Home குழந்தை நலம் வெள்ளைப் பூடு குழந்தைகளுக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

வெள்ளைப் பூடு குழந்தைகளுக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

67

குழந்தைகள் ஆரோக்கியம்:குழந்தைகளிற்கு நோய்கள் ஏற்பட்டு விட்டால் உடனடியாக வாஅங்கி வைத்திருக்கும் மருந்துகளையே பெற்றோர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக அண்டிபயோட்டிக். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இதற்கு பதிலாக தினமும் அவர்களது உணவில் மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளைப் பூண்டினைச் சேர்த்துக் கொள்வதனால் பல நோய்களைக் குணப்படுத்தலாம்.

வெள்ளைப் பூடு சாப்பிடுவதனால் குழந்தைகளிற்கு கிடைக்கும் நன்மைகள் சில:

1. காது வலியைக் குணப்படுத்தும்.
வெள்ளைப் பூண்டு வைரஸ் மற்றும் பங்கஸ் தொற்றுக்களில் இருந்து தீர்வைத் தரும். காது வலி ஏற்படும் போது பூண்டு எண்ணெய்யுடன் ஒலிவ் எண்ணெய் சேர்த்து சில துளிகள் காதில் விடுவதனால் காது வலி உடனடியாக நீங்கும்.

2. சிறுகுடல் பிரச்சினைகளைத் தீர்க்கும்.
சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிடும் உணாவு தொற்றுக்களை ஏற்படுத்தி விடும். இதனால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இதற்கு உணவில் பூண்டினை சேர்த்துக் கொள்வதனால் சிறுகுடலில் ஏற்படும் பக்டீரியாத் தொற்றுக்களை நீக்கி சிறுகுடலில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்தும்.

3. அழுத்தத்தைக் குணப்படுத்தும்.
குழந்தைகளிற்கு அழுத்தங்கள் ஏற்படுவது என்பது சாதாரணமாகிவிட்டது. வெள்ளைப் பூண்டில் உள்ள அலசின் இரத்த நரம்புகளாஇ ஆறுதல் படுத்தி இரத்த அழுத்தத்தில் இருந்து தீர்வைத் தருகிறாது.

4. சுவாசத் தொகுதியின் ஆரோக்கியத்தைப் பேணும் .
இருமல் என்பது குழந்தைகளிற்கு பொதுவாக ஏற்படக் கூடியது. இதனை குணப்படுத்துவதற்கு வெள்ளைப் பூடு சிறந்தது. குறைந்தது இரண்டு பூண்டினை நசுக்கி பச்சையாக உட்கொள்ள கொடுப்பது சிறந்தது.

5. கண் தொற்றைக் குணப்படுத்தும்.
கண் நோய்கள் சிறுவர்களிற்கு ஏற்பட்டால், அந்த தொற்றுக்கள் பரவ ஆரம்பிப்பதுடன், சிவந்து, வீக்கமடைந்து விடும். வெள்ளை பூண்டில் விட்டமின் சி, செலினியம், கியூரசட்டின் இருப்பதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி கண்களிற்கு பயன்படுத்துவது சிறந்தது.

6. தோல் நோயைக் குணப்படுத்தும்.
தோலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதுடன், பக்டீரியா தொற்றுக்களையும் நீக்கும். இதனால் சரும நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
7. ஆஸ்துமாவைக் குணப்படுத்தும்.
இன்று பல குழந்தைகள் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அவித்த பூண்டினை பாலில் கலந்து தினமும் தூங்குவதற்கு முன் குடிப்பது சிறந்தது.

8. சமிபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
தினமும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வதனால் சிறுகுடல், பெருங்குடலின் செயற்பாட்டை சீராக்கி, சமிபாட்டைத் துரிதப்படுத்தும். மேலும் சமிபாட்டுக் குழாய்களில் ஏற்படும் வீக்கம், வலிகளையும் குணப்படுத்தும்.

9. காயங்களின் தொற்றுக்களை நீக்கும்.
காயங்களில் உள்ள தொற்றுக்களை நீக்கவில்லை என்றால் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு வெள்ளைப் பூடை சாறாக்கி அதில் சிறிதளவு நீரைக் கலந்து அதனை காயங்களின் மீது பூசுவதனால் தொற்றுக்களை அழிக்க முடியும்.

குழந்தைகளிற்கு வெள்ளைப் பூடின் சுவையை விரும்பவில்லையென்றாலும், அதன் மருத்துவ குணங்களால் அதனை தினமும் உணவில் தேவையான அளவு சேர்த்துக் கொள்வது அவசியமானது.