Home இரகசியகேள்வி-பதில் உறவுமுறைப் பெண் வயது 33 என்னைத் தொட்டுப் பேசுகிறார்? என்ன செய்வது?

உறவுமுறைப் பெண் வயது 33 என்னைத் தொட்டுப் பேசுகிறார்? என்ன செய்வது?

1108

அந்தரங்க கேள்வி பதில்கள்:எனக்கு வயது 18. எனது உறவுமுறைப் பெண் ஒரு­வ­ருக்கு வயது 33. நெருங்கிய உற­வினர். எனது வீட்­டுக்கு அரு­கா­மை­யில்தான் இருக்­கிறார். கடந்த சில நாட்­க­ளா­கவே அவர் என்னைத் தொட்டுப் பேச ஆரம்­பித்­தி­ருக்­கிறார். அழ­கா­ன­வர்தான். அவ­ரது பார்­வையும் வித்­தி­யா­ச­மாக இருக்­கி­றது. இதற்கு என்ன அர்த்தம்?

பதில்:
நீங்கள் வய­துக்கு வந்­து­விட்­டீர்கள் என்று அர்த்தம்!
மாற்­றமும் வித்­தி­யா­சமும் அவ­ரிடம் இல்லை; உங்­க­ளிடம்தான் இருக்­கி­றது. நெருங்­கிய உற­வினர், வீட்­டுக்கு அரு­கா­மை­யி­லேயே அவ­ரது வீடும் இருக்­கி­றது. ஆரம்பத்திலிருந்தே அதா­வது, உங்­க­ளது குழந்தைப் பருவம் – முதலே அவர் உங்­களை ஒரு சகோ­த­ர­னா­கவோ அல்­லது தனது பிள்­ளை­யா­கவோ நினைத்­துத்தான் பழகி வந்­தி­ருக்­கிறார்.

ஆனால், குழந்­தை­யாக இருந்த நீங்கள் கும­ர­னாக மாறி­யதை உங்கள் மீதி­ருக்கும் அவ­ரது அன்பு வித்­தி­யா­ச­மாகப் பார்க்­க­வில்லை.
அவ­ருக்கு எப்­போதும் உங்கள் மீது இருந்­ததும் இருப்­பதும் பாசம் மட்­டுமே! அதனால்தான் இன்னும் உங்­களை ஒரு குழந்­தை­யா­கவே பாவித்து உங்­க­ளிடம் அன்பு செலுத்தி வரு­கிறார்.

ஆனால், நீங்­களோ நெஞ்சில் நஞ்சை வைத்­துக்­கொண்டு தாய்க்கு நிக­ரான ஒரு பெண்ணைத் தவ­றாக நினைக்க வைத்­தி­ருக்­கி­றது. நீங்கள் மட்­டு­மன்றி, உங்­களைப் போன்றே உங்கள் வய­து­டைய பலரும் இது­போன்ற தவ­றான எண்­ணத்தை வளர்த்­துக்­கொள்­கி­றார்கள். அதன் விளை­வுதான் முறை­கே­டான உற­வு­களும் வன்­பு­ணர்­வு­களும்!

பெண்­களின் அளவு கடந்த அன்பை பாலு­ற­வுக்­கான அழைப்பு என்று தவ­றாக அர்த்தம் கொண்டு விடா­தீர்கள். அவர்கள் ஆண்­களைத் தம் சக மனி­தர்­க­ளாக, அன்பு செலுத்­தப்­ப­ட­வேண்­டி­ய­வர்­க­ளாக எண்ணிப் பழ­கு­கி­றார்கள். பிறரை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வதன் மூலம் தானும் சந்­தோஷம் அடைய எண்ணும் அவர்­களை, மீட்க முடி­யாத படு­கு­ழியில் தள்­ளி­வி­டா­தீர்கள். உங்கள் வயதில் பாலு­ற­வுக்­கான நாட்­டமும் ஆர்­வமும் இருப்­பது இயற்­கையே! ஆனால், அன்­பையும் பாலு­ற­வுக்­கான தேவை­யையும் பிரித்துப் பழக இப்­போ­தி­ருந்தே முயற்சி செய்­யுங்கள்.

