Home இரகசியகேள்வி-பதில் மலவாயில் உடல் உறவு கொள்வது ஆரோக்கியமானதா?

மலவாயில் உடல் உறவு கொள்வது ஆரோக்கியமானதா?

1445

unnamedபால்வினை நோய்கள் வராமல் தடுக்கும் வழிகள் யாவை?

1. முன்பின் அறிமுகம் இல்லாதவருடன் உடலுறவில் ஈடுபடும் பொழுதெல்லாம் கருத்தடை உறை (நிரோத் – Condoms ) பயன்படுத்த வேண்டும்.

2. உடலுறவு முடிந்தவுடனேயே சிறுநீர் கழித்து விடுவது நல்லது.

3. மலவாயில் உடலுறவு கொள்வது பல்வேறு நோய்களை உருவாக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

4. பொதுவாக உடலுறவுக்குப் பின் பாலியல் உறுப்புகளை நீரினால் சுத்தம் செய்வது நல்லது.

சந்தேகங்களும் – விளக்கங்களும்

52. மாதவிலக்கின் போது உடலுறவு கொள்ளலாமா?

மாதவிலக்கு என்றால் என்ன என்று வினா எண் 14-ல், முன்பே விளக்கப்பட்டுள்ளது. அதாவது பருவமடைந்த பென் இன விருத்திக்காக அடிவயிற்றில் (அண்ட கோசத்தில்) உருவாகும் சினைமுட்டை கர்ப்பப்பைக்கு வந்து அது குறித்த காலத்திற்குள் கருவுறுதல் நடைபெறாதபொழுது இரத்தமாக பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக வெளியேறும் நிகழ்வே மாத விலக்காகும். இது குறிப்பிட்ட சில நாட்காளே (3 முதல் 5 வரை) இருக்கும்.

இந்தக் குறிப்பிட்ட சில நாட்களில் அல்லது இதற்கு முன்னும் பின்னும் சில நாட்களுக்கு பெரும்பாலான பெண்களின் மனநிலை சீராக இருப்பதில்லை. அதிக கோபம், எரிச்சல், வலியினால் உடல் நலிவு போன்ற நிலையில் இருப்பார்கள். அந்த சமயம் அவர்களுடன் உடலுறவுக்கு முயல்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.

மேற்கண்ட பிரச்சனைகள் இல்லாதபோது ஆரோக்கிய மான உடலமைப்புள்ள பெண்களுடன் மாதவிலக்குக் காலங் களில் அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு கொள்வது மருத்துவ ரீதியில் தவறு இல்லை. மருத்துவர்களின் கூற்று அப்படி யிருந்தாலும் சம்மந்தப்பட்ட பெண்ணின் மனநிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .(இது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்த விசயமாகும்.)

53. ஒரு பெண் பூப்படைந்த நாள் முதல் உடலுறவு கொள்ள ஏற்றவளாக இருப்பாளா?

ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே அவள் அன்று முதல் கருத்தரிக்க (குழந்தை பெற) தயாராகிவிட்டாள் என்றெ பொருள். எனவே பூப்படைந்தவுடன் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகத்திற்கே இடமில்லை. ஆனால் பெண்களின் வயது (ஏனெனில் தற்போது 12 அல்லது 13 வயதுகளிலேயே சில பெண்கள் இந்த நிலையை அடைந்துவிடுகிறார்கள்) உடல்நலன், சமூக நலன் போன்றவற்றைக் கருத்திற் கொண்டும், பெண்கள் குழந்தை பெறுவதை எவ்வளவு காலம் தள்ளிப்போட திட்டமிடுகிறார்களோ அது பெண்களுக்கு நல்லது. பெண்கள் தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவுடன் வாழ்ந்தால் பாராட்டுக்குரியது.

54. ஆண்களுக்கு உடலுறவின்போது விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு திரவமேதும் வெளியேறுமா?

உடலுறவின்போது இருபாலருக்கும் உயவுத் திரவம் சுரக்கும். (இந்த உயவுத்திரவம் பெண்களுக்கு உச்சக் கட்ட நேரங்களில் அதிக அளவு சுரக்கும்) உடலுறவின்போது ஆண்களுக்கு விந்து வெளியேறுவதுபோல பெண்களுக்கு எந்தத் திரவமும் வெளிவருவது இல்லை.

55. கருவுண்டான பிறகு எத்தனை மாதங்கள் வரை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்?

கருவுண்டாகி குழந்தை பெறுவதற்கு முதல் நாள் வரை உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று மருத்தவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் கருவுண்டான பெண்ணின் உடல் நிலை, மன நிலையைக் கருத்தில் கொண்டு இருவரும் கால அளவை தீர்மானித்துக் கொள்வது நல்லது.

56. பிரசவத்திற்குப்பின் எவ்வளவுகாலம் கழித்த பிறகு உடலுறவு வைத்துக்கொள்ளலாம்?

