Home பெண்கள் தாய்மை நலம் பால்வினை நோய்கள் பரப்பும் கருத்தடை சாதனங்கள்

பால்வினை நோய்கள் பரப்பும் கருத்தடை சாதனங்கள்

41

கருத்தடை மாத்திரைகள் பிரபலமான கருத்தடை முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் இவை வேறு காரணங்களுக்காகவும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இவை எப்படி செயல்படுகின்றன (How they Work)

இந்த மாத்திரைகள் கருப்பை வாய் சளிப்படலத்தைக் கெட்டியாக்கி, விந்தணுக்கள் நகர்வதைக் கடினமாக்கும், அத்துடன் சினைப்பையில் இருந்து கருமுட்டைகள் வெளியாவதையும் தடுக்கும்.

தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் (Facts to Know)

சேர்க்கை மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் இரண்டையும் கொண்டவை) மற்றும் மினி மாத்திரைகள் (புரோஜெஸ்ட்ரோன் மட்டும் கொண்டவை) என இரண்டு வகை மாத்திரைகள் உள்ளன. சேர்க்கை மாத்திரைகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை கர்ப்பத்தைத் தடுப்பதில் 91-99% பலனளிக்கும் திறன் கொண்டவை. இவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் அவை மிகுந்த பலனளிக்கும். அப்படி எடுத்துக்கொண்டாலும் கர்ப்பமாக வாய்ப்புள்ளது.

கவனிக்க வேண்டிய பிற முக்கிய விஷயங்கள்:

பால்வினை நோய்கள் பரவாமல் இவை பாதுகாக்காது. ஆகவே, ஆணுறை பயன்படுத்துவது எப்போதும் பாதுகாப்பானது.
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இந்த மாத்திரைகளை வாங்க மருத்துவரின் பரிந்துரை இருக்க வேண்டும். முதலில் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பதே நல்லது, உங்களுக்கு அவர் சரியான மாத்திரையைப் பரிந்துரைப்பார், எப்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்குவார்.
மாதவிடாயில் மாற்றங்கள்: இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்பு, அவற்றால் ஏற்பட சாத்தியமுள்ள பக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். சில சமயம், இந்த மாத்திரைகளில் உள்ள ஹார்மோன்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சியின் கால ஒழுங்கையும், மாதவிடாயின் தீவிரத்தையும் மாற்றிவிடக்கூடும்.
பக்க விளைவுகள் (Side Effects)

எல்லோருக்கும் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் வருவதில்லை என்றாலும், கருத்தடை மாத்திரைகளால் பக்க விளைவுகள் இல்லை என்று கூறுவதற்கில்லை.

குமட்டல் : மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தொடங்கும் நாட்களில் குமட்டல் உணர்வு இருக்கலாம். வழக்கமாக சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால், உங்கள் மருத்துவர் குறைந்த ஈஸ்ட்ரோஜென் உள்ள வேறு மாத்திரைகளைப் பரிந்துரைக்கலாம்.
உடல் எடையில் மாற்றங்கள்: உடல் எடை கூடுவதும் இவற்றின் பக்க விளைவுகளில் ஒன்று.
கறை படுதல்: இந்த மாத்திரைகளை திடீரென்று ஒருவர் எடுத்துக்கொள்ளத் தொடங்கும்போது அல்லது நிறுத்தும்போது இது நிகழலாம்.
மற்ற பக்க விளைவுகள்: சில பெண்களுக்கு மார்பகங்களில் வலி, தலைவலி, வயிற்று வலி ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மொத்தத்தில், கர்ப்பத்தடைக்கும் பிற ஹார்மோன் மற்றும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் கருத்தடை மாத்திரைகள் சிறந்த தெரிவுதான்.