Home சமையல் குறிப்புகள் மீன் தலை கறி

மீன் தலை கறி

27

sl4211என்னென்ன தேவை?

மீன் தலை – 4
நல்லெண்ணை – 5 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்லை – தேவையான அளவு
சாம்பார் வெங்காயம் – 10
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 1/2 கப்,
புளி – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின் அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வேக விடவும். மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும், அதில் தடித்த புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். இப்போது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், அதில் மீன் தலைகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். மீன் அரை வேக்காட்டில் இருக்கும்போது தேங்காய் பேஸ்ட் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை சிம்மில் வைத்து சமைக்கவும். சுவையான மீன் தலை கறி தயார்.