Home பாலியல் ஆண் பெண்களின் ஓரல் பாலியல் தொடர்பில் உண்மையும் பொய்யும்

ஆண் பெண்களின் ஓரல் பாலியல் தொடர்பில் உண்மையும் பொய்யும்

450

செக்ஸ் என்பது பிறப்புறுப்பு ரீதியாலான தீண்டல் / ஊடுருவல் மட்டுமல்ல. சிலர் கருத்தரிக்க விரும்பவில்லை என்றால் ஏனல் (Anal) செக்ஸில் ஈடுபடுவது உண்டு. சிலர் உச்சக்கட்ட இன்பம் அடைய வேண்டும் என்பதற்காக ஓரல் (Oral) செக்ஸில் ஈடுபடுகிறார்கள்.

ஏனல் செக்ஸ் என்பது பெண்களுக்கு மிகுந்த வலியால் ஏற்படுத்த கூடியது. ஆகவே, பெரும்பாலும் பிறப்புறுப்பு ரீதியான செக்ஸிற்கு அடுத்து, ஓரல் செக்ஸ் என்பது தம்பதியினர் இடையே கடைப்பிடிக்கப்படும் செக்ஸுவல் ஆக்டிவிட்டியாக இருக்கிறது. இந்த ஓரல் செக்ஸ் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால், இதுக்குறித்து வெளியே எப்படி கேட்பது என்ற தயக்கத்தில், நிறைய கட்டுக்கதைகளை நம்ப துவங்குகிறார்கள். இந்த கட்டுக்கதைகள் நாட்போக்கில் உண்மை என நம்பப்பட்டது. ஓரல் செக்ஸ் மூலம் கருத்தரித்தல், ஓரல் செக்ஸ் பாதுகாப்பானது, ஓரல் செக்ஸ் – உச்சக்கட்ட இன்பம் என… நிறைய கட்டுக்கதைகள் மற்றும் அது சார்ந்த உண்மைகளை மருத்துவர்கள் தெளிவாக கூறுகிறார்கள்…

கற்பு! ஓரல் செக்ஸ் கொள்வதால் ஒரு நபர் கற்பிழந்துவிட்டார் என்று கூற இயலுமா? செக்ஸ் மற்றும் கற்புக்கு இடையேயான தொடர்பு என்ன என்பதுக் குறித்து முழுமையான தெளிவு இன்றளவும் மனித சமூகத்தில் இல்லை. ஓரல் செக்ஸில் உறுப்பு ரீதியான தீண்டல் இல்லை. ஆயினும் இதனால் கற்பு இழக்கப் படுவதாக கருதுகிறார்கள்.

உண்மை! ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு ரீதியான புணர்தல் ஏற்பட்டால் மட்டுமே கற்பு இழக்கப்படுகிறது. இதை தான் அறிவியல் கூறுகிறது. இதற்கு இடையே ஓரல் செக்ஸில் ஈடுபடுவதால் கற்பு இழக்கக் கூடும் என்பது மனிதர்கள் மத்தியில் இருக்கும் ஒரு மாயையான கருத்து என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வதினால் மன ரீதியான கற்பு இழக்க நேர்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

கர்ப்பம்! இன்னும் மருத்துவர்களிடம் ஓரல் செக்ஸ் குறித்து பலர் கேட்கும் கேள்வி இது. ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வதால் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறதா? ஓரல் செக்ஸ் என்பது ஒருவகையான சிற்றின்ப ஆசை அல்லது ஃபோர் ப்ளே என்று மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். ஓரல் செக்ஸ் மட்டும் வைத்துக்கொள்வதால் கருத்தரிக்க இயலாது.

உண்மை! கருத்தரிக்க வேண்டுமானால் விந்தணுவானது பெண்ணுறுப்பு வழியே கருவை அடைந்து கூடி நிகழ்வதாகும். ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வதால் விந்தணு கருவை எட்டும் என்பது முற்றிலும் உண்மையற்றது. பெண்ணுறுப்பு தவிர, வேறு எந்த வழியாக விந்தணு பெண் உடலுக்குள் சென்றாலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை.

சுகாதாரமற்றது! இந்தியர்கள் மத்தியில் இன்றளவும் காணப்படும் மனோபாவம் இது. ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது சுகாதாரமற்ற செயல் என்று கருதுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் அதிகம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது தான் அபாயமே தவிர, ஒரே நபருடன் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய சுகாதாரமற்ற செயல் என்று கூறிட இயலாது.

