Home ஆரோக்கியம் உடலிலிருந்து காற்று பிரியும் பொழுது “குசு வாசம்” ஏற்படுவதேன்?

உடலிலிருந்து காற்று பிரியும் பொழுது “குசு வாசம்” ஏற்படுவதேன்?

194

பொது மருத்துவம்:நாம் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை வயிற்றில் உள்ள குடல்கள் எடுத்துக்கொண்டு, உறிஞ்சிக்கொண்டு, தேவையில்லாத கழிவு உணவுகளை வயிறு மலக்குடலுக்கு அனுப்பி வைத்துவிடும். பின் மலக்குடலில் தேவையில்லாத உணவு கழிவுகள் மலமாக மாற்றப்பட்டு மலவாய் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றன.

நம்மில் பெரும்பாலானோர் தினசரி அல்லது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான, சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனை வாயுத்தொல்லை ஆகும். நம் உடலில் இருந்து காற்று பிரித்தெடுக்கப்படுவதே வாயுத்தொல்லை என்று அறியப்படுகிறது. இந்த காற்று பிரிப்பின் பொழுது ஒருவித கெட்ட வாசம் வெளியாகிறது. அந்த வாசம் ஏன் உருவாகிறது, எதனால் அத்துணை மோசமான வாசமாக இருக்கிறது என்று பதிப்பினை படித்தறிவோம்!

ஏன் வாயு வெளிப்படுகிறது?
வயிற்றில் இருக்கும் இரைப்பையில் உணவு உண்ணுதல், நீர் பருகுதல், பழச்சாறு, மற்ற பானங்களை பருகுவதன் மூலமாக காற்று உண்டாகிறது. வயிற்றில் உண்டான காற்றை வெளியேற்ற மனித உடல் ஏப்பம் அல்லது காற்றினை பிரித்தெடுப்பது அதாவது பேச்சு வழக்கில் கூறினால், குசு போன்றவற்றின் வாயிலாக வெளியேற்றுகிறது.

இந்தக் காற்று ஏப்பம் மற்றும் குசுவாக வெளிப்படும் பொழுது ஒருவித சத்தத்துடன் வெளிப்படுகிறது; ஏப்பம் வெளிப்படுகையில் உண்ட உணவின் மணமே தோன்றி, மறையும். பல நேரங்களில் குசு வெளிப்படும் பொழுது சத்தத்துடனும், ஒருவித மோசமான வாசத்துடனும் வெளிப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மட்டுமே சத்தம் இன்றியும், வாசம் இன்றியும் குசு வெளியேறுகிறது. இந்த குசுவின் மோசமான வாசம் நாம் உண்ணும் உணவுகள், மாத்திரை மருந்துகள், நமது காலைக்கடன்களை எப்பொழுது கழிக்கிறோம் – எத்தனை நாள் இடைவெளி விட்டு கழிக்கிறோம், வயிற்றில் நிலவும் செரிமான பிரச்சனைகள் போன்ற விஷயங்களை பொறுத்து அமைகிறது.

இப்பொழுது குசுவாசத்தை ஏற்படுத்தும் முக்கியமான ஐந்து காரணங்களை பற்றி படித்தறிவோம

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் உங்கள் உடலில், அதிக வாயுவை உண்டாக்கி வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். இந்த உணவுகள் செரிமாணமடைய அதிக நேரம் எடுக்கும்.ஆகையால், அவை வெளிப்படுத்தும் காற்று தொடர்ந்து அல்லது அதிக நேரம் குசுவாக வெளியேறிக் கொண்டே இருக்கும். நார்ச்சத்து அதிகம் அடங்கிய உணவுகளான ப்ரோக்கலி, போக் சொய், அஸ்பாரகஸ், முட்டைகோஸ், போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது வாயுத்தொல்லை ஏற்படுகிறது. சில நேரங்களில் குசு வெளிப்படும் பொழுது அழுகிய முட்டை வாசம் ஏற்படும்; இதற்கு நார்ச்சத்துள்ள உணவுகளில் இருக்கும் சல்பர் தான் காரணம். பெரும்பான்மையான காய்கறிகளில், சல்பர் அதிகம் நிறைந்துள்ளது. குசுவின் கெட்ட வாடைக்கு சல்பர் எனும் வேதிப்பொருள் தான் காரணம்.