சுகப் பிரசவமாக இருந்தால் 1 மாதத்திற்குப் பிறகு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிகின்றனர். அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால் அந்த வலியிலிருந்து அவர்கள் முழுமையாக குணமடையும் வரை பொறுத்திருந்து மருத்துவரின் ஆலோசனைப்படி உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். இரத்தக்கசிவு இருக்குமானால் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக பெண்ணின் உடல், மனவலிமை மற்றும் அவர்களின் விருப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு உறவு கொள்ள வேண்டும்.

57.கருப்பையில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்வது என்றால் என்ன?

செவி உணரா ஒலி அலைகலை, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி, வளரும் குழந்தையின் நிலையைத் திரையில் காண முடியும். இதனால் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதயையும் அறிய முடியும். குழந்தையின் வளர்ச்சி அதன் செயல்பாடு இதன் மூலம் அறிய முடிகிறது. செலுத்தப்படும் ஒலி அலைகள் குறிப்பிட்ட நெறிமுறைக்கு மீறி இருப்பின் குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் நலத்தைப் பாதிக்கும். குழந்தையின் உடல் ஊனம் ஏற்பட்டு இருந்தால் ஸ்கேன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஊனமுற்ற குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்து விட முடியும். தாய் கருவுற்று இருக்கும்போது நோய்வாய்ப் பட்டால் சில சமயங்களில் அந்நோய் கருவில் உள்ள குழந்தை யையும் பாதிக்கும். இம்முறை மூலம் அதனை அறிந்து கொள்ள முடியும். அதே சமயம் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதையும் பார்த்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்யவும் இம்முறை தவறாகப் பயன் படுத்தபட்டு வருகிறது.

58. ஆணின் விந்து என்பது உடலின் முக்கியமான திரவம் என்றும், இது 40 துளி இரத்தத்தின் மூலம் 1 துளி விந்தாக மாறுகிறது என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா?

இது தவறான தகவல் ஆகும். வாயில் சுரக்கின்ற உமிழ்நீர் மற்றும் வயிற்றில் சுரக்கின்ற சில திரவங்கள் உணவை செரிப்பதற்கு உதவுகின்றது. கண்களில் உள்ள கண்ணீர், கண்ணின் நெகிழ்வுத் தன்மைக்கு உறுதுணையாக உள்ளது. இதுபோல் விந்துவும், உடலில் சுரக்கின்ற ஒரு திரவமே. இதில் உயிர் அணுக்கள் அடங்கியுள்ளன என்பதுதான் அதில் வேறுபாடு ஆகும். மற்றபடி விந்துவுக்கு வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

விந்தைச் சேமித்து தலை உச்சிக்கு எடுத்துச் சென்று யோகியாகலாம் என்றும், விந்தைச் சேமிப்பதால் உடல், வலிவு, மனவலிவு பெறலாம் என்பது போன்ற தவறான, மூடநம்பிக்கை யான கருத்துக்களை மத அடிப்படையில் சொல்லி வருகின்றனர், இது தவறு.

59. விரை (கொட்டையில்) அடிபட்டால் உயிர் போய்விடுமா?

ஆடு, மாடு போன்றவற்றின் கொட்டைகளைக் கசக்கி விடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்ய முடியாமல் செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு செய்வதால் அதற்கு உயிர் போய் விடுவது இல்லை. மாறாக தாளாத வலி மட்டும் அந்த நேரத்தில் உடலில் ஏற்படுகிறது. மனிதனுக்கு மிகவும் மென்மையான பகுதியான இப்பகுதியில் அடிபட்டால் பொறுக்க முடிவதில்லை. அந்த திடீர் வலி காரணமாக இறப்பு ஏற்படலாம். தகுந்த முதலுதவியை விரைந்து செய்வதன் மூலம் மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும்.

60. ஓரினச்சேர்க்கை என்றால் என்ன?

ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வதை ஓரினச்சேர்க்கை என்கிறோம். ஆண், ஆணோடு உடலுறவு கொள்வதை லெஸ்பியன் (டநளbயைn) என்கிறோம்.

61. மலவாயில் உடல் உறவு கொள்வது ஆரோக்கியமானதா?

இல்லை. மலவாயில் உடலுறவு கொள்வதற்கும், பெண் உறுப்பில் உடலுறவு கொள்வதற்கும் அடிபடையில் வித்தியாசம் அதிகம் உண்டு. பெண் உறுப்பில் உடலுறவு கொள்ளும்போது உயவுத் திரவங்கள் சுரக்கின்றன. எனவே உயவுத்தன்மை கிடைக்கும். மலவாயில் உடலுறவு கொண்டால் உயவுத் திரவங்கள் சுரக்காது. எனவே நெகிழ்வுத் தன்மை கிடைக்காது. மேலும் அதன் விட்டம் சிறியது, இறுக்கமானது. அதன் காரணமாக ஆணுறுப்பில் சிராய்ப்புகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட ஒருவரிடம் உள்ள நோய் மற்றவரிடம் பரவ வாய்ப்புள்ளது. இதன் மூலம் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

62. குழந்தை ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்குக் காரணம் ஆணா? பெண்ணா? பெண்களுக்கு இளவயதில் ஆண் குழந்தையும், பின்னர் பெண் குழந்தையும் பிறக்கும் என்று கூறப்படுவது சரியா?

