Home காமசூத்ரா முதலிரவு திகில் இரவா?

முதலிரவு திகில் இரவா?

40

தாம்பத்ய உறவின் முதல் ‘அப்ரோச்’ என்பது முதல் அத்தியாயத்தின் முகவுரை. அது எது? முதல் சந்திப்பு அரங்கேறும் முதல் இரவு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுவே காதல் தம்பதிகளாக இருந்தால், தாம்பத்ய உறவுக்கு முதல் கட்டம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், காதலர்கள் அதுவரை பொறுத்துக் கொள்வார்களா? . உடல் சங்கமத்தின் முதல்படியில் ஏறும் போதே சறுக்கல் எதுவும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மிககவனம் தேவை. மனத்தடுமாற்றம், ஏமாற்றம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை சுமந்து கொண்டு முதல் இரவு அறைக்குள் நுழைந்தால் வேதனை தான் மிஞ்சும்.

எத்தனையோ பேர் வாழ்க்கையில் விதி விளையாடி பலரை வேதனைத் தீயில் தள்ளியுள்ளது. எனக்கு அழகான மனைவி கிடைக்கவில்லை. மனைவியுடைய அணுகுமுறையே சரியில்லை. செக்ஸ் விஷயத்தில் ஒண்ணுமே தெரியவில்லை என்ற ஆதங்கமான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் சுமத்துவதுண்டு.

# நாள், நட்சத்திரம் என ஏதேதோ காரணங்களுக்காக சிலரது முதலிரவுகள் திருமண மண்டபத்திலேயே வைக்கப்படுவதுண்டு. ஆனால் புதுமண தம்பதியருக்கு இது பெரும்பாலும் தர்மசங்கட உணர்வையே ஏற்படுத்தும். அத்தனை பேர் சூழ்ந்திருக்க அவர்களால் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஒருவித பயமும், டென்ஷனுமே மிஞ்சும். எனவே புது மண தம்பதியரின் பெற்றோர், ஏதேனும் ஹோட்டல்களில் அதற்கு ஏற்பாடு செய்யலாம். தம்பதியருக்கும் புது அனுபவமாக அமையும்.

