Home பாலியல் ஆணுறையா? பெண்ணுறையா எது சிறந்ததது? ஏன்?

ஆணுறையா? பெண்ணுறையா எது சிறந்ததது? ஏன்?

195

பாலியல் தகவல்:”காதல்” என்ற ஒன்று நம் பூமியில் இல்லையென்றால் எந்தவித ஜீவராசிகளாலும் உயிர் வாழ இயலாது. இந்த பூமியில் எத்தனையோ வகை விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து நிற்பது காதல்தான். இந்த காதலில் லயித்து இருக்கும்போது அதில் சற்றே காமமும் கூடிவிடுகிறது. இதன் அர்த்தமாக குழந்தை உருவாகிறது. ஆனால் பலருக்கு காதலும் வேண்டும் காமமும் வேண்டும், தற்போதைக்கு குழந்தை மட்டும் வேண்டாம் என இருப்பார்கள்.

மேலும் சில புதுமண தம்பதியினர் குழந்தை பெற்று கொள்ள சிறிது காலம் தள்ளி போடுவார்கள். இத்தகைய நிலையில் இவர்களின் இல்லற வாழ்க்கைக்கு உதவுவது இந்த காண்டம்கள் மட்டும்தான். அதிலும் முன்பெல்லாம் ஆணுறைகள் பற்றிய பேச்சுகளே அதிகம் புழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் பெண்களுக்கும் பெண்ணுறை வந்துவிட்டது. இது ஆணுறைகளை காட்டிலும் பல மடங்கு பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்ணுறையின் முழு பயன்பாட்டையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.

காப்பாற்றும் காண்டம்கள்…!
காதலில் வயப்பட்டு அதனால் காமத்தில் சில நேரங்களில் பலர் ஈடுபட விரும்புவார்கள். அந்த சமயங்களில் அவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட உறைகளை பயன்படுத்தி உடலுறவு கொள்வது மிகவும் ஆரோக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. பல ஃபிளவர்களில் இந்த உறைகள் கிடைக்கிறது. இது இருவரின் உடல் ஆரோக்கியத்தையும் உளவியல் ஆரோக்கியத்தையும் நல்ல முறையில் பேணி காக்கிறது.

புதிய பெண்ணுறைகள்..!
ஆணுறைகளை காட்டிலும் பெண்ணுறைகள் அதிக நன்மைகளை தருவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. இது “பாலியூரத்தீன்” ( Polyurethane) என்ற மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருளால் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ கண்ணோட்டத்தில் பெண்ணுறைகள் கூடுதல் பலனை தருவதாக குறிப்பிடுகின்றனர். இந்த கருத்தடை சாதனம் கிட்டத்தட்ட 95% பலன் தருவதாக கண்டறிந்துள்ளனர். பல ஆண்கள் ஆணுறைகளால் தங்கள் உடலுறவில் அதிக இன்பம் அடைவதில்லை. அவர்களுக்கு இது ஒரு மாற்றமாக இருக்கிறது.

என்னதான் செய்யும் இந்த ஃபெமிடம் (Femidom) ..?
பெண்ணுறைகளுக்கென்று பிரத்தியேக பெயர் உள்ளது. இதனை ஃபெமிடம் (Femidom) என்றே அழைக்கின்றனர். இதனை பெண்ணின் உறுப்பில் பொருத்தினால் ஆணின் விந்தணுக்கள் பெண்ணுடைய கரு முட்டைகளுக்குள் செல்லாதவாறு காக்கிறது. இது பொருத்துவது சற்றே கடினமாக இருந்தாலும், இதன் பயன்கள் அதிகம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அத்துடன் இது உடலுறவில் எந்தவித பாதிப்புமின்றி பார்த்து கொள்ளும்.

எவ்வாறு பயன்படுத்துவது…?
பெண்ணுறைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். முதலில் அதனை பாக்கெட்டில் இருந்து பிரித்து, அதிலுள்ள 2 வளையங்களில் முதல் வளையத்தை எடுத்து பிறப்புறுப்பின் உட்பாகத்தை நன்றாக மூடுமாறு பொறுத்த வேண்டும். கிட்டத்தட்ட மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தும் பேட் போல பொறுத்த வேண்டும்.

அடுத்து, இந்த உட்பகுதி வளையத்தை பெருவிரல் மற்றும் ஆல்காட்டி விரலால் நன்கு விரித்து சரியான முறையில் பொருத்த வேண்டும். மேலும் வெளிப்பகுதி வளையம் வெளி புறம் இருக்குமாறு செய்தல் வேண்டும். உடலுறவு கொண்ட பின் இந்த பெண்ணுறையை பாதுகாப்பாக நீக்க வேண்டும். வெளிப்பகுதி வளையத்தை பிடித்து இழுத்து காண்டத்தினை பிறப்புறுப்பில் இருந்து பாதுகாப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போடவும்.

எது சிறந்தது…? அதிக ஆரோக்கியமானது..?
ஆணுறைகள் பல சமயங்களில் கிழுந்து விட கூடும். ஆனால் பெண்ணுறைகள் அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் விரைவில் கிழிந்து விடாது. மேலும் இது ஆணுறைகளை காட்டிலும் ஆரோக்கியமான உடலுறவை தருகிறது.

அத்துடன் இதில் உள்ள ரப்பர் போன்ற தோல் உடலுறவில் அதிக நாட்டம் கொள்ள தூண்டுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதனை பொருத்தும் போது மிகவும் கவனமாக கையாளுவதே. சிறிது தவறினால் கூட கருதரிப்பிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

பெண்ணுறையின் பயன்கள்… இந்த ஃபெமிடம் பாலின தொற்று நோய்கள் பரவாதபடி பாதுகாக்கிறது. மேலும் HIV போன்ற கொடிய நோய்களில் இருந்து உங்களை காப்பாற்றும். கருத்தடை மாத்திரை போன்றவற்றை பயன்படுத்தி பலவித பக்க விளைவுகளை அடைவதை விட எந்த வித பாதிப்பும் இல்லாத இந்த பெண்ணுறைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் அது உடலுக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் இந்த காண்டங்கள் பெண்களை கருத்தரிப்பில் இருந்து காப்பதோடு எந்தவித பாதிப்பையும் தராது.

ஏதேனும் தீமைகள் உண்டா..? 1. இப்போது வந்துள்ள ஃபெமிடம் காண்டங்கள் latex என்ற பொருளால் தயாரிக்க படுவதில்லை. Polyurethane போன்ற பொருளால் தயாரிப்பதால் இதில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. latex -யில் தயாரித்த பெண்ணுறைகள் அதிக எரிச்சல், தோல் நோய்கள், தொற்றுக்களை ஏற்படுத்தும். ஆனால் Polyurethane காண்டம்களில் அத்தகைய பிரச்சினைகள் இருப்பதில்லை. 2. ஆணுறைகள் கடைகளில் கிடைப்பது போன்று அதிக இடங்களில் பெண்ணுறைகள் கிடைப்பதில்லை. 3. சில சமயங்களில் இந்த உறைகளை சரியாக அணியவில்லையென்றால் அது கருத்தரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அத்துடன் உடலுறவில் அதிக நாட்டத்தையும் தராது.

Previous articleஆண்களே சிக்ஸ் பேக் ஆசையா அப்போ இதை கொஞ்சம் படியுங்க
Next articleபெண்களின் தொப்பை குறைக்க இதை செய்து பாருங்க -வீடியோ