பெண்ணின் வயதிற்கும், குழந்தை ஆணா, பெண்ணா என நிர்ணயம் செய்வதற்கும் தொடர்பே இல்லை. ஆணின் பால் குரோமோசோம்கள்தான் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கிறது.

பெண்களின் பால் குரோமோசோம்கள் என்றுமே X X அமைப்பு கொண்டது. ஆனால், ஆண்களின் குரோமோ சோம்களோ x x மற்றும் x Y அமைப்பு கொண்டது. எனவே பிறக்கும் குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்க ஒவ்வொன் றுக்கும் 50ரூ வாய்ப்புள்ளது. எனவே பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று நிர்ணயிப்பது தந்தையின் பால் குரோமோசோம்கள் மட்டுமே.

ஆணின் பால் குரோமோசோம்களில் உள்ள X பகுதி இணைந்து கருமுட்டை உருவானால், பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும். Y பகுதி இணைந்து கரு முட்டை உருவானால், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணின் வயதுக்கும், பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதற்கும் தொடர்பில்லை. இதனை கீழ்க்காணும் படம் தெளிவாக விளக்கும்.

எனவே ஆண் அல்லது பெண் குழந்தையை நிர்ண்யிப்பது ஆணே ஆகும்.பெண் அல்ல.

63. சுய இன்பம் என்றால் என்ன?

ஆணோ, பெண்ணோ தனது பாலியல் உறுப்புகளைத் தன் கையாலோ அல்லது பிற பொருட்களாலோ கிளர்ச்சியடையைச் செய்து அனுபவிக்கும் இன்பத்தையே சுய இன்பம் என்கிறோம். ஆணைப்பொருத்தமட்டில் இப்பழக்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், விந்தானது ஏதேனும் பிற வழிகளில் வெளியேறி விடும். இதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

64. சுய இன்பம் அனுபவிப்பதால் கண் பார்வை மங்கிவிடும், ஞாபகமறதி, ஆண்மை அல்லது பெண்மை அழிந்து விடும், உடம்புவற்றத் தொடங்கிவிடும், விரை வீங்கிவிடும், வாழ்க்கையே வீணாகிவிடும் என்பதெல்லாம் உண்மையா?

இவை ஒன்றுகூட உண்மையில்லை. பொதுவாக சுய இன்பம் அனுபவிப்போருக்கு அதனுடன் சார்ந்த தேவையற்ற குற்றவுணர்வு பெருகி விடும். அளவுக்கதிகமான குற்றவுணர்வு மறதி, தடுமாற்றம், உடல் நலக்குறைவு போன்றவைகளை உண்டு பண்ணும். அடுத்து உடல் உறவில் ஈடுபடும்போதும், சுய இன்பம் அனுபவிக்கும் போதும் உடம்பிலிருந்து ஆற்றல் செலவாகும். இது கால் பந்து விளையாடினாலும், ஓடினாலும் செலவாகும். ஆற்றலைப் போன்றதே. சரியான உணவு உட்கொண்டு, மனக் குழப்பமில்லாமல், குற்றவுணர்வு இல்லாமல் இருப்போரை இவையெல்லாம் ஒன்றும் செய்வதில்லை.

இந்தியாவில் சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்கள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை. அமெரிக்காவில் 99% பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். இதில் திருமணமானவர்களும் அடக்கம்.

சுய இன்பம் செய்வது 24 மணி நேரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்யலாம் எனக் கூற முடியாது. உடல் திறன் எத்தனை முறை உடலுறவு செய்ய அனுமதிக்கின்றதோ, அத்தனை முறை உடலுறவு செய்யலாம். அதுபோல்தான் சுய இன்பமும், உடல் திறனுக்கு ஏற்றவாறு செய்யலாம். நம் சமூகத்தில் சுய இன்பம் தவறானது என்ற கருத்து நிலவுகிறது. இக்கண்ணோட்டத்துடன் அநேகமான மதங்களும் பார்ப்பதால், இது குறித்த, தவறான எண்ணத்திற்கு வலு கூடி வருகிறது.

சுய இன்பம் அனுபவிப்பர்கள், தொடர்ந்து இதில் ஈடுபடு வதால் அவர்கள் உடலுறவு அனுபவிக்க இயலாத நிலைக்கோ, அல்லது பைத்திய நிலைக்கோ ஆளாகிவிடுவர் என்று கூறப் படுவதும், நிச்சயமாக தவறான கருத்தாகும்.

பாலுணர்ச்சியை அடக்க முடியாத கட்டத்திலும் ,உடலுறவுக்குத் துணை இல்லா நிலையிலும் இது ஒரு வடிகாலாக அமைகிறது. ஆனால் நிச்சயமாக பாலுறவு மட்டுமே புத்துணர்வை அளிக்கும். தமக்கு ஏற்ற ஆரோக்கியமான துணையுடன் உடல் உறவு கொள்ளுதல் இன்பமாகும்.

