Home சூடான செய்திகள் ஏன் இப்போது காமம் தூண்டும் உணவுகள் பற்றிப் பேச வேண்டும்?

ஏன் இப்போது காமம் தூண்டும் உணவுகள் பற்றிப் பேச வேண்டும்?

48

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி… காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது!

காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற உயிரினங்களைவிடவும் மனித இனம் அதி முக்கியத்துவம் தருகிறது. காமத்துக்கான இன்பத்தின் அளவைத் தீர்மானிப்பதில் சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலை, உடல்நிலை, புறச்சூழல் ஆகியவையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. வயோதிகம் ஆகும்போதும்கூட இயல்பாகவே ஏற்படும் காமத் தொய்வை யார் மனமும் ஏற்பதில்லை.

காமத்தில் வெற்றியாளனாக இருக்கவே ஒரு ஆண் விரும்புகிறான். இதற்கான உணவுகளை எடுத்துக் கொள்வதில் ஆண்கள் எப்போதும் விருப்பமாக உள்ளனர். இவர்களுக்கு சற்று எதிர்மாறாக பெண்கள் காம உணர்வைத் தூண்டும் உணவுப் பொருட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.

நாம் ஏன் இப்போது காமம் தூண்டும் உணவுகள் பற்றிப் பேச வேண்டும்?

இன்றைய பரபரப்பு நிறைந்த வாழ்க்கைமுறை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் ஆகிய இரண்டும் தாம்பத்திய வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கியுள்ளது. வெளியில் சொல்லவும் முடியாத இந்தப் பிரச்னைகளால் இவர்களின் திருமண வாழ்க்கை மணமுறிவை எட்டுகிறது. திருமணத்துக்கு வெளியிலான உறவுகளுக்கும் இது காரணமாகிறது. ஆண் – பெண் இணைந்து வாழும் தாம்பத்ய இன்பத்துக்கு உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

என்னென்ன உணவுகள் உங்கள் காம உணர்வுக்கு உதவுகின்றன என்று விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.‘‘காம உணர்வுகளின் காரணகர்த்தாவாக இருப்பவை ஹார்மோன்களே. ஆணுக்கு டெஸ்டோஸ்டீரான், பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் பால் உணர்வின் காரணிகள். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் பாலுணர்வுக்குப் பக்கபலமாக இருப்பவை. இந்த ஹார்மோன்கள் அளவைத் தூண்டும் உணவுகளே காமம் கூட்டும் உணவுகளாகும்.

திருமணமான தம்பதியர் அடிப்படையில் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையைக் கூட்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஜீரணக் குறைபாடுகள் ஏற்படுத்தும் உணவுகள், நோய்த்தொற்றை உண்டாக்கும் சாலையோர உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் திருமணமான புதிதிலேயே தவிர்த்துவிடலாம். இவை உடலில் ஏற்படுத்தும் தொந்தரவுகள் உங்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு சிரமம் தரலாம்.

இரவு உணவுக்குப் பின்னர் பலர் வாழைப்பழம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வாழைப் பழத்தில் பொட்டாசியம், ஏ.பி.சி, வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. ழைப்பழத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையும் உடலுக்கு சக்தி அளிக்கிறது. ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகளும் டெஸ்டோஸ்டீரோன் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

பூண்டு ரத்த ஓட்டத்தை சீராக்கும் பணிகளைச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் அதிகப்படியான கொழுப்பையும் பூண்டு கரைத்துவிடுகிறது. ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அடைவதற்கான நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தோஸ் உற்பத்திக்கு பூண்டு உதவுகிறது. இதனால் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். கடல் உணவுகளில் இருந்து கிடைக்கும் அதிகப்படியான ஜிங்க் சத்தும் காம உணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே, கடல் உணவுகளான மீன் வகைகள், நண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காரம் அதிகம் உள்ள மிளகாய், இஞ்சி, பட்டை, கிராம்பு போன்றவையும் உடலில் எண்டார்பின் என்ற வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மிளகாயில் உள்ள சில வேதிப்பொருட்கள் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்ப அதிகரிப்பு மற்றும் அதிக வியர்வைச் சுரப்புக்கும் உதவுகிறது.

காமப் பொழுதில் உணர்வின் உயரங்களை எட்டித் தொட்டு காதல் கொண்டாட கைகொடுப்பது காரமும், வாசனை மிகுந்த மசாலாப் பொருட்களும் உதவுகின்றன. ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும் வேலையையும் இவை செய்கின்றன. பரங்கிக்காயில் உள்ள விதையை உடைத்தால் பருப்பு கிடைக்கும். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கும். விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. மலட்டுத்தன்மையை நீக்கவும் பயன்படுகிறது.

