Home பெண்கள் பெண்குறி அதிக உறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா?

அதிக உறவு கொண்டால் பெண்களின் அந்தரங்க உறுப்பு பெரிதாகுமா?

4487

பெண்களின் அந்தரங்க உறுப்பு:பிறப்புறுப்பை சரியாக பராமரிப்பதோ, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த நம்மில் பெரும்பாலானோர் எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை; வெளியில் தெரியும் உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அவ்வுறுப்புகள் அழகாக தெரிய மேற்கொள்ளப்படும் மெனக்கெடலும் பிறப்புறுப்பிற்கு அளிக்கப்படுவது அல்ல. ஏனெனில் அது ஒரு தனிப்பட்ட நீங்கள் மட்டுமே பார்த்து பராமரிக்கும் விஷயம் என்பதால், அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் ஒருவித அலட்சியத்தை நாம் வெளிப்படுத்துகிறோம்.

பராமரிப்பு தான் இப்படி என்றால், பிறப்புறுப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே ஏற்படுவது மிகக்குறைவு; அப்படியே ஏற்பட்டாலும் அதை வெளிப்படையாக கேட்பதோ, அதைப்பற்றி படிப்பதோ அசிங்கம் என்ற கருத்து நம் மனதில் இடம்பெற்று வருகிறது.

பெண்களும் சரி ஆண்களும் சரி தங்கள் பிறப்புறுப்பை பற்றி கேட்கத் தயங்கும், கேட்டால் அசிங்கமாக இருக்குமோ என்று நினைத்து கேட்காமல் விட்டுவிடும் பல அவசியமான தகவல்களை குறித்து இந்த பதிப்பில் படித்தறிவோம்.

1. எத்தனை பேருடன் கொண்டேன்? மகப்பேறு மருத்துவரால் கூட கண்டுபிடிக்க முடியாத, கண்டுபிடிக்க இயலாத என்ற மாபெரும் இரகசியம் – நீங்கள் எத்தனை நபர்களுடன் இதுவரை கலவி கொண்டீர்கள், கொள்வீர்கள் எனும் விஷயம். ஒரு மகப்பேறு மருத்துவரால் ஒரு பெண் அல்லது ஆண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா இல்லையா என்று கண்டறிய முடியும்; ஆனால், ஒருமுறை கன்னித்தன்மை பறிபோன பின் எத்தனை பேருடன் உடலுறவு கொள்ளப்பட்டது என்று சாதாரண நபர்களில் கண்டறிய முடியாது. அது நீங்கள் மட்டுமே அறிந்த இரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தும் பொழுது, அவளின் சுய இச்சையை மீறி கற்பழிக்கப்படுகிறாள்; அந்த சமயத்தில் அவள் மீது நடக்கும் தாக்குதல்கள், அவளை எத்தனை பேர் துன்புறுத்தி கற்பழித்து இருப்பார்கள் என்று பெண்ணின் பிறப்புறுப்பில் மற்றும் உள்ளுறுப்புகளில் நிகழ்ந்த சேதத்தை வைத்து கண்டறிய முடியும்.

2. பிறப்புறுப்பின் அளவு காட்டிக்கொடுக்குமா? அதிக முறை உடலுறவு கொண்டால் பிறப்புறுப்பின் அளவில் மாறுபாடு ஏற்படுமா என்ற கேள்வி உங்கள் மனதில் நிலவலாம். இது முக்கியமாக பெண்கள் அனைவரின் மனதில் நிலவும் கேள்வி; ஏனெனில் ஆண்களில் எத்தனை முறை உறவு கொண்டாலும், பிறப்புறுப்பின் அளவு மாறாது. ஆனால், பெண்ணில் சற்று மாறுபடலாம்; பிறப்புறுப்பு மாறுபாடு என்பது எத்தனை முறை எத்தனை பேருடன் தாம்பத்யம் கொண்டீர்கள் என்ற விஷயங்களை பொறுத்து அமையாது. பெண்ணின் பிறப்புறுப்பு குழந்தையை பெற்ற பின் சற்று விரிவடையும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே இந்த மாற்றம் புலப்படும். தாய்மையால் அகண்ட பிறப்புறுப்பு மீண்டும் பழைய நிலையை கூடிய விரைவில் அடைந்துவிடும். பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாறுபாடு மிகக் கூர்மையாக நோக்கினால் மட்டுமே புலப்படும்; இந்த பிறப்புறுப்பு அளவு மாற்றம் சில பெண்களில் மட்டும் நிகழ்கிறது.

3. பிறப்புறுப்பு நாற்றம் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் மைல்டு ஸ்மெல் – சற்று மெல்லிய வாசம் உங்கள் ஆரோக்கியத்தையே குறிக்கிறது; இம்மாதிரியான மெல்லிய வாடை வெளிப்படல் வேண்டும், இது உங்கள் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் சரியாக தான் நடக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதுவே, பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திட-திரவம் பலத்த வாசத்துடன், cottage cheese texture என்று சொல்லக்கூடிய நிலையில், மீன் வாடை போன்று வெளிப்பட்டால், உடலில் ஏதோ குறைபாடு உள்ளது; அதிலும் முக்கியமாக பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று உங்களுக்கு உணர்த்தவே இவ்வாறு வெளிப்படுகிறது என்று உணருங்கள்.

