Home இரகசியகேள்வி-பதில் ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் பாலியல் கேள்விகள் அவற்றின் பதில்

ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் பாலியல் கேள்விகள் அவற்றின் பதில்

519

இரகசியகேள்வி-பதில்:மரபணு, உடல் உழைப்பு குறைப்பாடு, உணவு பழக்கத்தில் மாற்றம், டிஜிட்டல் உபகரண பயன்பாடு, நோய், உடல் எடை, வாழ்வியல் மாற்றம், மரபணு மாற்றப்பட்ட விதைகள், காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக், கெமிக்கல் என பல காரணத்தால் இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஆண்மை மற்றும் கருவள குறைபாடு காணப்படுகிறது. ஆண்களில் பலர் விறைப்பு கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதுப்போக சுய இன்பம் காணுதலால் கூட இந்த பிரச்சனை வருமா என சிலர் சந்தேகிக்கிறார்கள். சுய இன்பம் காண்பது தவறல்ல… ஆனால், அதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் இடைவேளை மற்றும் வயது என்ன என்று சில கேள்விகளுக்கு சரியான, தெளிவான விடைகள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். இங்கே, கலவி உறவு மற்றும் அந்தரங்க உறுப்பு சார்ந்த குழப்பம், கேள்விகளை வெளிப்படையாக கேட்க பலரும் தயங்குகிறார்கள். அப்படி இந்திய ஆண்கள் கேட்க தயங்கும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்…

கேள்வி #1 என் ஆண்குறி பெரிதாகவும், வலிமையாகவும் தான் இருந்தது. ஆனால், தற்போது விறைப்பு குறைவாகவும், சிறியதானது போல உணர்கிறேன். அதன் கரணம் என்ன? மூன்று மாதங்கள் முன்பு வரை என் ஆண்குறி நல்ல விறைப்புடன், பெரியதாக தான் இருந்தது. ஆனால், கடந்த ஓரிரு மாதங்களாக அது முன்பு போல விறைப்பு அடையாமலும், சிறியதாகவும் இருப்பது போல, நானும், என் துணையும் கருதுகிறோம். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில் #1 வயதாவதை சார்ந்து விறைப்பு குறைய வாய்புகள் உண்டு. வயதாகும் போது ஹார்மோன்களில் தாக்கம் ஏற்படும். அதனால் விறைப்பில் குறைபாடு ஏற்படலாம். அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் காரணமாகவும், சர்க்கரை நோய் தாக்கத்தினாலும் விறைப்பில் குறைபாடு உண்டாக வாய்ப்புகள் உண்டு. இதனால், நீண்ட விறைப்பு ஏற்படாமல் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, இதற்கு தீர்வாக சில மருந்துகள் கொடுக்கப்படும். அதன் விளைவை ஓரிரு நாட்கள் ஆராய்ந்து.. பலன் அடைய முடியும். சில முறை உளரீதியான காரணத்தாலும் விறைப்பில் பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு. இதை உளவியலாளர்களுடன் கவுன்சிலிங் சென்று சிகிச்சை பெற்று தீர்வுக் காணலாம்.

கேள்வி #2 5.5 அங்குலம் அல்லது அதற்கும் குறைவாக தான் இந்தியர்களின் ஆண்குறி அளவு இருக்குமா? எனக்கு இதற்கான பதிலை அறிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. என் ஆண்குறி அளவு 5.5 அங்குலம் தான். பல சமயம் இந்தியர்களின் ஆண்குறியின் சராசரி அளவு 5.5 அங்குலம் தான் என்று பல இடங்களில், இணையதளங்களில் படித்திருக்கிறேன். ஆகையால், இதுக்குறித்த தெளிவான பதில் அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்.

பதில் #2 இது மிகவும் இயல்பானது தான். எனவே, இதுக்குறித்து அதிக சந்தேகம் கொள்ள வேண்டாம்.

கேள்வி #3 என்னால் விறைப்பை நீடித்திருக்க செய்ய இயலவில்லை. சுய இன்பம் காண்பதால் தான் இத்தகைய தாக்கம் ஏற்படுகிறதா? எனக்கு வயது 20. வாரத்தில் நான்கைந்து முறை சுய இன்பம் காண்கிறேன். இதனால், துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது சில சமயம் சரியாக உடலுறவில் ஈடுபட முடிவதில்லை. சில சமயம் அதன் அளவு திடீரென குறைந்து விடுகிறது. இதற்கு சுய இன்பம் காணுதல் தான் காரணமா?