ஓட்ஸ் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள புரதம் டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு மன இறுக்கம், மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. கேரட்டில் உள்ள கனிமம் மற்றும் வைட்டமின்கள் ஆணுறுப்பு தசைகளின் வலிமைக்கு உதவுகிறது. பிறப்புறுப்பின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

டார்க் சாக்லெட் காதல் சொல்வதற்கு மட்டுமல்ல காமம் கொள்வதற்கும் ஏற்றது. மூளையில் சந்தோஷத்தைத் தூண்டிவிடும். செரொட்டோனின், ஃபீனைல் எத்திலமைன் ஆகிய வேதிப் பொருட்கள் டார்க் சாக்லெட்டிலும் உள்ளது. டார்க் சாக்லெட் சாப்பிடும்போது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. எனவே, பாலுறவுக்கு முன்பாக உங்கள் இணைக்கு டார்க் சாக்லெட் பரிசளியுங்கள். இது பாலுறவின்போது அன்பையும் ஆர்வத்தையும் அள்ளித்தரும்.

அவகேடாவும் காமத்தின் எனர்ஜியைக் கூட்டக் கூடியது. இப்பழத்தில் பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்களது மூளையில் காம உணர்வைத் தூண்டக் கூடியது. இவற்றை எடுத்துக் கொண்டால் அன்பால் இணையை வீழ்த்தலாம்.

தவிர்க்க வேண்டியவை

* இன்றைய வாழ்க்கைமுறை முன்பைப் போல இல்லை. அதுவும் உங்கள் தாம்பத்ய நேரத்தின் இன்பத்தைக் குறைக்கிறது. அலுவலக வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் நெருக்கமான நேரங்களில் ஆர்வம் இல்லாமல் போகலாம். எனவே, வேலைப்பளுவைக் குறைத்துக் கொண்டு காதல் நேரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* புகை மற்றும் மதுப்பழக்கம் தாம்பத்யத்துக்கு எதிராக உள்ளது. இப்பழக்கங்கள் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இது தாம்பத்ய நேரத்தில் ஸ்பீட் பிரேக்கராக மாறும். கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் விழுவதற்குக் காரணம் ஆகும்.

* புதினா சூயிங்கத்தை நெருக்கமான நேரத்தில் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். புதினாவில் உள்ள மென்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவினைக் குறைக்கிறது. இது காமத்துக்கு எதிரானது.

* இரவு உணவுக்குப் பின் ஜீரணத்துக்காக சோடா சேர்க்கப்பட்ட பானங்களை அருந்துகின்றனர். சோடா உடலில் வறட்சி, உடல் பருமன் போன்றவற்றுக்கு காரணம் ஆகிறது. இதுவும் உங்களது காம உணர்வைக் குறைக்கும்.

* இன்று இரவு நேரங்களில் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளுக்கு முன்னால்தான் கூட்டம் அதிகமாக உள்ளது. அதேபோல பாக்கெட் உணவுகளையும் விரும்பி உண்கின்றனர். இந்த உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் செரெட்டோனின் அளவைக் குறைக்கிறது. இதனால் எரிச்சல், தலைவலி போன்ற உணர்வுகள் ஏற்படும். இதுவும் காதலுக்கும் காமத்துக்கும் அணைபோடும்.

* அதிகபட்சமாக காஃபி அருந்துவது உங்களது அட்ரீனல் சுரப்பியை பாதிக்கிறது. அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு குறையும்போது மன அழுத்தம்
ஏற்படும். பாலுணர்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கட்டாயம் தவிர்த்திடுங்கள். பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களை சாப்பிடுவதும் பாலுணர்வுத் தூண்டலைக் குறைக்கிறது. மரபணு மாற்றப்பட்ட காய்கள், விதையற்ற பழங்களையும் தவிர்த்திடுதல் அவசியம்.

* நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? அவற்றில் உங்களது பாலுணர்வு ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் வேதிப் பொருட்கள் உள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தந்த பருவத்தில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் விளையும் உள்நாட்டு காய்கறிகளைப் பயன்படுத்துங்கள்.

* மேலும் உங்களது மனதை மகிழ்வுறச் செய்து இன்பம் கூட்டும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். மூடு ஏற்றும் உணவுகளை உங்கள் இணைக்கு பரிசளித்து காமம் கொண்டாடுங்கள். ஒவ்வொரு முத்தத்திலும் அன்பின் ருசி அறிந்திடுங்கள்!

Previous articleஉறவில் கணவனுக்கு என்ன என்ன பிடிக்கும் மனைவியரே உங்களுக்கு
Next articleஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