சுயஇன்பம் தொடர்ந்து அனுபவித்து வருபவர்கள் உடலுறவு இன்பத்தை நாடாமல், சுய இன்பத்திலேயே நாட்டம் கொண்டிருந்தால், அவசியம் அவர்கள் மருத்தவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், சுய இன்பத்தின் போது உடல் ரீதியாக உணர்வுகளைத் தூண்டி, பாலியல் பரவச நிலையை தனக்குத் தானே அடைய நேரிடுகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சி வசப்படும் நிலை, உடலியல் தேவை, அனைத்தும் ஒரு ஆண் – பெண் உடலுறவு மூலம் மட்டுமே, மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அதிகமாக பெற முடியும்.

விரை வீக்கம் என்பது ‘ஹைட்ரசில்’ எனப்படுவதாகும். இது விரைப்பையில் திரவம் தங்கி விடுவதால் ஏற்படுவதாகும். இதற்கும் சுய இன்பம் செய்வதற்கும் தொடர்பில்லை.

65. பாலுறவிற்கும், காம வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

ஒருவர் உயிர் வாழ உணவு தேவைப்படுகிறது. தன் தேவையை உணர்ந்து போதுமான அளவு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டு வாழ்பவர் மகிழ்ச்சியுடன் நோய் இல்லாமல் இருப்பர். ஆனால் பசியில்லாத போதும் உணவை உண்பவருக்கு நோய்கள் வருவது உண்மை. இந்த உண்மை பாலியலுக்கும் பொருந்தும். தன் உடலுக்கும், உள்ளத்திற்கும் உடல் உறவு தேவையாக இருப்பதை உணர்ந்து, அதைத் தேவையான வேளைகளில் அனுபவிக்க வேண்டும். அவ்வாறு உள்ளோருக்கு மன மகிழ்ச்சியும், மன அமைதியும் அமையும். அப்படியில்லாமல், காண்போரை எல்லாம் புணரத்துடிப்பது காமவெறி ஆகும். இது மேலும் மேலும், வக்கிர உணர்வைத் தூண்டி மனிதனையும், சமூகத்தையும் அழிக்கும். இத்தகைய காமவெறி, உடல் மற்றும் மன வியாதிகளை ஏற்படுத்துவதோடு, முழுமையான பாலியல் உடல் உறவு இன்பத்தையும் அடையச் செய்யாது.

66.காம வெறியால் ஏற்படும் சிக்கல்கள் யாவை?

காமவெறியோடு இருப்பவர்கள் பொதுவாக மன அமைதி இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் எந்நேரமும் உடலுறவு பற்றிய சிந்தனையில் இருப்பார்கள், அவதிப்படுவார்கள். இதனால் இயல்பான உடல் வியாதிகள் அவர்களுக்கு உண்டாகின்றன. காம வெறியின் காரணமாக, இவர்கள் விபச்சார பெண்களுடனோ, வியாதியுள்ள பெண்களுடனோ உறவு கொண்டால், பாலியல் வியாதிகள் வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் பொதுவாகவே சமுதாயத்தாலும், வீட்டிலுள்ளவர்களாலும் எதற்கும் உபயோக மற்றவர்கள் என்று ஒதுக்கப்படுபவர்கள். இதனால் இவர்கள் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மனப்பாதிப்பு அடைந்த இவர்கள் குழைந்தைகளைக்கூட உடல் உறவுக்குக் கட்டாயப் படுத்திப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள். இப்படிப் பட்டவர்கள் மனவியாதி பிடித்தவர்கள் என்பதால் அவசியம் மருத்தவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

67. பெண்களின் கால்களில் அல்லது கைகளில் அல்லது முகத்தில் நிறைய முடி வளர்ந்திருந்தால் (ஆண்களுக்கு மார்பு, மீசை, தாடி, ஆகியவற்றிலும் முடி அதிகம் வளர்ந்து இருந்தாலும்) அத்தகைய வர்கள் பாலுணர்வு அதிகம் உள்ளவர்கள் என்பது உண்மையா?

பொதுவாக பெண்களுக்கு, கால்கள், கைகள், முகம் பொன்ற இடங்களில் அதிகமாக முடி வளர வாய்ப்பு இல்லை. ழஐசுருகூஐளுஆ-என்கிற நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளால் ஆஹடுநு ழடீசுஆடீசூநுளு அதிகமாக சுரப்பதால் அதிக முடி உடலில் வளர்கிறது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், முடி வளர்வதற்கும், பாலுணர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வகையில் பெண்கள் மீசை, தாடி, கை, கால்களில் அதிகமாக முடி வளர்வதை தடுக்க தகுந்த மருத்துவரை அணுகி குணப்படுத்திக் கொள்ளலாம்.

68. எத்தனை வயது வரை பாலுறவில் ஈடுபடலாம்?