4.நாற்றத்திற்கு உணவுதான் காரணமா? பிறப்புறுப்பில் ஏற்படும் நாற்றத்திற்கு நீங்கள் உண்ணும் உணவுகள் தான் காரணமா என்று சந்தேகம் மனதில் எழுகிறதா? ஆம் அது ஒருசில உணவுகளில் உண்மை தான். பலத்த நெடியை ஏற்படுத்தும் உணவுகளான பூண்டு, அஸ்பாரகஸ், ரெட் மீட் என்று கூறப்படும் உணவுகளை உண்பதால், பிறப்புறுப்பு திட-திரவ வெளிப்பாட்டில் மாறுபாடு, அதன் வாசத்தில் மாறுபாடு ஏற்படலாம். ஆனால் அது நிரந்தரமல்ல; மாறக்கூடிய வாசமே என்று அறிந்து உங்கள் உணவு முறைகளை வழக்கம் போல் கடைபிடியுங்கள்.

5. தாம்பத்தியத்தின் போது சுசு வருமா? ஆணும் பெண்ணும் கலவி கொள்ளும் பொழுது, பொதுவாக பெண்களுக்கு சுசு அதாவது சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படலாம். இது உள்நுழைத்தலின் பொழுது, ஆணின் பிறப்புறுப்பு பெண்ணின் சிறுநீர் பையில் அழுத்தம் கொடுத்துவிடுவதால் ஏற்படும் உணர்வாக இருக்கலாம் அல்லது சில பெண்களில் உச்சக்கட்டம் அடையும் பொழுது ஏற்படும் உணர்வாக இருக்கலாம். ஆனால், உடலுறவு கொள்ளும் பொழுதே சிறுநீர் கழித்துவிட்டால், பெண்கள் தங்கள் பிறப்புறுப்பு தசைகள் பலவீனமாக இருப்பதாய் அறிந்து, அதனை பலப்படுத்த வேண்டும்.

6. பிறப்புறுப்பு குசு உடலுறவு கொள்ளும் பொழுது பெண்ணின் உடலில் பிறப்புறுப்பு வழியாக நுழையும் காற்று பிறப்புறுப்பு குசுவாக சில சமயங்களில் வெளிப்படுவதுண்டு. இது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண மாற்றமே.! இதை பெரிதாக எண்ணிக் கொண்டு பெண்கள், இதைத்தடுக்க பலவித செயல்களில் ஈடுபடுவர்; ஆனால் எந்தவொரு தனிப்பட்ட செய்முறையும் செய்யாமலே இந்த பிறப்புறுப்பு குசு உடலை விட்டு நீங்கிவிடும். இதைக்குறித்த கவலையை விட்டுவிடுங்கள்.

7. பிறப்புறுப்பில் பரு பிறப்புறுப்பில் பரு ஏற்படுவது உங்கள் மனதில் உறுத்தலை ஏற்படுத்தலாம்; பிறப்புறுப்பில் முளைத்துள்ள முடியை அகற்றுவதற்காக ஷேவ் செய்யும் பொழுது பரு அல்லது பிறப்புறுப்பு கருத்துப் போதல் போன்றவை ஏற்படலாம். இதனை தடுக்க மிகவும் கவனமாக முடியை அகற்றும் முறையை பின்பற்ற வேண்டும்; ஷேவ் செய்வதை விடுத்து வேக்சிங் அல்லது இயற்கை முறையில் முடிகளை அகற்ற முயலலாம்.

8. ஏன் அரிக்கிறது? மாதவிடாயின் பொழுது பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவில் குறைவு ஏற்படுவதால், மாதவிடாயின் பொழுது பெண்ணின் பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இது சாதாரணமான மாற்றமே; பயம் கொள்ள தேவையில்லை. ஆண்களின் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டால், அதற்கு தூய்மையற்ற உள்ளாடை உபயோகம், ஈஸ்ட் தொற்று போன்றவை காரணமாக இருக்கலாம்.

9. பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்ளுமா? பிறப்புறுப்பில் எந்த ஒரு சிறிய பொருளையும் பயன்படுத்தும் பொழுது அது அங்கு மாட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. பிறப்புறுப்பில் பயன்படுத்தும் காண்டம் மற்றும் பேட் போன்றவை மாட்டிக் கொண்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பிறப்புறுப்பில் டெம்பொன் என்று கூறப்படும் பொருள் மாட்டிக்கொண்டால் அது அதிகமான நாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. எந்தவொரு சின்ன பொருளும் பிறப்புறுப்பில் மாட்டிக்கொள்ளும் அபாயம் நேர்ந்தால், உடனடியாக விரலை விட்டு வெளியே எடுக்க முயல வேண்டும்; பின் உடனடியாக மருத்துவரையும் அணுகி ஒருமுறை சோதனை செய்து கொண்டு வெளியே எடுத்து விடுதல் நல்லது.

Previous articleஅதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
Next articleஆண்கள் பெண்கள் ஆணுபவிக்கும் சுயஇன்பத்தின் சில முக்கிய தகவல்