Home ஆண்கள் ஆண்களின் உடல் பருமன் ஆண்மை மற்றும் விந்து உற்பத்தியை பாதிக்குமா?

ஆண்களின் உடல் பருமன் ஆண்மை மற்றும் விந்து உற்பத்தியை பாதிக்குமா?

142

ஆண்மை பலம்:தற்போதைய வாழ்கை முறையில் உடல் எடை அதிகமாக இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது நன்றாக தெரிந்தது தான். தற்போது உடல் எடைக்கும் ஆணின் விந்தணுக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக குறைந்த விந்தணுக்களின் அளவையும், குறைந்த செயல் திறன் கொண்ட விந்தணுக்களையும் பெற்றிருக்கின்றனர் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.

அதிக உடல் எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களுக்கு பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு வலிமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவற்றின் தரம் மிகக்குறைவாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடல் எடை அதிகரிக்கும்போது விந்தணுக்களின் திறன் குறையும். அதே போல் தான் உடல் எடையை குறைக்கும் போது விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக உண்ணுதல், ஆல்கஹால் பருகுதல், உடற்பயிற்சியின்மை ஆகியவை உடல் எடையை அதிகரிக்க காரணமாகிறது.

இதனால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள் ஆகியவை ஏற்படும். எனவே வெளியில்(கடையில்) சாப்பிடும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது மிக சிறந்தது.