிற்சி செய்யும் பெண்களா நீங்க ? தவறாமல் இதை செய்யுங்கள்

உடல் பயிற்சி செய்யும் பெண்களா நீங்க ? தவறாமல் இதை செய்யுங்கள்

36

உடல் அழகு:பெண்களுக்கு பெரும் சவாலாக இருப்பது உடல் எடை குறைப்பது ஆகும்.

இதற்காக பல பெண்கள் ஜீம்முக்கு சென்று நேரத்தை செலவு செய்வது வழக்கமாயிற்று.

அப்படி ஜீம் சென்று உடல் எடையை குறைப்பவர்களுக்கான சில அறிவுரைகள் நாம் பார்ப்போம்.

வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகள் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி ,பீனட், பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் என்பவை எடுத்துக் கொண்டால் நல்லது.
உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்கு பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்.

வொர்க்-அவுட்பின் அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.
வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம்.
செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 – 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும்.
உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.
உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும்.
உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 – 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.
சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.

முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.
அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.
தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து 15-20 சதவிகிதம் புரதம் உட்கொள்ளலாம்.
முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

Previous articleகால்மேல் கால்போட்டு இருக்கும் பெண்கள் அவதானமாக இருங்கள்
Next articleஇளம் வயது ஆண் மற்றும் பெண் பாலியல் தடைகளை தாண்ட