Home ஆரோக்கியம் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகளும் தீர்வுகளும்

குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகளும் தீர்வுகளும்

26

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பத்­தையும் எவ்­வாறு அமைய வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா அல்­லது மூன்று பிள்­ளைகள் போதுமா என திட்­ட­மிட்டு கொள்­வது சிறந்­தது. இன்­றைய கால கட்­டத்தில் அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வினால் பல குடும்­பங்கள் தடு­மாறும் போது குடும்­பத்தை திட்­ட­மிட்டு அமைத்து கொள்­வது தங்­க­ளது இருக்கும் பிள்­ளை­களை நன்கு கற்­பித்து ஆரோக்­கி­ய­மாக வளர்க்க உதவும். இவ்­வாறு குடும்­பத்தை சரி­யாக திட்­ட­மி­டாது இருந்தால் பின்னர் திட்­ட­மி­டாது கர்ப்பம் தரித்து திட்­ட­மி­டாது பிள்­ளைகள் பிறக்கும் போது தடு­மா­று­வது தவிர்க்க முடி­யாமல் போகின்­றது. இந்­நி­லையில் இருக்கும் பிள்­ளை­க­ளையும் சரி­யாக கவ­னிக்­காமல் போகும்­நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனால் குடும்­பங்­களை திட்­ட­ மிட உதவும் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை பற்றி அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை நிரந்­த­ர­மா­னதா?

ஆம் பெண்­களில் செய்­யப்­பட்டு வரு­வது குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாகும். இதனை LRT சத்­திர சிகிச்சை என அழைப்­பார்கள். இதனை தம்­ப­திகள் தமக்கு தேவை­யான குழந்­தை­களை பெற்­றெ­டுத்து முடிந்த பின்னர் செய்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­குவோம். பின்னர் மீண்டும் ஒரு குழந்தை பெற­லாமா என சிந்­திப்­ப­வர்கள் இம்­மு­றைக்கு செல்­வது கடினம். ஏனெனில் இது ஒரு நிரந்­த­ர­மான குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை முறை­யாகும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையில் என்ன நடை­பெறும்?

பெண்­களில் செய்­யப்­படும் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையில் கர்ப்­பப்­பை யின் இரு புறத்­திலும் இருக்கும் பலோப்­பி யன் குழாய்­களில் கட்­டுப்­போ­டப்­பட்டு வெட்­டப்­ப­டு­கின்­றது. இதன் போது சூழ்­முட்­டை­களும் விந்­து­களும் சந்­திக்க முடி­யாது தொடர்பு துண்­டிக்­கப்­ப­டு­கி­றது. இத­னையே LRT சத்­திர சிகிச்சை என அழைக்­கப்­படும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யி னால் பெண்­களின் மாத­விடாய் சக்­க­ரத்தில் மாற்­றங்கள் வருமா?

பல பெண்கள் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­வ­தற்கு தயங்­கு­வ­தற்கு காரணம் தமது மாத­விடாய் குரு­திப்­போக்கில் மாற்­றங்கள் வந்­து­விடும் அதிகம் போகத்­தொ­டங்கும் என நினைத்­தே­யாகும். இவ்­வாறு பலர் சொல்லும் உண்­மை­யற்ற தக­வல்­களை நினைத்து இவ்­வித சத்­திர சிகிச்­சைக்கு பின் வாங்­கு­வது வழக்கம். ஆனால் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையால் மாத­விடாய் போக்கில் மாற்­றங்­களோ அல்­லது அதி­க­ரிப்போ ஏற்­ப­ட­மாட்­டாது. இது குறித்து நீங்கள் பயப்­ப­டாது தகுந்த மருத்­துவ ஆலோ­சனை மூலம் உங்­க­ளது சந்­தே­கங்­களை போக்க வேண்டும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யினால் பெண்­களின் உடல் பருமன் அதி­க­ரிக்­குமா?

