Home அந்தரங்கம் தினசரி உடலுறவின் விளைவுகள் என்னென்ன?

தினசரி உடலுறவின் விளைவுகள் என்னென்ன?

57

உடலுறவு என்பது இன்பத்தை அடைந்து குழந்தையை பெறுவதற்கான வழி மட்டும் அன்று. உடலுறவினால், ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்களில் மிக முக்கியமான வளர்சிதை மாற்றங்களை பெறுகின்றனர். அப்படியென்ன உடலியல் மாற்றங்கள்..?? வாருங்கள் நண்பர்களே! அந்த மாற்றங்கள் என்னவென்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்…

தினசரி உடலுறவு
தினம் உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆரோக்கியமானது தான்; இவ்வாறு உடலுறவு கொள்வதால், உங்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இல்லை எனில் அது உங்களது விந்தணுக்களை பாதிக்காது. சமீபத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் தினம் உடலுறவு வைத்துக் கொள்வதால், விந்தணுக்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளன; மேலும் குறைவான விந்தணுக்களை கொண்டு உள்ளவர்களுக்கு தினம் உடலுறவு கொண்டால் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான விந்தணுக்கள்
நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்கையில், குறைவான விந்தணுக்கள் தானுள்ளது என மருத்துவர் தெரிவித்து விட்டால், நீங்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பது கருவுறுவதை தாமதமாக்கும். ஒவ்வொரு முறையும் ஆணின் விந்தணுக்கள் வெளியேறுவதால், ஆணின் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது; விந்தணுக்கள் மீண்டும் அதிகரிக்க சிலபல காலம் தேவைப்படுகிறது. விந்தணுக்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும்; விந்தணுக்கள் மீண்டும் உருவாக 24-48 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். 36 மணிநேர இடைவெளியில் உடலுறவு கொள்வது கரு உருவாக வழிவகுக்கும்.

கால இடைவெளி
கால இடைவெளி பற்றி நடந்த ஆராய்ச்சிகளில், ஆண்கள் தினசரி 1 மாத காலம் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனும், டி.என்.ஏக்களும் முழுமை பெறுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 3-5 நாட்கள் கால இடைவெளிகளில் உடலுறவு கொள்வதால், ஆணின் விந்தணுக்களின் திறனில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுவதில்லை. தினசரி உடலுறவால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது, விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான். பிறர்க்கு தினசரி உடலுறவு ஆரோக்கியமானதே. குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை உள்ளவர்கள், மாதவிடாய் நெருங்கும் காலங்களில் உடலுறவு கொள்வது கருவுற வழிவகுக்கும்.