Home பெண்கள் அழகு குறிப்பு முகத்துல கரும்புள்ளியா? இந்த மூன்றே போதும்… அதை அடியோடு போக்க…

முகத்துல கரும்புள்ளியா? இந்த மூன்றே போதும்… அதை அடியோடு போக்க…

22

பருவ நிலை மாற்றங்களாலும் எண்ணெய் உணவுகளாலும் என பல காரணங்களால் முகத்தில் பருக்கள் உண்டாகின்றன. அவற்றை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டாலோ அல்லது நகங்களால் கிள்ளிவிட்டாலோ அது நாளடைவில் கரும்புள்ளியாகவும் தழும்பாகவும் மாறிவிடுகிறது.

அவற்றை என்னதான் விலையுயர்ந்த கிரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் சரிசெய்ய முடிவதில்லை. ஆனால் வீட்டிலுள்ள இந்த மூன்று பொருட்களே போதும் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க…

முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்கு நுரைபொங்கும் வரை அடித்துக் கொண்டு, அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும். பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். அப்போது சோப்பு ஏதும் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக பயத்தமாவு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அதேபோல் தக்காளி மற்றும் வெளிளரிக்காய் இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அதை நன்கு பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இவற்றை வாரத்துக்கு இரண்டு நாட்கள் செய்யலாம். ஆண்களின் சருமம் சற்று கடினத்தன்மையுடன் இருக்கும் என்பதால் இவைற்றைத் தொடர்ந்து மேற்கொண்டால் நல்ல பலனைப் பெற முடியும்.