Home பெண்கள் அழகு குறிப்பு முகத்தில் உள்ள வறண்ட தன்மையை மாற்ற அழகு குறிப்பு

முகத்தில் உள்ள வறண்ட தன்மையை மாற்ற அழகு குறிப்பு

73

பெண்கள் அழகு குறிப்பு:முகத்தில் எண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமத்தை போக்குவதென்பது இலவாக விடயம் அல்ல. இதற்காக பல ஆயிரம் பணத்தை செலவிட நேரிடுகின்றது.

எனினும் இயற்றையான முறையில் இதனை சரி செய்ய முடியும்.

சரி செய்வது எப்படி?

முறை ஒன்று

அப்பிளின் தோலை நீக்கி, நன்றாக மசித்து கொள்ளவும்.
அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.
அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
முறை இரண்டு

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவவும்.
சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவவும்.
அப்படி செயசருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
முறை மூன்று

மோரை முகத்தில் தடவிகொள்ளவும்.
15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவவும்.
சருமம் மிகவும் மிருதுவாகும்.
முறை நான்கு

எலுமிச்சையை பயன்படுத்தவும்.
அதில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கிவிடும்.
எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டுகொள்ள வேண்டும்.
அதனை முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும்.
இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கிவிடலாம்.
முறை ஐந்து

ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது.
ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம்.
உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
முக்கிய குறிப்புகள்..

உங்களால் முடிந்த வரை உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.
பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்
ரோஸ் வாட்டரை சருமத்திற்கு உபயோகிக்க வேண்டும்.

Previous articleஇளம்பெண்கள் பாலியல் தொடர்பாக மருத்துவரிடம் அறியவேண்டியது
Next articleதொப்பையை குறைக்க இலகுவான உடற்பயிற்சிகள்