Home உறவு-காதல் பெண்களின் முழுமையான காதலை தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே

பெண்களின் முழுமையான காதலை தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே

86

காதல் உறவுகள்:உறவுகள் சேர்ந்து ஒரு பெண்ணையும், ஆணையையும் ஒருவர் மற்றொருவரின் வாழ்க்கை துணையாக சேர்த்து வைப்பதே திருமணம் எனும் அற்புத நிகழ்வாகும். திருமணத்தின் பின் அவர்கள் புரிதல், அன்பு, காதல் மற்றும் ஒருவருக்காக மற்றவர் விட்டுக்கொடுத்தல் என அனைத்தயும் பரிமாறிக் கொள்வார்கள். இங்கு சில கணவர்கள் தங்கள் மனைவியின் காதலை உணர்ந்த தருணத்தைப் பற்றி கூறுவதை பார்க்கலாம்.

1 கட்டியணைத்தல்
கட்டியணைத்து படுத்தல் பெண்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் என்பது தவறான கருத்து. அது எனக்கும் பிடித்தமான ஒன்று தான். என்ன தான் ஆண்கள் அவர்களது உணர்வுகளை கட்டுப்படுத்தினாலும் அது வெளிவந்துவிடும். அதை அவர்களால் மறைக்க முடியாது.

2 வீட்டு சாப்பாடு
“கணவர்களின் இதயத்தின் ஒரு பகுதி வயிற்றிலும் இருக்கிறது எனலாம்”.

வெளியிடங்களில் சாப்பிடுவதை விட என் மனைவியின் சமையலே எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்காக பார்த்து பார்த்து விரும்பியதை சமைப்பது பிடிக்கும். நான் எப்போதாவது சமைப்பேன். ஆனால், அதன் சுவை விடுதிகளில் கொடுக்கப்படும் உணவை போல் இருக்கும். நான் என் அம்மாவின் சமையலுக்கு பிறகு, பெரிதும் என் மனைவியின் சமையலை விரும்புகிறேன்.

3 மடியில் படுத்திருப்பது
நான் என் மனைவியின் மடியில் படுக்கும் போது நான் மிகவும் நன்றாகவும், ஓய்வாகவும் உணர்வேன். மேலும், என் மனைவி என் தலைமுடியில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பல சமயத்தில் நான் அவள் மடியிலேயே உறங்கி இருக்கிறேன். நான் தூக்கத்தில் இருந்து எழும் போது, அவள் அருகில் இருக்கும் தலையணையில் உறங்கி கொண்டிருப்பேன்.

இந்த காட்சிகள் எங்கள் காதலின் அடையாளமாக இருக்கிறது.

4 நடு இரவுப் பயணம்
உண்மையில், இரவு நேர நடைப்பயிற்சி எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுவும் குளிர்காலத்தில் வெளியில் செல்வது மிகவும் சிறந்த நேரமாக இருக்கும்.

அவள் குளிரில் நடுங்கும் போது, அவளை தழுவிக் கொள்ளுதல் மற்றும் அவள் அதை தடுக்காத அந்த அருமையான தருணத்தை சிறப்பானதாக உணர்கிறேன். இரவு நேர நடைப்பயிற்சி எங்களுக்கு மனப் புத்துணர்ச்சியுடன் காதலையும் புத்துணர்வு பெற செய்கிறது.

5 ஆச்சர்யம்
கடந்த வாரம், என் மனைவி எனக்கு ஒரு கிரிக்கெட் பேட்-வடிவ சாக்லேட் கேக் செய்தார். அவள் YouTube இல் பார்த்து அதை செய்திருந்தாள். நாங்கள் இருவரும் சிறிய விஷயங்களினால் கூட ஆச்சரியமடைகிறோம். சில விஷயங்கள் என்னை ஆச்சர்யப்படுத்த நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். என்னை ஆச்சர்யப்பட வைக்க அவள் செய்யும் சில யோசனைகளே, என்னை ஆச்சர்யப்பட செய்கிறது.

6 குளியல்
இதை நான் மிகவும் விரும்புகிறேன். இதை நாங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்கிறோம். பெரும்பாலும் காலையில் நான் விரைவில் குளித்து கிளம்பிவிடுவேன். ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நாங்கள் இருவரும் சேர்ந்து குளிப்போம். அவள் என் முதுகு புறத்தை சுத்தப்படுத்தி, ஷாம்புவினால் மென்மையாய் என் தலையை மசாஜ் செய்வாள். இது எங்களுக்கு இடையேயான காதலை அதிகரிக்கிறது.

7 நடனம்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நடனம் ஆடுவதை என் மனைவி விரும்புவாள். சில நேரத்தில் பார்ட்டிகள் மற்றும் எங்கள் படுக்கையறையில் மெல்லிய இசைக்கு நடனமாடுவோம். நாங்கள் நடனமாடும் போது, எங்களை மறந்து ஆடிக்கொண்டிருப்போம்.

8 உடல் தொடர்பு
எப்போது அவள் அனைவர் முன்னிலையிலும் என் கைகளை பிடித்து கொள்கிறாளோ, அதன் பின் எனக்கு அவள் நம்பிக்கையில் உலகிற் சிறந்தவளாக இருக்கிறாள். அதை விட காதலை வெளிப்படுத்தும் தருணம் இருக்க முடியாது என்பதை போல் உணர தோன்றும். இது என்னுள் காதலையும், பொறுப்புகளையும் அதிகரிக்கிறது.

9 வேலை செய்யும் போது மசாஜ்
வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவளது மசாஜ் என்னை சிறப்பாக உணர செய்கிறது. சில நிமிடங்களில், அவள் எனது மனஅழுத்தத்தை தொலைவிற்கு கொண்டு சென்று விடுகிறாள்.

நான் சில நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவள் மசாஜ் செய்ய வேண்டும் என காத்திருப்பேன். இது பார்க்க குறைவான காதலின் வெளிப்பாடாக இருந்தாலும், மிக சரியானதாக இருக்கும்.

Previous articleபெண்கள் பாலியல் தொடர்பான டாக்டர் சொல்லும் சில செய்திகள்
Next articleதிருமணத்திற்கு பின் ஆண்களுக்கு இடுப்பு வலி வந்தால் இவ்வளவு ஆபத்தா..?