பாலுறவில் ஈடுபட வயது வரம்பு இல்லை. பாலியல் பருவம் தொடங்கி மனிதன் மரணம் அடையும் வரையுலும் உடலுறவில் ஈடுபடலாம். அதற்கான உடல் நலனும், மனநிலையும் அமைதல் வேண்டும். நல்ல உணவும், தேவையான பாலுறவும் தொடர்ந்து கிடைத்தால் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

69 கருப்பையை நீக்கிய பிறகு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்குமா?

கருப்பை நீக்கிய பிறகும் உடலுறவில் பெண்களுக்கு நாட்டம் இருக்கும். கர்ப்பை என்பது குழந்தை (கரு) தோன்றி வளர்ச்சியடையக் கூடிய உறுப்பு ஆகும். எனவே குழந்தை (கரு) உண்டாவது மட்டுமே இதனால் தடை செய்யப்படுகிறது. இதனால் உடலுறவில் நாட்டம் பாதிக்கப்படாது. ஏனென்றால் பாலுணர்வை தூண்டும் உணர்வு நரம்புகள் பெண்குறியில் இருக்கின்றன. அவை பாலுணர்வை எப்போதும்போல் தூண்டச் செய்கின்றது. கருப்பைக்கும் பாலுணர்விற்கும் தொடர்பு இல்லை.

70. மாத விலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்குமா?

மாத விலக்கு நின்ற பிறகும் பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்கும். பெண்களுக்கு பொதுவாக 45 வயதையொட்டி மாத விலக்கு நின்று விடும். பல பெண்கள் இதற்குப் பின் உடலுறவு கொள்வது தவறு, பாவம் என்று நினைக்கிறார்கள். இத்துடன் தங்கள் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன், தாம் உடலுறவு கொள்வது தவறு என்றும் நினைத்து உடலுறவை நிறுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலோர் தங்களை ஆழ்ந்த கடவுள் பக்தைகளாகக் காட்டி கோயில் குளங்களுக்குச் செல்வது, உணர்ச்சி வசப்படுவது, கோபப்படுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மாதவிலக்கு நின்ற பிறகும் பெண்கள் உடலுறவு கொள்வது இயற்கையானது.

71. ஆண்கள் கருத்தடை சாதனங்களுடன் உறவு கொள்வது அவர்களுக்கு முழு இன்பம் அளிக்குமா ?

கருத்தடை சாதனங்கள் இயற்கையாக உடலுறவு கொண்டு இன்பம் அனுபவிக்க சிறு தடையாகவே இருக்கின்றன. அதன் காரணமாக முழு இன்பம் அடைவது இயலாததுதான். ஆனாலும், இன்று பரவி வரும் மக்கள் தொகை மற்றும் நோய் போன்ற காரணங்களை கருத்தில் கொள்ளும் போது கருத்தடை சாதனங்கள் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன.

72 .பாலியல் இன்பத்தில் முழுத் திருப்தி அடைய பலருடன் உடல் உறவு கொள்ளுவது அவசியம் உண்டா?

உடலுறவு கொள்வோர் முதலில் அவர்களைப் பற்றிய வீணான பயம், சந்தேகம் இவற்றை அகற்ற வேண்டும். ஒருவரை யொருவர் முழுவதுமாக (பாலியல் தேவைகள் உள்ளிட்டு) புரிந்து கொள்ளவேண்டும். மேற்சொன்ன புரிதலின்றி (ரனேநசளவயனேiபே) பலருடன் உறவு வைத்துக் கொண்டாலும், யாரும் முழுத் திருப்தியை அடைய முடியாது. எனவே பாலியல் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே பலருடன் உடலுறவு கொள்ள அலைவது பாலியலில் முழு திருப்தி அடையாததற்க்கான அடையாளம் ஆகும்.

73. உடலுறவின் போது முதலில் இன்பத்தை அடைவது ஆணா? பெண்ணா?

இயற்கையாக, உடலுறவு உச்ச இன்பம் ஆணுக்கு விரைவிலும், பெண்ணுக்குச் சற்றுத் தாமதமாகவும் ஏற்படும். இருவருக்கும் ஒரே சமயத்தில் உச்ச இன்பம் ஏற்படுவதற்க்கு இருவரின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலோடு கூடிய பரிமாற்றம் அவசியம் ஆகும்.

74. உடலுறவிற்கு (ஆண்,பெண் இருவருக்கும்) சரியான வயது எது ?

ஆண்-பெண் இருபாலரும், வயதுக்கு வந்த பிறகு உடற்கூறு ரீதியில் உடலுறவு கொள்ளத் தயாராகிறரர்கள். ஆனால், உடல் உறவில் பாலியல் இன்பம் பெறுவதற்கு ஏற்ற உடலியல் ரீதியான வளர்ச்சி அவசியம். எனவே பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் சுமார் 22 வயது இருத்தல் நலம்.

75. பெண் – ஆண் ஒருவரை ஒருவர் வசப்படுத்த முத்தம் எங்கு கொடுக்க வேண்டும் ?

