Home பெண்கள் தாய்மை நலம் நீங்கள் இளம் தாயா? முதல் முறையாக கர்ப்பமா? இது உங்களுக்கு தான்

நீங்கள் இளம் தாயா? முதல் முறையாக கர்ப்பமா? இது உங்களுக்கு தான்

102

தாய் நலம்:குழந்தை ஒரு வரம் என்பது குழந்தை இல்லாமல் மன வேதனைக்கு ஆளாகும் நபர்களுக்கு மட்டுமே தெரியும். பாதுகாப்பற்ற உறவு அல்லது இச்சை, கள்ளக் காதல் காரணமாக கருக்கலைப்பு செய்வோரு பலர் இருக்கிறார்கள். இந்த உலகிலேயே பெரும் குற்றம் மற்றும் பாவ செயல் கருக்கலைப்பு தான்.

ஒருவரின் உணர்ச்சியை கொள்வதே மரணம் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால், இவ்வுலகை காண பூத்த சிசு ஒன்றை, வளரும் முன்னே கொல்வது தான் பாவங்களில் எல்லாம் பெரும் பாவம்.

கர்ப்ப காலம் என்பது பெண்களால் மட்டுமே உணர முடிந்த ஒரு சொர்க்கம். அதில் அவர்கள் அடையும் இன்பமும், வேதனையும் சரிப்பங்கு இருந்தாலும். அவர்கள், அனைத்தையும் சந்தோச நினைவுகளாக தான் சேமித்துக் கொள்கிறார்கள்.

சிசுவின் முதல் அசைவு, உதை, பிரசவத்திற்கு சில நேரம் முன்பு என தாங்கள் கர்ப்பமாக இருந்த போது, தங்களுக்கு பிரித்த பாகம் என இளம் தாய்மார்கள் கூறியவற்றை குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்…

#1 என் வயிறு, எனக்கு இப்போது ஒரு டேபிள் போல ஆகிவிட்டது, மொபைல் பயன்படுத்த, புத்தகம் படிக்க, ஸ்நாக்ஸ் சாப்பிடும் போதென மிக சௌகரியமாக இருக்கிறது. நிச்சயம், இதற்கு எல்லாம் பிறக்கவிருக்கும் மகனோ, மகளோ வெளியே வந்து என்னை திட்ட மாட்டார், என்னுடன் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்.

#2 நான் இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பமான பிறகு நான் மிகவும் சந்தோசப்பட்டது, இனி, சில மாதங்களுக்கு மாதவிடாய் வலி எனும் துன்பம் இருக்காது. அதில் இருந்து கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டப்படி இருக்கலாம்.

#3 கருத்தடை எது பற்றியும் கவலை இன்றி கொஞ்ச நாள் வாழலாம். மருத்துவரே சில காலம் வரை தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்று கூறி இருக்கிறார். எனவே, கருத்தரிக்கும் அல்லது கருத்தடை பயனளிக்குமா என்று அஞ்ச வேண்டாம். #4 இனிமேல் உடை பற்றி கவலைப்பட தேவையில்லை. எப்படியான உடை அணிந்தாலும் கர்ப்பமாக இருப்பதே தனி அழகு தானே. இது பெண்களால் மட்டுமே உணர முடிந்த பேரழகு.

#5 எந்த கவலை இன்றி பிடித்தமான உணவு உண்ணலாம். (மருத்துவரின் ஆலோசனையோடு). முன்னர் எங்க எடை கூடிவிடுமோ என்ற அச்சத்தினாலேயே உணவில் ஸ்ட்ரிக்ட் டயட் மேற்கொண்டு வந்தேன். இப்போது ஆரோக்கியமான உடல் எடை இருக்க வேண்டும் என்பதாலேயே விரும்பி உண்ண ஆரம்பித்துள்ளேன்.

#6 கருவில் வளரும் என் குழந்தை அவ்வப்போது அசையும் அந்த நகர்வுகளை உணரும் தருணம் தான் கர்ப்பமாக இருப்பதாம் நான் மிகவும் விரும்பும் பாகம். அந்த உணர்வு வேறு எப்போதும் கிடைக்க வாய்ப்பில்லை.

#7 ஒன்பது மாதங்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இல்லை. அதிலும், எனக்கு மாதவிடாய் ஏற்படும் போது அந்த முதல் நாள் மிகுந்த இரத்தப்போக்கு, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். என்னை பார்த்துக் கொள்ளவே இருவர் வேண்டும். அந்த இம்சை ஒன்பது மாதங்களுக்கு இல்லை என்பதை நினைத்து மகிழ்ந்தேன்.

#8 வயிற்றில் குழந்தை உதைப்பது மிகவும் விருப்பமான, பிடித்த தருணம். நான் எப்போதும் உடல் எடை கூடியதாக எண்ணி வருத்தம் அடைந்தது இல்லை. வருத்தம் என்னவெனில், சரும வறட்சி ஏற்படுவது தான்.

#9 எனக்கு சுகப்பிரசவம் மீது அதீத ஆர்வமும், பெருமையும் உண்டு. என் இரு குழந்தைகளையும் சுகப் பிரசவம் மூலமாக தான் ஈன்றேன். சுகப் பிரசவம் மிகுந்த வலி உடையது தான். ஆனால், அதை தான் நான் அற்புதமான நிகழ்வாக கருதுகிறேன்.

#10 பிரவசவிக்க வார்டுக்குள் நுழைந்த போது, அந்த கடைசி ஐந்து நிமிடம் என் மகள் நகர்ந்துக் கொண்டே இருந்தால், என் வயிற்றில் அந்த நகர்வை மிக தெளிவாக உணரவும், காணவும் முடிந்தது. உடன் இருந்த நர்ஸ், குழந்தை உங்களை காண ஆர்வமாக இருக்கிறார் போல என்று கூறிய போது, என்னை அறியமால் கண்ணீர் கசிந்துவிட்டது.

#11 முதன் முதலில் குழந்தை நகர்வது அல்லது உதைப்பதை உணரும் அந்த தருணம் தான் கர்ப்ப காலத்தில் மிகவும் அழகானது. எந்த ஒரு பெண்ணாலும் மறக்க இயலாதது.

#12 ஒவ்வொரு நாளும், என் வயிறு பெரிதாகும் போது, உள்ளே என் குழந்தை வளர்ந்துக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி மகிழும் அந்த தருணங்கள். வாழ்நாளில் மறக்கவே முடியாது.

#13 கர்ப்பமாக இருக்கும் போது, நான் உறங்கும் போதும், அசௌகரியமாக இருக்கும் போது என் கணவர் வயிற்ரை தடவிக் கொடுப்பார். அது ஒரு தனி சுகம். அதை என்னால் மறக்கவே முடியாது.

#14 அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு செல்லும் போது, அவர்கள் குழந்தையின் அசைவை காண்பிப்பார்கள். அது தான் என்னக்கு கர்ப்ப காலத்தில் மிகவும் பிடித்தமான நிகழ்வு.

#15 என் மகனின் நகர்வுகள். ஆரம்பத்தில் வெறுமெனே உணர்வு மட்டுமே இருக்கும். ஆனால், ஒருக் கட்டத்தில் அவன் எட்டி உதைக்கும் போதும், நகரும் போது வயிற்றில் நன்கு அந்த அசைவு தென்படும். அதை நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அவன் கொஞ்சம் வளர்ந்து புரிந்துக் கொள்ளும் நிலைக்கு வந்த பின், அந்த வீடியோக்களை அவனுக்கு காண்பிப்பேன்.