Home பெண்கள் பெண்குறி தாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா?

தாம்பத்யத்தின் போது உணவு பொருட்களை உபயோகிக்கிறீர்களா?

62

banana
தாம்பத்தியம் என்பது கணவன் மனைவி இடையை அதிக நெருக்கத்தையும், புரிதலையும் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். திருமணமான ஆண், பெண் இருபாலருக்கும் தாம்பத்தியத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். தற்போதைய தலைமுறை இணையத்தில் கண்டதை பார்த்து அதையெல்லாம் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்று தான் உணவு பொருட்களை பயன்படுத்துவது. ஆனால், அதில் சில ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

1 இனிப்புகள்
ஜெல்லி, தேன், பீனட் பட்டார் போன்ற சுவையூட்டி உணவுகளை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பயன்படுத்த கூடாது. இது பெண்களின் பிறப்புறுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக பெண்ணுறுப்பில் ஈஸ்ட் போன்ற பாக்டீரியா தொற்று உண்டாக, இனிப்பு உணவுகள் காரணமாக இருக்கின்றன.

2 பழங்கள், காய்கறிகள்
பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தும் போது பெண்ணுறுப்பில் நோய் தொற்றுகள் எளிதில் ஏற்படும் அபாயம் உள்ளது. முக்கியமாக சிறியளவிலான காய்கறி, பழங்கள் போன்றவற்றை உபயோகிறார்கள். நீங்கள் என்னதான் காய்கறி, பழங்களை கழுவினாலும் கூட இவ்வகை உணவுகளில் எளிதாக மீண்டும் பாக்டீரியா தொற்று எளிதாக ஒட்டிக்கொள்ளும்.

3 மசாலா பொருட்கள்
சில வினோதமான தம்பதிகள் இனிப்பு சுவை சார்ந்த மசாலா பொருட்களை பயன்படுத்தி பிறப்புறுப்பில் எரிச்சல் அல்லது நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இவ்வகை உணவுகளை தாம்பத்தியத்தில் தவிர்ப்பது சிறந்தது.

4 அலர்ஜி
ஒவ்வொரு தனி நபருக்கும் அவரது உடல் கூறு சார்ந்து ஏதேனும் உணவை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு அலர்ஜி உண்டாகும். அவ்வகையான உணவுகளை தாம்பத்தியத்தின் போது பயன்படுத்த கூடாது, அவை கடுமையான சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

5 எண்ணெய்
தம்பதிகள் மத்தியில் வலியில்லாமல் தாம்பத்தியத்தில் ஈடுபட எண்ணெய் பயன்படுத்தும் முறை இருக்கலாம். ஆனால், பெண்ணுறுப்பில் எண்ணெய் பயன்படுத்தும் போது அதை முற்றிலுமாக நீக்க முடியாது. மேலும், இது பாக்டீரியாக்கள் எளிதாக அவர்கள் பிறப்புறுப்பில் அதிகரிக்க காரணியாக இருக்கின்றது. எனவே, கண்ட எண்ணெய்களை பயன்படுத்த கூடாது.

6 ஆல்கஹால்
நம் நாட்டில் இல்லை எனிலும், மேல்நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் பழக்கம் தான் இது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் சாம்பெயின் போன்ற மதுவை பீறிட்டு அடித்து மகிழ்வதுண்டு. ஆனால், இதுபோன்ற மது வகைகள் பெண்ணுறுப்பில் படமால் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருக்கும் இரசாயன பொருட்கள், பெண்ணுறுப்பில் எரிச்சல் உண்டாக காரணியாக அமையலாம்.

7 வெப்ப உணவுகள்
சிலவகை உணவுகள் சூட்டை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருக்கும். இவ்வகை உணவுப் பொருட்களை பயன்படுத்துவது, மென்மையான உட்சருமம் கொண்டுள்ள பெண்ணுறுப்பில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாக்கும்.

தாம்பத்தியத்தில் அதிக இன்பம் பெற தம்பதிகள் இவ்வகையான நடவடிக்கைகளை கையாள்கின்றனர். நோய் தொற்று உண்டாகாத வண்ணம் செயல்படுவதில் தவறில்லை. நோய் தொற்று ஏற்பட்டால் அதன் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.