Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களே முகத்தில் முடியை நீங்களே அகற்றும் இலகுவான வழிமுறை

பெண்களே முகத்தில் முடியை நீங்களே அகற்றும் இலகுவான வழிமுறை

72

பெண்கள் அழகு:சருமப் பிரச்சினை, முடியின் ஆரோக்கியமின்மை என பெண்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் வரிசையில் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளும் ஒன்றாகும். இந்தப் பிரச்சினையால் சிலர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

முகத்தில் மட்டுமல்லாது உடலின் பல பகுதிகளிலும் தேவையற்ற முடி வளர்கின்றன. இதனை நீக்குவதற்கு வக்ஸிங் முறையையே பலரும் பின்பற்றி வருகின்றனர். அதுமட்டுமல்லாது முடிகளை நீக்கும் கிறீம்களைப் பயன்படுத்தியும் இலகுவாக முடியை நீக்க முடியும்.

ஆனால் இவற்றை எல்லாம் விடுத்து இயற்கை முறைகளைப் பின்பற்றுவதனால் பக்க விளிவுகளும், வலிகலும் இன்றி இலகுவாக முடிகளை நீக்க முடியும். அத்துடன் இவற்றை பின்பற்றுவதனால் அதிகளவில் பணம் விரயமாவதைத் தடுக்க முடியும்.

முகத்தில் உள்ள முடிகளை நீக்கும் வழி முறைகள்.

எலுமிச்சைப் பழத்தை பயன்படுத்துவதனால் முகத்தில் உள்ள முடிகளை இலகுவாக பக்க விளைவுகள் இன்றி வீட்டில் இருந்தவாறே நீக்க முடியும்.

எலுமிச்சை பயன்படுத்தி முகத்தின் தேவையற்ற முடிகளை எவ்வாறு நீக்க முடியும் என இப்போது பார்ப்போம்.

1. எலுமிச்சைப் பழமும் மஞ்சளும்.

தேவையான பொருட்கள்:
• 1 எலுமிச்சைப் பழம்.
• 2-3 தேக்கரண்டி மஞ்சள்.

பயன்படுத்தும் முறை:
எலுமிச்சைபழத்தை பிளிந்து சாற்றை எடுத்து அதில் மஞ்சளை கலந்து கொள்ளவும். அந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் நீரினால் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இவ்வாறு செய்வது சிறப்பானது.

2. எலுமிச்சைப் பழமுன் கற்றாளைச் சாறும்.
• 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு.
• 1 தேக்கரண்டி மஞ்சள் பவுடர்.
• 1 மேசைக்கரண்டி கற்றாளைச் சாறு.
• 1 மேசைக்கரண்டி கடலை மாவு.

பயன்படுத்தும் முறை:
மேற் குறித்த சேர்மானங்கள் எல்லாவற்றையும் பாத்திரம் ஒன்றில் எடுத்துக் கொள்ளவும். கற்றாளாச் சாற்றைப் பயன்படுத்தும் போது உடன் இலையி இருந்து எடுக்கப்பட்ட சாற்றை அல்லது கடையில் கிடைக்கும் சாற்றையோ பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பின்பு அதனை முகத்தில் முடிகள் அதிகம் உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை தொடர்ச்சியாக செய்வதனால் தேவையற்ற முடிகளை இலகுவாக நீக்க முடியும்.

3. எலுமிச்சை சாறும் கடலை மாவும்.

தேவையான பொருட்கள்:
• 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.
• 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்.
• 2 மேசைக்கரண்டி கடலை மாவு.

பயன்படுத்தும் முறை:
மேற்குறிப்பிட்ட சேர்மானங்கள் எல்லவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இந்தக் கலவையை உடலில் காணப்படும் தேவையற்ற முடிகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு:
இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன் முகத்திற்கு நீராவி பிடிப்பதனால் சருமத் துவாரங்கள் திறக்கப்படும். இக்தனால் இலகுவாக முடிகளை நீக்க முடியும். இந்த முறைகளைப் பின்பற்றிய பின் மொய்ஸ்டரைசர் கிறீம் ஒன்றைப் பயன்படுத்துவது சிறந்தது.

கவனத்தில் கொள்ள வேண்டியது.
மூன்று முறைகளிலும் மஞ்சளைப் பயன்படுத்துவதனால், முதலில் உங்களது சருமத்திற்கு இந்தக் கலவை ஒத்துப் போகிறதா என பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் சிலரின் சருமத்திற்கு மஞ்சள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்புக்கல் உள்ளன.