பதில் #3 அதிகமாக சுய இன்பம் காணுதல் விறைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. இருபது வயதில், இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இல்லை. எனவே, ஹார்மோன் பிரச்சனைகள் ஏதேனும் இருக்கலாம். முடிந்த வரை சுய இன்பம் காணுதலை தவிர்த்துவிடுங்கள். இதனால் கூட, உடலுறவில் ஈடுபடும் போது பெனட்ரேட் செய்ய முடியாமல் போகலாம். சில சமயம் சுய இன்பம் காணுதல் மூலமாகவும் கூட விறைப்பில் குறைப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, இதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை என்பது சாதாரணம். தாக்கம் பெரியதாக இருந்தால் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

கேள்வி #4 ஆண்குறி மேல் தோல் காயத்தினால், ஆண்மை குறைய வாய்ப்புகள் உண்டா? நான் ஒருமுறை அலுவலக ரெஸ்ட்ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு ஜிப் மாட்டும் போது, ஆண்குறி மேல்தோல் மாட்டிக் கொண்டது. அந்த சமயத்தில் ஒரு மீட்டிங் அட்டன்ட் செய்ய கால் வந்ததால், அவசரமாக இழுத்த போது, மேல் தோலில் சராய்ப்பு காயம் ஏற்பட்டு இரத்தம் வர துவங்கிவிட்டது. ஒருசில நாளில் அந்த காயம் ஆறிவிட்டது என்ற போதிலும், இதனால் ஆண்மை குறைப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

பதில் #4 இது மிகவும் வலி மிகுந்த சம்பவம் தான். காயம் ஆறிவிட்டது என்றாலும். ஒருவேளை உட்பாகத்தில் தசையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நீங்கள் Urologist நிபுணரை நேரில் சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். சிலர் டெஸ்ட் மூலம் என்ன, ஏது என்று அறிந்துக் கொள்ளலாம். ஏதேனும் பிரச்சனை என்றால் மருந்துகள் மூலம் அதை சரி செய்துக் கொள்ள முடியும். இதனால், ஆண்மை குறைப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.

கேள்வி #5 என் ஆண்குறி எப்போதும் சுருங்கிய நிலையிலேயே இருக்கிறது என் ஆண்குறி காரணத்தால் நான் மிகவும் வருந்துகிறேன். என் முன் ஒரு பெண் செக்ஸியாக இருந்தாலும், ஆடைகளை அகற்றி நிர்வாணமாக இருந்தாலுமே கூட என் ஆண்குறி விறைப்பு அடைவதில்லை. நீண்ட நேரம் சுய இன்பம் கண்டால் தான் ஸ்ட்ராங்காக உணர்கிறேன். ஊடுருவும் வகையிலான உடலுறவில் துணையுடன் நீடித்து ஈடுபட முடியவில்லை. இதற்கு என்ன தீர்வாக இருந்தாலும், அதை முயற்சிக்க நான் தயாராக இருக்கிறேன்.

பதில் #5 இது எத்தனை நாட்களாக இருக்கிறது என்ற தெளிவான விபரம் தேவை. முன்பு விறைப்பு சரியாக இருந்து, சமீப காலத்தில் இந்த மாற்றமா? இல்லை ஆரம்பத்தில் இருந்தே இப்படி இருக்கிறதா? நீங்கள் Urologist மருத்துவரை அணுக வேண்டும்.

இது விறைப்பு குறைபாடு பிரச்சனையாக இருக்கலாம். மருந்துகள் மூலம் இதை சரி செய்யலாம். ஹார்மோன் காரணங்கள், உடல்நிலை, மரபணு சார்ந்தும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, மருத்துவர் உங்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே என்ன தீர்வு என்று கண்டறிய முடியும்.

Previous articleபெண்களின் மார்பகத்தில் ஏற்படும் அரிப்பு தொடர்பான பிரச்சனைகள்
Next articleஆண் பெண் உடல் சூட்டால் உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்