யாரும் யாரையும் வசப்படுத்த முடியாது. வேண்டுமானால் அன்பு கொள்ளச் செய்யலாம். அதற்கு ஒவ்வொருவரின் தனிப் பட்ட, சரியான உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதாலேயே அன்பு கொள்ளச் செய்யமுடியும். குறிப்பாகப் பெண், ஆண் மீது ஈடுபாடு கொள்ள அவளது சுயமரியாதை உணர்வை மதித்தாலே போதும். பழகிவிட்டால், சம்மதம் அளித்தால், விரும்பும் இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளலாம்.

76. உடல் உறவிற்க்கு குளிர் காலம் – கோடை காலம் ஏற்றது எது ?

உடலுக்கு கோடையில் குளிர்விக்கும் தன்மையும், குளிர் காலத்தில் உடல் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மையும் இயற்கையாக உண்டு. எனவே உடல் உறவிற்கு ஏற்றது கோடை காலமா? குளிர் காலமா? என்பதை முடிவு செய்ய முடியாது. இது சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலையைப் பொறுத்தது.

77. பகலில் அல்லது இரவில் எந்த நேரத்தில் உடல் உறவு கொள்ளலாம்?

கூச்சம் போன்ற காரணங்களினால் மனம் பாதிக்கப் படாமல் இரு பாலருக்கும் இருக்கும் நிலை இருந்தால், பகல் இரவு இரு நேரங்களிலுமே உடலுறவு கொள்ளலாம். இரவில் அதிக இன்பம் என்றோ, பகலில் குறைந்த இன்பம் என்றோ எதுவும் கிடையாது. உடலுறவிற்கு பொதுவாக இரவு நேரம் ஏற்றது. ஏனென்றால் அது

1. அமைதியான நேரம் 2. தனிமையான சூழ்நிலை (யாரும் வர மாட்டார்கள். அதனால் யாருடைய தொந்தரவும் இருக்காது.), இருவருக்குமே, அது ஓய்வான நேரம். இது போன்ற காரணங் களால் இரவு நேரம் நல்லது. இருவரும் உடல் உறவு கொள்ளும் மனநிலை வந்து விட்டால் காலம், நேரம் எதுவும் கிடையாது.

78. ஒரு வாரத்தில் அல்லது ஒரே நாளில் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்?

இத்தனை முறை என்று எதுவும் கிடையாது. சம்மந்தப்பட்ட இருவரின் உடல் நிலை, மனநிலை, அவர்களின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து உடலுறவு கொள்ளலாம்.

79. உடல் உறவுக்கு குண்டான ஆண் / பெண் ஏற்றவரா? ஒல்லியான ஆண் / பெண் ஏற்றவரா?

குண்டான ஆண் / பெண், ஒல்லியான ஆண் / பெண் என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

1. உடலின் சேமிப்பாற்றல் அதிகமாகி, செலவாற்றல் குறையும்போது, உடல் குண்டாகலாம்.

2. தேவைக்கதிகமான உடல் பருமனாகும்படியான உணவை உட்கொள்ளுவதால் உடல் குண்டாகலம்.

3. உடலின் தேவையான ஆற்றலுக்கும், குறைவான உணவை எடுத்துக்கொள்ளும் போதும், உடலின் சேமிப்பாற்றல் குறைந்து, செலவாற்றல் அதிகமாகும் போதும் உடல் ஒல்லியாக இருக்கும். (இதற்கும் உடலுறவிற்கும் தொடர்பு இல்லை. உடலுறவு என்பது முழுக்க முழுக்க அவரவர் மனம் சம்மந்தப்பட்டதாகும்.)

80. அதிக நேரம் உடல் உறவில் நீடிக்க என்ன வழி?

பொதுவாக உடல் உறவில் ஆண் குறியில் இருந்து விந்து வெளிவரும் நேரம் பின்வரும் காரணங்களைப் பொறுத்தது.

1. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உடலுறவு கொள்ளும்போது முதல் முறையில் விந்து வெகு சீக்கிரமாகும். அதற்கு அடுத்த முறைகளில் நேரம் கழித்தும் வெளிவரும்.

2. குறுகிய கால இடைவெளியில் உடல் உறவு கொள்ளும் போது நேரம் கழித்தும், நீண்ட இடைவெளிக்கு பின் உடல் உறவு கொள்ளும்போது, சற்று விரைவாகவும் விந்து வரும்.

3. பரபரப்பு, அச்சத்துடன் உடல் உறவு கொள்ளும்போது விரைந்து விந்து வரும். இவையின்றித் தகுந்த அமைதியான சூழலில் நேரம் கழித்து வெளிவரும். உடலுறவின்போது உடனே விந்து வெளிப்பட்டாலோ, ஆண் குறி விரைப்புத் தன்மை குறைந்தாலோ நல்ல மருத்துவரை அணுக வேண்டும். போலி மருத்துவரைத் தவிர்க்க வேண்டும்.

81. மது அருந்திவிட்டு, அபின், பாக்கு மற்றும் போதைப் பொருட்கள் சாப்பிட்டு விட்டு உடலுறவு கொள்வதால் உறவு நேரம் நீடிக்கும் என்பது உண்மையா?