உணவு செரிக்கும் தன்மை உடலின் செரிக்கும் தன்மையை அறியாது, அதிக உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டால், அது காற்றுப்பிரிப்பின் கெட்ட வாடைக்கு காரணம் ஆகும். மேலும் சிலரின் உடல் பால் பொருட்களை செரிக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளும், க்ளுட்டன் அல்லது செலியாக் உணவுகளை செரிக்க அதிக நேரம் எடுக்கலாம். இவ்வாறு செரிமானத்தில் ஏற்படும் கால தாமதம் ஏற்படுவதால், அது குசு அதிகம் வெளிப்படுவதற்கும், அதன் மோசமான வாடைக்கும் காரணமாகிறது.உங்களுக்கு செரிக்கும் தன்மை குறைவாக உள்ளதை மயக்கம், பலவீனம், டையேரியா, உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளின் மூலம் அறிந்து, அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மருந்துகள் உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்க்குறைபாடுகளை போக்க மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுது, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை உட்கொள்ளும் பொழுது, இந்த மருந்துகள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அகற்றி விடுகின்றன. அவை உடலின் நோய்களை குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் நல்ல செயலோடு, வயிற்றின் நல்ல பாக்டீரியாக்களை அகற்றும் கெட்ட செயலையும் சிறப்பாக செய்துவிட்டு செல்கின்றன. மாத்திரைகளின் இந்த செயல், செரிமானத்தில் பிரச்சனையை உண்டாகி, மோசமான வாசத்துடன் குசுவை வெளியேறச் செய்கின்றன. இது மிக அதிகமாக ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் நாம் போடும் பாமின் வாசம் எவரையும் நமக்கு அருகில் அண்டவிடாமல் செய்துவிடும். எனவே, இந்த குறைபாட்டினை உடனடியாக சரி செய்வது அவசியம்.

மலச்சிக்கல் காலைக்கடன்களை முடிக்காமல், வங்கியில் பணம் சேர்ப்பது போல், மலக்குடலில் மலத்தை சேர்த்து சேர்த்து வைத்துக் கொண்டே வந்தால், உடலில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். மலச்சிக்கல் உடலில் ஏற்பட்டிருப்பதை அத்துணை விரைவில் அறிய இயலாது; இதனை அறிய உடலின் செயல்பாடுகளை உற்று கவனித்தாலே போதும். மலம் வெளியேறாமல் இருப்பது, வயிற்றில், செரிமான உறுப்புகளில் அதிக பாக்டீரியாக்களை உருவாக்கி விடும். இந்த பாக்டீரியாக்கள் அதிக குசு மற்றும் கேடுகெட்ட மோசமான வாசம் கொண்ட குசுக்களை உடலில் தோற்றுவித்து வெளியேற்ற தொடங்கி விடும்.

செரிமானக் கோளாறுகள் செரிமான உறுப்புகளில் ஏதேனும் பெரிய பிரச்சனை அல்லது நோய்த்தொற்று, ஏற்பட்டிருந்தால், செரிமானம் தாமதமாகும். இது அதிக பாக்டீரியர்களை உற்பத்தி செய்து, வாயுத்தொல்லையை ஏற்படுத்திவிடும். வயிற்றின் குடல் பகுதிகளில், முக்கியமாக பெருங்குடலில் புற்றுநோய் ஏற்பட்டால், அது உடலின் வாயுத்தொல்லையை அதிகப்படுத்திவிடும்.

இந்த நிலையில் தொடந்த குசு மற்றும் கெட்ட வாசத்தையும் தோற்றுவிக்கும். ஆகையால், மிகவும் மோசமான குசுவாசம் மற்றும் அதிக குசுக்கள் உடலில் இருந்து வெளியேறினால், உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று உடலின் நோயைத் தீர்த்து வாழவும்.