Home இரகசியகேள்வி-பதில் ஆணுறை பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கொடுக்குமா?

ஆணுறை பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கொடுக்குமா?

329

பாலியல் கேள்வி பதில்கள்:கேள்வி?உலகத்தில் எந்த மக்கள் அதிகமாக செக்ஸ் இன்பம் அனுபவிக்கிறார்கள் ?

பதில் :

அண்மையில் நடந்த உலக ஆய்வின்படி உலகிலேயே பிரெஞ்ச் மக்கள் அதிக முறை பாலுறவு
கொள்கிறார்கள். ஓர் ஆண்டில் சராசரியாக 140 முறை. உலகத்திலுள்ள மற்ற நாடுகளில் சராசரியாக 120 முறை
மட்டுமே பாலுறவு இன்பம் அனுபவிக்கிறார்கள் . தென்னிந்தியாவில் சராசரியாக 120 முறையும் , வடமேற்கு இந்தியாவில்
ஆண்டுக்கு 60 முறையும் பாலுறவு கொள்வதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன .

—————–

கேள்வி ?

பலவகை வடிவங்களில் ஆணுறை வெளியிடுகிறார்கள் . விற்பனை செய்கிறார்கள் . கூடுதல் சுகம் அளிக்கிறது என்றும் கூறுகிறார்கள் . பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் அளிக்கிறது என்றும் கூறுகிறார்கள் . பல வடிவங்களில் இருப்பதால் கூடுதல் சுகம் கிடைக்குமா ?

பதில் :

இவையெல்லாம் வணிக நுட்பங்கள். முதன்முதலில் நமது நாட்டில் குழந்தை பிறப்பை தடுக்க ஆணுறை வழங்க பட்டது . ஆனால் , அதை யாரும் வாங்கி உபயோகிக்கவில்லை. இன்றும் அதே
நிலைதான் .

பிறகு , செக்ஸினால் பரவும் நோய்களை ஆணுறை தடுக்கும்னு என்ற போதும் பலர் இதை பயனப்டுத்த வில்லை . பயன்படுத்துவதால் இன்பம் குறைவு என கருதினர். எய்ட்ஸ் வந்த பிறகு படித்தவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது . ஆயினும் இன்றும் பெரும்பாலோர் ஆணுறையை பயன்படுத்துவதில்லை.

எனவே , ஆணுறையை பற்றிய கண்ணோட்டத்தை மாற்றினால்தான் . தங்கள் சரக்கு விற்கும்
எனபதால் உலகம் முழுவதும் ஆணுறை தயாரிப்பாளர்கள் , செக்சில் இன்பத்தை ஆணுறை அதிகரிக்கும் எனக்கூறி பலவித மாற்றங்களை செய்கிறார்கள் .

பல வன்ணங்களில் , வாசனையாக , முள்ளு முள்ளாக , வரி வரியாக , ஸ்பைரலாக வளைவாக , பாலுறவுக்கான உயவு பொருள்களுடன் , விரல்களில் மாட்டிகொண்டு தூண்டும் ஆணுறை , ஹனிமூன் பேக் என பல வகைகளில் தயாரித்து விளம்பரம் செய்து மக்களின் ஆர்வத்தை தூண்டுகிறிர்ர்கள் .

இப்போது எல்லோருடைய ஆர்வத்தையும் இது கவர்ந்திருக்கிறது . இவற்றால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடு இல்லை . ஆனால் , இவ்வாறு ஆர்வத்தை தூண்டுவதால் சமூகத்துக்கு நன்மைதானே.
——————————————————
கேள்வி ?

எனக்கு திருமணமாகி இரண்டு மாதங்களாகின்றன . மனைவி கர்ப்பமாக இருப்பதை எப்படி அறிவது ? முதல் மாதத்திலிருந்து எத்தனை மாதங்கள் வரை பாலுறவு கொள்ளலாம் ?

பதில் :

உங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே அவசரப்படுகிறீர்கள் . மாதவிலக்கு தள்ளிப்போவது , வாந்தி , மயக்கம் ஆகியவை இருந்தால் உடனே சிறுநீர் பரிசோதனை செய்து கர்ப்பமாக இருப்பதை அறியலாம் .

உடல் நலத்தோடு உள்ள தம்பதிகள் கர்ப்பகாலம் முழுவதிலும் பாலுறவு வைத்து கொள்ளலாம்.

மருத்துவர் ஏதேனும் காரணத்துடன் பாலுறவு கொள்ளாதீர்கள் என அறிவுரை கூறினால் மட்டும் பாலுறவை தவிர்க்க வேண்டும்.

——————————————
கேள்வி ?

நான் ஓரின சேர்க்கையில் அதிக நாட்டம் உள்ளவனாக இருந்தேன் . என் மனதில் ஏற்பட்ட பயத்தால் அதனை விட்டுவிட்டேன். ஆனால் வாரத்துக்கு நான்கு அல்லது மூன்று முறை சுய இன்பம் அனுபவிப்பேன் . மேலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது என் மனம் ஒத்துழைத்ததே தவிர என் உடல் ஒத்துழைக்கவில்லை. என் அருகில் ஆண் அல்லது பெண் இருந்தால் என் உறுப்பு விறைப்படைவதில்லை. எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறர்ர்கள். வரும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியுள்ளேன் . ஆனால் ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றுகிறது . இன்பமாக வாழ வழி சொல்லவும் ?

பதில் :

ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு இது போன்று சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை. ஓரின
சேர்க்கையில் பலருடன் தொடர்பு கொள்வதால் இது போன்ற பால்வினை நோய்கள் மற்றும் குற்ற உணர்வால் ஆண்மை குறைவு ஏற்படலாம் . மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பும் உண்டு . ஓரின சேர்க்கை பிரச்னையை முழுமையாக குணப்படுத்த முடியும் . நீங்கள் விரும்புவதுபோல் நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும்.