கேள்வி
எனக்கு வயது 33. எனது மனை­விக்கு 29. திரு­ம­ண­மாகி மூன்று வரு­டங்கள். எனது மனைவி இரண்டு முறை கருத்­த­ரித்­த­போதும் அவை கலைந்­து­விட்­டன. பிரச்­சினை என்­ன­வென்றால், நான் எவ்­வ­ள­வுதான் முயன்­றாலும் என் மனை­விக்கு தாம்­பத்­தி­யத்தில் திருப்தி வரு­வ­தே­யில்லை. இரவு வந்­தாலே மனம் பயம் கொள்­கி­றது. மனை­வியை நெருங்­கு­கையில், அவ­ரது முகத்தில் ஓர் அலட்­சியம் தெரி­வது போல் இருக்­கி­றது. இதனால் படுக்­கையில் என்னால் எதையும் சாதிக்க முடி­ய­வில்லை. தாம்­பத்­தியம் சுகப்­ப­டா­ததால், வீட்­டுக்குப் போவதே பெரும் தலை­வ­லி­யாக இருக்­கி­றது. என்ன செய்­வது?

பதில்
பேசுங்கள்.
‘உனக்குப் பிடித்த நிறம் என்ன?’, ‘உனக்குப் பிடித்த நடிகர் யார்?’ என்­றெல்லாம் கேட்டுக் காத­லிக்கத் தெரிந்த பல­ருக்கும், படுக்­கையில் ‘உனக்கு என்ன பிடிக்கும்? எப்­படிப் பிடிக்கும்?’ என்று கேட்­ப­தற்கு மட்டும் வாய் வரு­வ­தில்லை. நாம் என்ன இன்னும் ‘பரா­சக்தி’ காலத்­திலா இருக்­கிறோம்? ‘2.0’ காலத்தில் இருக்­கிறோம். இயந்­திர மனி­த­னுக்கே காதல் வந்­து­விட்­டது. நீங்கள் என்­ன­வென்றால்….!

படுக்கை என்­பது கணவன் – மனைவி இரு­வரும் பரஸ்­பரம் இன்­பத்தைக் கொடுத்து வாங்கும் இடம்! ஒருவர் விருப்­பத்­துக்கு மற்­றவர் மரி­யாதை செலுத்த வேண்டும். ஒருநாள் உங்­க­ளுக்குப் பிடித்த மாதிரி என்றால், மறுநாள் அவ­ருக்குப் பிடித்த மாதிரி! இப்­ப­டி­யாக, சந்­தோ­ஷத்தை கொடுத்து வாங்க வேண்டும். அதற்கு, பரஸ்­பரம் ஒரு­வ­ரை­யொ­ருவர் நன்கு புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

‘படுக்­கையில் என் மனைவி என்னை அலட்­சி­ய­மாகப் பார்க்­கிறார்’ என்­கி­றீர்­களே…. ஹோட்டல் ஒன்றில் 150 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு தோசை உப்புச் சப்­பில்­லாமல் இருந்தால் உங்­க­ளுக்கு எப்­படிக் கோபம் வரு­கி­றது? அது­போ­லத்­தானே இதுவும்?

ஒரு­வேளை, இரண்டு முறை கருத்­த­ரித்தும் அவை கலைந்­தது கூட, காமத்­தினால் உங்கள் மனை­வியின் மனம் நிறை­வு­றா­த­த­னால்­தானோ என்­னவோ!
எனவே, முதலில் உங்கள் மனை­விக்கு என்ன வேண்டும், எப்­படி வேண்டும் என்று கேட்டுக் கேட்டுப் பரி­மா­றுங்கள், தாம்­பத்­தியம் இனிக்கும்!