உண்மை! ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்ப இருந்தால் மட்டுமே ஈடுபட வேண்டும். சிலருக்கு இது பிடிக்கும், சிலருக்கு இது பிடிக்காது. ஆண் என்று வரும் போது, விந்தணு மற்றும் சிறுநீர் ஒரே பாதையில் வருவதால், பெண்கள் ஓரல் செக்ஸில் ஈடுபட சற்று தயக்கம் கொள்ளலாம். ஓரல் செக்ஸில் ஈடுபடுவதாக இருந்தால், அதற்கு முன்பு உறுப்பை சுத்தமாக கழுவிய பிறகு ஈடுபடலாம். மேலும், ஓரல் செக்ஸ் மூலமாக சிலவகை பால்வினை நோய் தொற்று ஏற்படும் அச்சம் இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உச்சக்கட்ட இன்பம்! ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வதால் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியாது என்ற கண்ணோட்டமும் மக்கள் மத்தியில் காண இயல்கிறது. ஓரல் செக்ஸ் என்பது ஃபோர் ப்ளே விளையாட்டு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஓரல் செக்ஸில் ஈடுபடுவதால் துணைக்கு உடலுறவுக் கொள்ள தூண்டலாம். இது இயற்கையாக சிறந்து செக்ஸில் ஈடுபட உதவும்.

உண்மை! பெண்கள் என்று எடுத்துக் கொள்ளும் போது, ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது, அவர்களது கிளிட்டோரிஸ் பகுதி தூண்டிவிடப்படுகிறது. பெண்கள் அதிகமாக உச்சக்கட்ட இன்பம் காண உதவுவது இந்த கிளிட்டோரிஸ் தூண்டுதல் தான். அதே போல தன் ஆண்களுக்கு ஓரல் செக்ஸின் போது சுய இன்பம் காணுதல் வகையான உச்சக்கட்ட இன்பம் வெளிப்படும்.

பால்வினை நோய்! பிறப்புறுப்பு ரீதியான தீண்டல் காரணத்தால் தான் பால்வினை நோய்கள் பரவும். ஓரல் செக்ஸ் கொள்வதால் இந்த அச்சம் இல்லை. இது மக்கள் மத்தியில் காணப்படும் பெரிய கட்டுக்கதைகளில் ஒன்று. ஓரல் செக்ஸ் கொள்வதால் எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் தொற்று தான் ஏற்படாதே தவிர. வேறு சில பால்வினை நோய் தொற்று ஏற்பட நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.

உண்மை! ஹெர்ப்ஸ் போன்ற பால்வினை நோய் தொற்று ஓரல் செக்ஸ் மூலமாக பரவ வாய்புகள் உள்ளன. முக்கியமாக வாய் பகுதிகளில் இதன் தாக்கம் வெளிப்படும். இது இதழ்களை சுற்றி கொஞ்சம் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். ஆனால், இதை ஆண்டி-பயாடிக் கொண்டு குணமாக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மாற்று?! பெரும்பாலான பதின் வயது மக்களிடம் ஓரல் செக்ஸ் என்பது பெண்ணுறுப்பு ரீதியிலான செக்ஸிற்கு மாற்று என்று கருதி ஈடுபடுகிறார்கள். இதனால், அவர்கள் பாதுகாப்பாக செக்ஸுவல் ஆக்டிவிட்டியில் ஈடுபடுவதாக கருதுகிறார்கள்.

உண்மை! ஓரல் செக்ஸ் மூலம் இன்பம் எட்ட முடியும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதை பெண்ணுறுப்பு ரீதியிலான செக்ஸிற்கு மாற்று என்று எடுத்துக் கொள்ள இயலாது. நிறைய பதின் வயதினர் ஓரல் செக்ஸில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்று முழுமையாக அறியாமல், இது பாதுகாப்பானது என்று எண்ணுகிறார்கள்.

ஆணுறை பயன்படுத்த முடியாது! ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது காண்டம் பயன்படுத்த முடியாது. சந்தையில் ஏன் நிறையா ஃப்ளேவர்களில் ஆணுறைகள் விற்கிறார்கள் என்று தெரியுமா? நிறைய ஜோடிகளுக்கு இது தெரிவதில்லை. சிலர் காண்டம் அணிந்து ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டால் பெண்களுக்கு ஏதேனும் தாக்கம் ஏற்படுமா என்றும் சந்தேகிக்கிறார்கள்.

உண்மை! எல்லா பெண்களும் விந்தணு தங்கள் வாய்க்குள் செல்வதை விரும்புவதில்லை. ஆகையால், ஆணுறை அணிந்து ஓரல் செக்ஸில் ஈடுபட அவர்கள் முனைகிறார்கள். மேலும், ஆணுறையில் இருக்கும் லியூபிரிகென்ட் தாக்கம் ஏற்படுத்துமா என்று சந்தேகிக்கிறார்கள். ஃப்ளேவர்கள் கொண்ட ஆணுறை பெண்கள் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.