Home சூடான செய்திகள் மனைவியின் அந்தசுக ஆசை ஆர்வத்தை அதிகரிக்கும் உணவுகள்

மனைவியின் அந்தசுக ஆசை ஆர்வத்தை அதிகரிக்கும் உணவுகள்

24

Man and woman
பெண்கள் ஆரோக்கியமான டயட்டைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். குறிப்பாக திருமணமான பெண்களுக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமான டயட் மிகவும்இன்றியமையாத ஒன்று.திருமணத்துக்கு முன் எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டிருக்கலாம். சில ஹார்மோன்கள் மெதுவாக வேலை செய்திருக்கலாம். ஆனால் திருமணத்துக்குப் பின் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் அத்தனையும் சரியாக சுரக்க வேண்டும்.

செக்ஸ் ஹாமோன்கள்
திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் ஹார்மோன்கள் சரியாக சுரந்தால்தான் ஆண் பெண் இருவருக்குமே இல்லற வாழ்க்கை சுகமாக அமையும். குறிப்பாக, பெண்களுக்கு இது மிக முக்கியம். அப்போதுதான் தானும் மகிழ்ச்சியாக இருப்பதோடு கணவரையும் திருபு்திப்படுத்த முடியும். இல்லறத்தில் அவரவர் திருப்தியைவிட, ஒருவரை மற்றவர் திருப்திப்படுத்துவது தான் சுகமாகக் கருதப்படுகிறது.

உணவின் முக்கியத்துவம்
செக்ஸ் உணர்வு என்பது நம்முடைய மனதுக்குள் இருந்து உண்டாகிற ஒன்று என்று மட்டுமே நினைத்துவிடாதீர்கள். அதற்கு முக்கியமாக ஹார்மோன்கள் தூண்டப்பட வேண்டும். இதில்உணவின் இடம் மிக முக்கியமானது. காம உணர்வை அதிகரிக்கச் செய்வதில் உணவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. சில உணவுகள் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது கணிசமாக உயர ஆரம்பிக்கும்.

அப்படி என்னென்ன உணவுகளை எடுத்துக்கொண்டால் காம உணர்வு தூண்டப்படும். குறிப்பாக, பெண்கள் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

கடல்பாசி கடல்பாசியில் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். இதற்கு காம உணர்வைத் தூண்டக்கூடிய ஆற்றல் உண்டு. கருப்பை வளமாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மை உண்டாகாமல் இருப்பதற்கும் கல்லீரல், சிறுநீரகம், கணையம், பெருங்குடல் ஆகிய அத்தனையும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இந்த கடல்பாசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அதிகமாகக் கொண்டது. கடல்பாசி எல்லா இடங்களிலும் கிடைக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை. இப்போது பதப்படுத்தப்பட்ட கடல்பாசிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு எல்லா கடைகளிலும் விற்கப்படுகிறது. அதை சாலடாகவோ சூப்பாகவோ செய்து சாப்பிடலாம்.

மீன் மீன் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, சால்மன் மீனில் அதிக அளவில் ஒமேகா-3 ஃபேட்டிஆசிட் இருப்பதால் மறுஉற்பத்திக்கான உறுப்புகளுக்கு அதிக அளவு ரத்த ஓட்டத்தைத் தருகிறது. பாலுறுப்புகளை இயக்குகிறது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் பெண்கள், குறிப்பாக,குழந்தைப் பேறுக்கான முயற்சி செய்யும் பெண்கள் அடிக்கடி உணவில் மீன் சேர்து்துக்கொள்வது நல்லது.

அத்திப்பழம் பண்டைய கால கிரேக்கர்கள் உடல் வலிமைக்கும் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கவும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அதை சாதாரணமாக நினைத்துவிட முடியாது. அதே அத்திப்பழம் செக்ஸ் ஆர்வத்தை அதிக அளவில் தூண்டுகிறது என அறிவியல்பூாவமாக பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து இருப்பதால் கருப்பையையும் கருமுட்டையையும் பலப்படுத்துகிறது.

சிப்பி சிப்பிக்கு செக்ஸ் உணர்வை தூண்டும் ஆற்றல் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் நிப்பியை பார்க்கவே அருவெறுப்பு அடைவார்கள்.இதில் எங்கிருந்து சாப்பிடுவது என்று நினைத்தால் முடியுமா?… இதில் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. அதோடு இதில. அதிக அளவு ஜிங்க் இருப்பதால் தரமான கரு முட்டைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

பெர்ரீஸ் ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி என எந்தவகை பெர்ரி பழங்களாக இருந்தாலும் கருமுட்டைகளை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. பெர்ரி பழங்களில் அதிக அளவில் ஆன்டி – ஆக்சிடன்டுகள் நிறைந்திருப்பதால் அவை கருமுட்டைகளை சேதமடையாமல் காக்கும். காம இச்சையையும் அதிகரிக்கும்.

பீன்ஸ் வகைகள் பீன்ஸில் புரோட்டீன் அதிகம். அதைவிட அதிகஅளவு இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய ஆற்றல் கொண்டது. கருமுட்டைகள் பலவீனமாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அயர்ன் பற்றாக்குறை தான். அதனால் கட்டாயம் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது. இலைவடிவ காய்கறிகள் நல்ல அடர்ந்த நிறத்தில் இருக்கும் ஸ்பின்னாக், ரோமைனி, ப்ரக்கோலி போன்ற இலைவடிவ காய்கறிகளில் அதிக அளவில் ஃபோலேட் நிரம்பியிருக்கிறது. அவற்றில் உள்ள அதிக அளவிலான விட்டமின் பி கருப்பையை வலிமையாக்குகிறது. அதேபோல் பச்சைநிற இலைவடிவ காய்கறிகள் இயற்கையாகவே பெண்களி்ன செக்ஸ் உணர்வைத் தூண்டுகின்றன. அமுக்கிரா கிழங்கு சித்த மருத்துவத்தில் நூற்றுக்கு 90 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கிழங்கு இனிப்புச்சுவையுடையது. இது மலச்சிக்கலை தீர்க்கும்.

தூக்கமின்மை பிரச்னையைப் போக்கும். இது உடலை வலுவூட்டும். குறிப்பாக பெண்களின் பாலுறுப்புகளை வலுவூட்டி அவர்களுடைய காம உணர்வை அதிகரிக்கச் செய்யும். இது முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது. குறிப்பாக, அயோடின் மற்றும் அயர்ன் நிறைந்த பொக்கிஷம் என்றே இதைக் குறிப்பிடலாம். கிழங்கு வகைகள் பொதுவாக கிழங்கு வகைகள் அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல. வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். உடலைப் பெருக்கும் என்பார்கள். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி ஆகியவை கருப்பையை வலுவாக்கி, கருமுட்டையைத் தங்க வைக்கும் ஆறு்றல் கொண்டது. குழந்தைப்பேறுக்கு திட்டமிடுபவர்கள் நிச்சயம் இந்த கிழங்குகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரு நாளையின் மூன்று வேளை உணவிலும் நிச்சயம் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். டயட் இருப்பவர்களுக்கு இது நிச்சயம் அவசியமான ஒன்று. குறிப்பாக, கருத்தரிக்க நினைப்பவர்கள் மூன்று வேளையும் காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous articleஒரே இடத்தில் இருப்பதால் கழுத்து வலியா? இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்..!
Next articleவயாகரா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? சுவாரஸ்யமான ஆய்வுக் கதை!