Home ஆரோக்கியம் இந்த உணவுகள் எல்லாம் ஆபத்தானவை! மக்களே உஷார்

இந்த உணவுகள் எல்லாம் ஆபத்தானவை! மக்களே உஷார்

29

நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில மிக ஆபத்தானவை என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

சில உணவுகள் எந்த வித சந்தேகமும் இன்றி உலகிலேயே மிகவும் ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதோடு பல கொடுமையான நோய்களுக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகின்றன.

பல உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன என்பது உண்மை என்றாலும் அதே சமயம் உலகின் மிக ஆபத்தான உணவுகள் உடலுக்குத் கேடு விளைவிக்கக் கூடிய உணவுகளாக நிரூபிக்கப்பட்டவையாக உள்ளன.

பதப்படுத்தப்பட்ட சிப்ஸ்

இவை சுவை கூட்டச்செய்ய பெரும்பாலும் எம்எஸ்ஜி எனப்படும் மோனொசோடியம் க்ளூட்டாமெட் எனப்படும் உப்பைக் கொண்டவை. சாதாரண உப்பைப் போல் அல்லாமல், இது கார்சினோஜன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் காரணியைக் கொண்டது.

குளிர்பதனப் பொருட்கள்

பல உணவகங்கள் இந்த விதமான உணவுகளை நல்ல தரம் வாய்ந்த உணவு என்று சொல்லி உங்களுக்குத் தருவதுண்டு. உணவகங்களில் தரப்படும் இந்த குளிர்பதனப் பொருட்கள் மிகவும் ஆபத்து நிறைந்த உணவுகள். முக்கியமாக கேன்சரை உருவாக்கும் பெரும்பாலான காரணிகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன.

வெள்ளை சாதம்

வெள்ளை சாதம் உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து ஆகியவற்றை, தொடர்ந்து பல வருடங்களுக்கு உண்டு வந்தால், இவை உடலுக்கு கவலை அளிக்கக்கூடியதாக மாறலாம்.

சோடா பானங்கள்

சோடா அல்லது கோலா பானங்கள், அதிக அளவு சர்க்கரையைக் கொண்டவை. கேன்சர் செல்கள் அதிக சர்க்கரை மூலமாக பெருகுகின்றன. எனவே எல்லா குளிர்பானங்களும், சோடாக்களும் மிகவும் ஆரோக்கியக் கேட்டினைத் தரக்கூடியவை.

பர்கர்

பெரும்பாலான பர்கர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டவை. இவை உப்பை அதிகமாகக் கொண்டுள்ளதோடு, இதில் உபயோகப்படுத்தப்படும் சாஸ் எனப்படும் சுவையூட்டிகள், சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் உடலுக்கு ஆபத்தான கொழுப்பைக் கொண்டவை.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

ஆரோக்கியமற்ற ஆபத்தான கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கும் நோய்களின் பட்டியலில் நிச்சயம் இந்த மைக்ரோவேவ் பாப்கார்ன் இடம் பிடிக்கும். இதில் சுவையூட்டப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் ஊறு விளைவிக்கும் உப்பின் அளவு இடம் பெற்றுள்ளது.

செயற்கை சுவையூட்டிகள்

செயற்கையான உணவுச் சுவையூட்டிகள் மற்றும் செயற்கையான இனிப்பூட்டிகள் மிகவும் கொடியவை. மிகவும் ஆபத்தான நோய்களை இவை ஊக்குவிக்கும்.

அதிக அளவு உப்பு கொண்ட பொருட்கள்

அதிக அளவு உப்பு கொண்ட அனைத்து உணவுப் பொருட்களும் இதில் அடக்கம். இந்த அதிக அளவு உப்பு உடலுக்குக் கொடியது. உப்பிடப்பட்ட பண்டங்களை நீங்கள் உண்டால், உடல் எடையைக் குறைப்பது கடினமாகிறது.

எண்ணெய் உணவுகள்

எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவே உண்ணுங்கள். இதில் உபயோகப்படுத்தப்படும் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமற்றவை.