இவைகளினால் உறவு நேரம் நீடிக்கும் என்பது சரியன்று. மது, அபின், பாக்கு பொன்ற பொருட்களினால் உடலுக்கு கேடு ஏற்படும். அதன் காரணமாக நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் வர வாய்ப்பு அதிகம். அது மட்டும் அல்லாது உடலுறவில் ‘உறவு நேரம்’ நீடித்தலை விட மனதிருப்தியை பெறுவதே முக்கியம். மனத்திருப்திக்கு உறவு நேரம் நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எனவே உடலுக்கு விரோதமான பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை மனதில் கொண்டு அவற்றை தவிர்த்தலே நலம்.

82. நீலப்படங்களில் காணும் முறைகளில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? இது உடலுக்கு தீங்கா?

நீலப்படங்களில் வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களைப் போல் பல்வேறு முறைகளில் உடலுறவுக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில காட்சிகள் சர்க்கஸ் வேலை போன்றும் காட்டப்படும். மலவாய் உடல் உறவு போன்றவை களில் நோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

83. உடல் உறவினாலும், சுய இன்பத்தினாலும் இதயம் பாதிக்கப்படும் அல்லது பலவீனப்படும் என்பது உண்மையா?

இது உண்மையல்ல. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், சுய இன்பம், கனவு, ஒரு பால் உறவு போன்ற ஏதோ ஒரு வழியில் விந்து வெளியேறிவிடும். இதனால் இதயம் பாதிக்காது. மேற்குறித்த காரணங்களினால் குற்ற உணர்வு ஒருவர்க்கு ஏற்படுமானால் மனநிலை பாதிக்கப்படலாம்

84. திருநங்கை என்பவர் யார்?

திருநங்கை எனப்படுபவர்கள் இரு வகைப்படுவர்.

1. உண்மை திருநங்கை:- இவருக்கு ஆணுடைய கொட்டையும், பெண்ணுடைய கோசமும் (ovary) இருக்கும். ஆணா?, பெண்ணா? என்று சொல்லமுடியாத இவர்களை ஹோமோ என்பர்.

2 .திருநங்கையாக மாறியவர் :- இவர்கள் ஆணாகப் பிறந்து வளர்வார்கள். வளரும்போது ஏற்படும் மனக் கோளாறுகளாலும், சேர்க்கையாலும் தன் பிறப்பு உறுப்பை முற்றிலும் வெட்டிக் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் ஹிஜ்ரா எனப்படுவர். நம் சமூகத்தில் பார்க்கும் புடவை கட்டிய ஆண் குரலில் பேசும் அனைவரும் இந்த ரகத்தினரே.

இவ்வாறு பாலினம் மாற்றிக் கொள்பவர்களை மனோ தத்துவச் (உளவியல்) சிகிச்சையின் மூலம் மீண்டும் முந்தைய பாலினமாக மாற்றி விடலாம். சிலரை ஹார்மோன் (தாது) மருத்துவம் மூலம் மாற்றிவிட முடியும். இவர்களைக் கண்டால் வெறுத்து ஒதுக்காமலும், கேலி செய்யாமலும் இருக்க வேண்டும்.

85. திருநங்கைகள் எப்படித் தங்கள் உடல் உறவுக்கு வழிவைத்து உள்ளார்கள்?

1. ஆண்களின் உறுப்பை தமது வாயில் வைத்து உறிஞ்சி (சப்புதல்) மூலமும்

2. ஆண்களின் உறுப்பை தமது கைகளால் கிளர்ச்சியூட்டி விந்தை வெளிவரச் செய்தல் மூலமும்.

3. ஆண் உறுப்பைத் தங்கள் மலவாயில் செலுத்தச் செய்தல்.

இவ்வகையில் உடல் உறவுத் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார்கள்.

86. மலம் கழிக்கும் முன்பும்-பின்பும், ஆண் குறியிலிருந்து விந்து வெளிவருமா? அப்படி வெளியேறுவதாக சிலர் கூறுகின்றனரே, அது உண்மையா?

பல ஆண்கள் மலம் கழிக்கும்போது தங்களது சிறுநீருடன் விந்து வெளியேறுவதாகவும் அதனால் தாங்கள் ஆண்மை இழந்து போகக் கூடும் என நினைத்து அஞ்சுகின்றனர்.

உடலியக்கம் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற அய்யம் தான் இது. முதன் முதலில் விந்தும். சிறுநீரும் ஒரே நேரத்தில் வெளிவர முடியாது என்ற அடிப்படை உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உடலுறவின் போதே அல்லது மற்ற நேரங்களிலோ விந்து வெளியேறும்போது சிறுநீர்ப்பையின் கழுத்து எனப்படும் (Bladder Neck) சிறுநீர்ப்பாதை தானே மூடிக் கொள்கிறது. விந்து முழுவதும் வெளியேறிய பிறகே இது திறக்கிறது.