ஏழைக்கு முதலிரவு! உருவத்துக்குள் உயிரும் உயிருக்குள் உருவமுமாய் உருவாக்கம் பெறப்போகும் ஆன்மாவுக்காக, ஓரங்கள் கிழிந்த பாயில் வாழ்க்கையின் வடுக்களால் வயிறு நலிந்த தலையணையில், ஒரு தலையணையில்… இருதலைகள்!  வழுக்கி வாழ்க்கைக்குள் விழுந்துவிடத்துடிக்கும் ஜீவ ராகங்கள்  கிழிந்த பாயின் சரசரப்பில் வெளியில் சலனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவோ என்னவோ  வெட்கத்துக்குள் வெட்கத்தை மூடிக்கொள்ளும் ஒரு ஜீவன் வெட்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத்துடிக்கும் மறு ஜீவன்  அன்புக்கு மட்டும் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பூஜை அறையில் ஆணும் பெண்ணுமாய் அர்த்தம் தேடத்துடிக்கும் துடிப்பு,  வறுமை கொடுத்த அவசரத்தால் இளமையில் அந்தரங்கத்தை இடுக்குகளில் தேடியெடுக்கும் பண்பட்டுப்போன இரு தேடல்கள்  வரையவும் எழுதவும் வரையறை இல்லாத அந்தப்பொழுதிலும் வரையறுக்கச்சொல்லும் ஏக்கம்  உணர்ச்சிகளின் ஒவ்வொரு துள்ளல்களும், மௌனமாகி வெளியேறுகின்ற மாயம்  இனிப்பான வாழ்க்கையிலும் இதமதேட முடியாமல் வெப்பமேறும் விரகப் பொழுதுகளாய்…  முடியாது!  “மூன்றாவது ஜீவனுக்கு இப்போதுஇடம்”  எனும் ஒரு குரலுக்குள்,  வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்துவிடும் ஆதங்கத்தில்  “முடியும்”  என்ற மறுகுரல் முதலிரவை முத்தாக்குகின்றது.  முழுமை பெறுகின்றது வெளிச்சம்கள் வெளிவருகையில்.  –துவாரகை–  தங்களது மனதில் எழுந்த ஆசைகளை மாயக்கண்ணாடியில் தெரிந்து கொண்டு நடக்கவேண்டும் என்பது ஆண், பெண் இருபாலரின் ஒருமித்தமான கருத்து. ஆனால், சில ஆசைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட செயலில் காட்ட முனைவது மனித இயல்பு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் ஆணோ, பெண்ணோ இருக்க வேண்டும்.  இது நடைமுறை சாத்தியமா? என்றால், இல்லை. இதையெல்லாம் சொல்லி கொடுக்கனுமா? அந்தந்த வயதில் தெரிந்து கொள்ளட்டும் என்று முந்தைய கால பெரிசுகள் சொல்வதுண்டு. உடல் உணர்ச்சிகளை பண்பாட்டுக்கு உட்பட்டு பகிர்ந்து கொள்வதில் சில நெறிமுறைகளை, அனுபவம் முலம் தெரிந்து கொண்டவற்றை அவர்கள் தங்களது சந்ததியினருக்கு சொல்லி கொடுத்தால்தான் பல பிரச்னைகள் எழாது. பெரியவர்கள் அனுபவ பாடத்தை சொல்லாமல் விட்டுவிட்டால், நண்பர்களின் தவறான ஆலோசனையை கேட்டுவிட்டு செயலில் இறங்கி தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.  # முதல் முறை உறவு கொள்ளும்போது இருவருக்குமே மனத்தளவில் நிறைய கேள்விகள் இருக்கும். அதனால் உறவு முழுமையடையாமல் போகலாம். அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் அது தானாக சரியாகி விடும். முதலிரவு  முதலிரவு என்றதால் நெஞ்சில் படபடப்பு; கொஞ்சம் பரபரப்பு.  எத்தனையோ பாதிநாட்களை படுக்கையில் கழித்த எனக்கு, அன்று ஏனோ அரை அவுன்ஸ் ஏக்கம் மனதில் மகுடி வாசித்தது.  விளக்கணைத்து -இருளின் விரல் பிடித்து ஏதோ போருக்கு போவது போல போர்வைக்குள் போனேன்.  சாய்ந்த மாத்திரத்திலேயே காதுக்குள் அவள் சொன்ன சிருங்கார மொழியும் சிக்கன சிணுங்கலும் புரியாமல் தலையசைத்தேன்.  ஓயாத அவள் பசிக்கு ஓவ்வாத ஜென்மமாக சுருண்டு விட்டேன்.  ஆனால், அவளோ விடவில்லை.  போர்வைக்குள் நீச்சலடித்தேன்; கைகளோ படபடத்தன; கால்களோ துடிதுடித்தன; என் கை நகங்களே என்னை பிராண்டின.  முடிந்தளவு போராட்டம் விடிய விடிய நடந்தது.  போரின் உச்சத்தில் போர்வையே கிழிந்தும்விட்டது.  காலையில் பார்த்தபோது ஓரத்தில் சிறு ரத்தக்கறை.  என்னவிரசமான வர்ணனையா?  வெளிநாடொன்றில், நான் கழித்த முதலிரவில், எனையழித்த *நுளம்பின் தொல்லையை இதற்கு மேல் எப்படி சொல்ல?

அன்றயதினத்தில் இருவருக்குமே ஒய்வு தேவை. மன ஒற்றுமைக்காக சில விஷயங்களைப் பேசிக் விட்டு புதுமாப்பிள்ளை, பெண்ணும் உடலுக்கு ஒய்வு கொடுப்பது மிகவும் நல்லது. மனைவிக்கு ஆசைகள் அதிகமாக இருந்துவிட்டு, கணவன் ஒதுங்கிக் கொண்டாலோ, கணவன் அவசரப்பட்டு, மனைவி ஒதுங்கினாலோ ஒருவித வேதனை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும்.

அதாவது எதிர்பார்ப்பு ஏற்பட்டவருக்கு ஏமாற்றம். அதனால் தப்பு இல்லை. பரீட்சை எழுதும் முன்பு எப்படி பாடங்களை படித்துக் கொண்டு தயாராகிறோமா? அப்படிதான் முதலிரவு அறைக்குள் நுழையும் போது மனத்தெளிவு, ஒரு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். செக்ஸ் தானே என்று அலட்சியமாக இருந்துவிட்டு உங்களது ஆசைகளை நிறைவேற்ற முனைந்தால் உங்களது எதிர்பார்ப்புகள் தோற்றுப் போகும். இது எத்தனையோ தம்பதிகள் வாழ்க்கையில் நடந்துள்ளது. முதலிரவு சம்பவங்களை பலர் தங்களது வாழ்க்கையில் நினைத்து பார்ப்பதுண்டு. பலருக்கு இனிமையான நினைவுகளாக இருக்கும். பலருக்கு வேதனையாக இருக்கும். அன்றயதினம் மனதில் ஏற்பட்ட காயம் ஆறாமல் உறுத்திக் கொண்டே இருக்கும். அதற்கு நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ உண்மையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் கணவனும் மனைவியும் ஒருவரி ஒருவர் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.