Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் பின் அழகு அதிகரிக்க இதை செய்யுங்கள் பெண்களே

பெண்களின் பின் அழகு அதிகரிக்க இதை செய்யுங்கள் பெண்களே

124

உடல் கட்டுபாடு:உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன. எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் பின்புறம் பெருத்துவிடுவதுதான். இதற்கு காரணம் ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அசையாமல் அமர்ந்திருப்பது

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால் ஏற்படும் உடல்களில் ஏற்படும் அழுத்தம் அந்த இடங்களில் உள்ள செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும்.

இது ‘மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ்’ எனப்படுகிறது. ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலின் மற்ற பகுதிகளைவிட ‘சீட்’ பகுதியில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும். இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும் இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்கவேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அழகாக உடற்பயிற்சி

முதலில் நேராக நின்றுகொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளாலும் அந்த கட்டையை பிடித்துக்கொண்டு தலையை முன்னோக்கி நீட்டியவாறு முதுகுவரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழகாகும்.

உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும். அதனை பிடித்துக்கொண்டு வலதுகாலை பின்னோக்கி மடக்கவும், பத்துமுறை செய்யவும். அதேபோல் இடதுகாலையும் பின்னோக்கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தால் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும்.

ஆசனத்தை விரித்து முழங்கையை ஊன்றி குப்புற படுத்துக்கொள்ளவும். பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதோபோல் இருகால்களையும் பத்துமுறை மடக்கி நீட்டவும். இதேபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்துவர அழகான இடுப்பும், பின்பகுதியும் அழகாக மாறும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அப்புறமென்ன கண்ணைக்கவரும் ஆடைகளை அணிந்து அழகாக தோற்றமளிக்கலாம்.