சிற்சில வேளைகளில் சிறுநீருடன் சேர்ந்து பசை போன்ற ஒரு வெள்ளைத் திரவம் வரக்கூடும். இது விந்து அல்ல புராஸ்டேட் (ஞசடிளவயவந) சுரப்பி மற்றும் நீர்த்தாரையிலுள்ள சுரப்பி களின் (ருசநவாசயட ழுடயனேள) சுரப்பே ஆகும். நன்கு முனைந்து, முக்கி மலங்கழிக்கும்போது மலக்குடலின் விரிவு அழுத்தத்தால் புராஸ்டேட்டும், நீர்த்தாரை சுரப்பிகளும் அழுத்தப்பெற்று அதன் விளைவாக மேற்சொன்ன சுரப்பிகளில் இருந்து சில சொட்டுகள் வெண்மையான திரவம் வெளிவரக்கூடும். இதனால் விந்து இழப்போ, ஆண்மைக்குறைவோ ஏற்பட வழியில்லை.

87. முகப்பரு உண்டாகக் காரணம் என்ன?

பரு என்பது பருவத்தில் வருவது. உடலில் உள்ள நாள மில்லா சுரப்பிகள் இரத்ததின் மூலம் தோல் பகுதிக்கு வருவதால் அந்த தோலின் பிற சுரப்பிகள் சற்று அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும். பரு முகத்தில் மட்டும் வருவதில்லை. முதுகு புறத்திலும் வரலாம்.

சாதாரணமாக சிகிச்சை எதுவும் இல்லாமலேயே இவைகள் சிறிது காலத்தில் மறைந்து விடும். சிலருக்கு அதிகமாக, நீண்ட காலமாக இருந்தால் தோல் நோய் நிபுணரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

88. முன், பின் அறிமுகமாகாத இருவரும் (ஆண்,பெண்) முதலிரவிலேயே உடல் உறவு வைத்துக் கொள்ளலாமா?

1. இன்றைய சமூக அமைப்பில் பெரும்பாலும் பெற்றோர் களால் தெரிவு செய்யப்பட்ட திருமணங்களே நடைபெறுகின்றன. இதில் திருமணம் நடந்த அன்று இரவே முதல் இரவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுவிடுவதால் முன்பின் அறிமுகமில்லாதவர் களிடையே நடைபெறும் பாலுறவில் சிக்கல்கள் உருவாகி அதுவே முற்றி விவாகரத்து வரை சென்று விட்டதும் உண்டு. எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் பேசிப்பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு உடல் உறவு கொள்வது நல்லது.

2. இருவரும் பேசிப்பழகுவது மூலம் அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுவது அவசியம். அதன்பின் உடல் உறவு கொள்ளலாம். அன்றேதான் உடல் உறவுகொள்ள வேண்டும் என்றோ, 1 மாதமோ, 1 வருடமோ கழித்துதான் உடல் உறவு கொள்ள வேண்டும் என்றோ நிபந்தனை எதுவும் கிடையாது.

3. முதல் உடலுறவின்போது ஆண் குறியிலும், பெண் குறியிலும் ஏற்படும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு உடலுறவில் ஈடுபடலாம்.

4. மேலும் தனக்கு தகுந்த வாழ்க்கைத் துணையை அவரவர் (ஆண்,பெண்), நன்கு அறிந்து, தானே தெரிவு செய்வது நல்லது. பெற்றோர்கள் இதற்கு உதவினால் மட்டுமே போதுமானது.

89. வயதான காலத்தில் பெற்றோரை பராமரிக்க குழந்தைகள் தேவையா?

வயதான காலத்தில் குழந்தைகள் பராமரிப்பில் தாம் வாழக்கூடும் என்கிற காரணத்திற்காகத்தான் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறோம் என்று பல பெற்றோர்கள் சொல் கிறார்கள். பழங்காலத்தில் இக்கூற்று ஓரளவு சரியானதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் தற்காலத்தில் சில வயதான பெற்றோர்கள் தங்கள் தேவைகள் நிறைவாவதுடன் திருப்தி கொள்வதில்லை.

தமது பிள்ளைகளின் குடும்பம் சம்மந்தப்பட்ட காரியங் களில் மூக்கை நுழைத்து குடும்பச் சூழலைக் கெடுக்கும் நிலை உண்டு. பெற்றோர்கள் தம்முடன் இருப்பதை சுமையாக நினைக்கிற பிள்ளைகள், அவர்களை முதியோர் இல்லத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கும் நிலையும் உண்டு. முதியோர் இல்லம் தாமாகவே தேடிச் செல்லும் வயதான பெற்றோர்களும் உண்டு. வீட்டை விட்டு துரத்தப்பட்டு முதியோர் இல்லம் தேடிச் செல்லும் பெற்றோர்களும் உண்டு.

வாழ்க்கையில் ஒத்துப்போக இயலாத யாரும் நாகரீகமான முறையில் பிரிந்து கொள்வதே இருவருக்கும் நல்லது எனவே முதியோர் இல்லங்கள் சமூகத் தேவையாக மாறி வருகின்றன. அதேபோல் வயதான காலத்தில் குழந்தைகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று கருதி குழந்தைகளை பெற்றுக் கொள்வதாவது இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் தோல்வி யான செயல் ஆகும்.