Home பெண்கள் பெண்குறி கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு திரவம்

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் மஞ்சள், பச்சை மற்றும் இளஞ்சிவப்பு திரவம்

41

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உடலில் பல வித மாறுதல்கள் நிரம்ப காணப்படுவது வழக்கம். அவற்றுள் ஒரு சில மாறுதல்கள் உங்களுக்கு மனதளவில் எரிச்சலை தரக்கூடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. அவற்றுள் ஒன்று தான் குழந்தை பிறப்புக்கு முன்னே பிறப்புறுப்பிலிருந்து வழிய தொடங்கும் திரவமாகும். ஆனால், அவற்றிலும் ஒரு சில நிற மாற்றத்துடன் திரவம் வெளியேறினால் மருத்துவரின் உதவி கண்டிப்பாக உங்களுக்கு தேவை என்பதை நீங்களும் படித்து தெரிந்து பயனடையலாமே!

மஞ்சள் நிறத்தில் வெளியாவது:
1. நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் பிறப்புறுப்பிலிருந்து மஞ்சள் நிறத்தில் வெளியானால் அது தொற்று ஏற்படுவதற்கான முதல் அறிகுறியாக அமைகிறது.

2. ஒரு வித வெள்ளை இரத்த அணுக்கள் உங்கள் பிறப்புறுப்பின் அருகாமையில் காணப்படும். இதனால் தான் மஞ்சள் நிறத்தில் உங்கள் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகிறது.

3. ஒருவேளை உங்கள் உடலில் உண்டான இந்த தொற்று அதிகரிக்கும்போது, இதன் நிறமானது மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் கலந்து வெளியாகும். நீங்கள் கண்டுகொள்ளாமல் இதை அப்படியே விட்டால் மஞ்சள் நிறம் ஒட்டுமொத்தமாக பச்சையாக மாறி மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

4. இந்த மஞ்சள் நிற திரவமானது அழுகிய வாடை வீச, இதன் நறுமணத்தை நுகர்ந்தாலே கர்ப்பிணிகளுக்கு குமட்டல் வரக்கூடும். மேலும், பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் வீக்கம் காணப்பட, ஒருவித எரிச்சலுடனும் காணப்படக்கூடும்.

பச்சை நிறத்தில் வெளியாவது:
1. உங்களுடைய கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பிலிருந்து பச்சை நிறத்தில் திரவம் வெளியேறினால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பச்சை நிற திரவ வெளியேற்றம் என்பது நேரடி தொற்றை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

2. இதனால் உங்கள் பிறப்புறுப்பின் அருகாமையில் இருக்கும் ஒரு வித வெள்ளை இரத்த அணுக்கள் பெருக செய்கிறது. இதனால் உங்கள் உடலில் அதுவும் பிறப்புறுப்பின் அருகாமையில் நடக்க வேண்டிய முக்கிய செயல்கள் முடங்கி பாதிக்கப்படுகிறது.

3. இன்னொரு காரணமாக அமைவது என்னவென்றால், பிறப்புறுப்பில் தோன்றும் மருக்கள் தான். இது உடலுறவு தொற்றால் வரக்கூடிய ஒரு மருக்கலாகும். உங்கள் சருமம் என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதே நிறத்தில் மருக்களும் காணப்படும். இதனால் உங்கள் பிறப்புறுப்பிலிருந்து பச்சை நிறமானது வெளியாகக்கூடும்.

இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியாவது:
1. அதேபோல் உங்கள் பிறப்புறுப்பிலிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளியாவதை பார்த்து இருப்பீர்கள். இந்த திரவம் என்பது இளஞ்சிவப்பு, கருமையான இளஞ்சிவப்பு, அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

2. இதற்கு காரணம், கர்ப்பமாக நீங்கள் இருக்கும்போது உங்கள் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் சிறிய அளவிலான இரத்தம் கலப்பதே ஆகும்.

3. இந்த நிலை என்பது நீங்கள் மாதவிடாயின் போது சந்தித்த ஒரு நிலையை போல் காணக்கூடும்.

4. சில சமயத்தில் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றினாலும் கூட இளஞ்சிவப்பு நிறத்தில் வழியக்கூடும். உங்களுக்கு அரிப்பு அல்லது ஒருவித வலி என்பது காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிக நல்லது.