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு LRT சத்­திர சிகிச்­சை­யினால் பெண்­களின் பருமன் அதி­க­ரி க்கும் உடல் நிறை கூடி விடும் என நினைப்­பது தவறு. இவ்­வித உண்­மை­யற்ற கதை களை நம்பி நீங்கள் முடி­வு­களை எடுக்கத் தயங்க வேண்டாம். பெண்­களின் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையால் பெண்­களின் உடல் நிறை அதி­க­ரிக்­காது. அதற்கு வேறு கார­ணங்கள் இருக்­குமா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­த­வர்­க­ளிலும் மீண்டும் கரு தங்கும் சந்­தர்ப்­பங்கள் உள்­ளதா?

நிரந்­தர குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்ட பெண்­களில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்­தார்கள் என சில கதைகள் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்கள். இது மிகவும் அரி­தாக நடை­பெறும் சம்­பவம். எங்கே யாருக்கோ நடை­பெற்று விட்ட இவ்­வா­றான மிக அரிய நிகழ்­வு­களை நினைத்து நீங்கள் பயப்­பட்டு குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­வ­தற்கு பின்­னிற்க வேண்டாம். நிரந்­தர குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­த­வர்கள் மீண்டும் கருத்­த­ரித்த சந்­தர்ப்­பங்கள் மிக மிகக்­கு­றைவு.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­க­ளுக்கு வயிற்றை பெரி­த­ளவில் வெட்ட வேண்­டுமா?

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு LRT சத்­திர சிகிச்சை பெண்­களில் முன்னர் வயிற்றை வெட்­டித்தான் செய்­யப்­பட்­டது. ஆனால் தற் ­போது லப்­ரஸ்­கோப்பி முறையில் வயிற்றில் பெரிய வெட்­டுக்­கா­யங்கள் இல்­லாது சிறிய துளை மூலம் செய்­யப்­படும். இதனால் பெண்கள் ஒரே நாளில் வீடு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும். இதற்கு பின்னர் ஏற்­ப டும் வயிற்று வலியும் குறைவு. இதனால் இந்த நிரந்­தர குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை மிகவும் இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த சத்­திர சிகிச்சை பிர­சவம் முடி­வ­டைந்த எவ்­வ­ளவு காலத்தில் செய்ய முடியும்?

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­தி­ர­சி­கிச்­சை­யா­னது கடைசிப் பிர­ச­வத்தின் போது செய்ய முடியும். இல்­லா­விட்டால் சில மாத­கால இடை­வெ­ளியின் பின்னர் கூட செய்ய முடியும்.

குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்­களில் இதனை மீள் இயங்க வைக்­க­லாமா?

நிரந்­தர குடும்­பக்­கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்கள் சில­வேளை மனம்­மாறி மீண்டும் ஒரு குழந்தை பெற வேண்டும் என நினைப்­பது சில சந்­தர்ப்­பத்தில் ஏற்­ப­டு­கின்­றது. சில பெண்கள் கண­வரை இழந்து மீள் திரு­மணம் செய்த சந்­தர்ப்­பங்­க­ளிலும் அல்­லது ஏற்­க­னவே இருந்த பிள்­ளையை விபத்­திலோ அல்­லது டெங்கு போன்ற கொடிய நோயினால் இழந்த சந்­தர்ப்­பத்­திலும் மீண்டும் ஒரு பிள்ளை வேண்டும் என்று திட்­ட­மி­டு­வார்கள்.

இந்­நி­லையில் ஏற்­க­னவே நிரந்­தர குடும் பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் என்ன செய்வது என ஏங்குவது உண்டு. இவர்களுக்கு நாம் ஏற்கனவே செய்யப்பட்ட நிரந்தர குடும்பகட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சையை மீள் சீராக்கி மீண் டும் இயங்க வைக்க சத்திர சிகிச்சை செய்ய வேண்டி வரும்.

இவ்வாறு மீள் சீராக்கல் சத்திர சிகிச்சை கிட்டத்தட்ட நூற்றுக்கு ஐம்பது சதவீதம் வெற்றி தந்து குழந்தை பெற வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறான பிரச்சினை உள்ளவர் கள் வைத்திய ஆலோசனை பெற்று தமக்கு ரிய பிரச்சினையை தீர்க்க முடியும்