Home சூடான செய்திகள் கட்டில் உறவு பற்றி உஙகளுக்குத் தெரியாத 8 விஷயங்கள்

கட்டில் உறவு பற்றி உஙகளுக்குத் தெரியாத 8 விஷயங்கள்

357

சூடான செய்திகள்:உடலுறவு என்பது வெறுமென கூடுதல் அல்ல. அப்படி வெறுமென கூடுதல் உங்களுக்கு உடல் ரீதியான, மன ரீதியான எதிர்வினைத் தாக்கத்தை தான் உண்டாக்கும்.

செக்ஸ் என்பது வெறும் இச்சை உறவல்ல. அது இன்னொரு உயிரை துளிர்விட செய்யும் இயக்கம். ஒரு பெண்ணை முழுமையடைய செய்யும், மகிழ்வுற செய்யும் உறவும் கூட.

டெண்டல் டேம்!

(Dental Dams), இவை ஓரல் செக்ஸ் (வாய்வழி செக்ஸ்) மூலமாக பால்வினை நோய் தொற்று உண்டாவதை தடுக்கும். டெண்டல் டேம்ஸ் எனப்படுவது செவ்வக வடிவத்தில் ஒரு ரப்பர் திசு போல இருக்கும். இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது மக்கள் பயன்படுத்துவது உண்டு. இது பால்வினை தொற்று பரவாமல் / ஏற்படாமல் தடுக்கிறது.

டெண்டல் டேம் எனும் இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் முன்னர் பெண்குறியில் / ஆசனவாய் பகுதியில் சரியாக பிளேஸ் செய்ய வேண்டும்.

அழற்சி!

ஆணுறை என்பது லேட்டக்ஸ் (Latex) எனும் ரப்பர் பொருளால் உருவாக்கப்படுகிறது. இது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு இதை பயன்படுத்தும் போது அழற்சி உண்டாகும். இதற்காகவே ரப்பர் அழற்சி இருக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் ஆணுறைகளும் விற்கப்படுகின்றன.

நூவா ரிங்!

நூவா ரிங் எனப்படுவது பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டியது ஆகும்.

இது குறைந்த அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் (Estrogen and Progestin) வெளிப்படுத்தும். இவை கருத்தரிக்காமல் இருக்க உதவும். நூவா ரிங் 98% கருத்தரிக்காமல் இருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

மருத்துவ ஆலோசனை!

கருத்தடை மாத்திரை, நூவா ரிங், தி பேட்ச், பர்த் கண்ட்ரோல் ஷாட் என கருத்தடைக்கு நீங்கள் எந்த முறையை கையாள போவதாக இருந்தாலும், அதற்கு முன்னர் தகுந்த மருத்துவ நிபுணரை கண்டு அவரிடம் உங்கள் உடல்நல நிலைக்கு எது ஏற்புடையது என்பதை கலந்தாலோசித்த பிறகு பயன்படுத்த துவங்க வேண்டும்.

ஒருசில மருத்துவ நிலை அல்லது உடல்நிலை வேறுபாடு, கோளாறு உள்ளவர்களுக்கு இவற்றின் மூலம் எதிர்வினை தாக்கம் ஏற்படுவும் வாய்ப்புகள் உண்டு.