Home பெண்கள் அழகு குறிப்பு அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

அழகை அதிகரிக்க உலகில் மேற்கொள்ளும் சில விசித்திரமான ஃபேஷியல்கள்!

19

இன்றைய காலத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே அழகை அதிகரிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளது. அதற்காக அவர்கள் கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுடன், வாரந்தோறும் சருமம் மற்றும் உடலை பராமரிக்க ஸ்பா சென்று வருகின்றனர். இப்படி இருக்க, உலகில் உள்ள மக்கள் தங்களது அழகை அதிகரிப்பதற்கு சில விசித்திரமான ஃபேஷியல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அத்தகைய ஃபேஷியல்களை பிரபலங்கள் தான் பின்பற்றுவார்கள். அப்படி அவர்கள் பின்பற்றும் ஃபேஷியல்கள் அனைத்தும் விசித்திரமாக இருப்பதுடன், அவை மிகவும் காஸ்ட்லி. அதுமட்டுமின்றி, அவற்றில் சில ஃபேஷியல்களைப் பற்றி தெரிந்தால், முகத்தை சுளிப்பதுடன், சில நேரங்களில் பயப்படும் அளவிலும் இருக்கும். பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்கஸ இங்கு அப்படி உலகில் மக்களால் அழகை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் சில விசித்திரமான

ஃபேஷியல்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். முடிந்தால் அவற்றை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். முன்பெல்லாம் நத்தையைப் பார்த்து பயப்படும் பெண்கள், தற்போது அழகை அதிகரிக்க நத்தையை முகத்தில் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இப்படி நத்தையை முகத்தில் விடுவதால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நத்தை உறிஞ்சிவிடுவதோடு, அதில் சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளை கொண்டுள்ளது. ஆம், மனித உடலில் உள்ள இரத்தத்தைப் பயன்படுத்தியும் ஃபேஷியல் செய்கிறார்கள். அதிலும் அப்படி எடுக்கப்படும் இரத்தத்தை, பிளாஸ்மாவுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவுவார்கள். இதுவும் உலகில் செய்யப்படும் விசித்திரமான ஃபேஷியல்களில் ஒன்று. ஆமாங்கஸ தங்கத்தை வாங்கவே பணம் இல்லை என்றிருக்க, இவ்வுலகில் சிலர் தன் அழகை அதிகரிக்க 24 காரட் தங்கத்தைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்கிறார்கள். இது தான் இருப்பதிலேயே மிகவும் விலை மதிப்புமிக்கது. குறிப்பாக இந்த ஃபேஷியல் செய்தால், முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம். மீன் சாப்பிட்டால் உடலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால் உங்களுக்கு மீன் முட்டையை சாப்பிட பிடிக்காதெனில், கவலை வேண்டாம். அதனைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். மேலும் இது தான் தற்போது ட்ரெண்ட்டில் உள்ளது. முன்பெல்லாம் பறவையின் கழிவு மேலே விழுந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது அந்த பறவையின் கழிவைப் பயன்படுத்தி சருமத்திற்கு ஃபேஷியல் செய்கிறார்கள். என்ன கொடுமை சார் இதுஸ தேனீக்களின் விஷத்தைப் பயன்படுத்தியும் ஃபேஷியல் செய்கிறார்கள். இப்படி செய்வதால், அந்த விஷமானது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜனை சீராக்குகிறது. மனிதனின் சிறுநீர் பல்வேறு அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதனை நேரடியாகவும் முகத்தில் பயன்படுத்துவார்கள் என்பது தெரியுமா? ஆம், சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள, சிறுநீரை முகத்தில் தடவி மசாஜ் செய்வார்களாம். சீனாவில் செய்யப்படும் ஒரு விசித்திரமான அதே சமயம் பயப்படுமாறு மேற்கொள்ளும் ஒரு ஃபேஷியல் தான் நெருப்பு பயன்படுத்தி செய்வது. பொதுவாக நெருப்பு முகத்தில் பட்டால் கருகிவிடும். ஆனால் இந்த ஃபேஷியல் முறையில் அழகாகுமாம். எப்படியெனில் இதில் ஒரு தடிமனான துணியை ஆல்கஹாலில் நனைத்து, அதன் மேல் ஒருசில நெருப்பின் தாக்கத்தினால் சருமம் பாதிக்கப்படாதவாறான பொருட்களை தடவி, முகத்தின் மீது வைத்து, பின் அதன் மேல் நெருப்பூட்டி விடுவார்கள். பாருங்களேன், நம் மக்கள் அழகை அதிகரிக்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று. ஒயினை குடித்தால் மட்டுமின்றி, அதனை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். அதிலும் உலர்ந்த சருமம் உள்ளவர்கள் வெள்ளை ஒயினையும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ரெட் ஒயினையும் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. இது விசித்திரமானதாக இல்லாவிட்டாலும், உலகில் பலரால் செய்யப்பட்டு வருகிறது.

 

Previous articleமலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க!
Next articleஇறால் மசாலா