Home பெண்கள் பெண்குறி அந்தரங்க உறுப்பை தூய்மையாக பேண சில டிப்ஸ் இதோ…..

அந்தரங்க உறுப்பை தூய்மையாக பேண சில டிப்ஸ் இதோ…..

172

உங்கள் அந்தரங்க உறுப்பை தூய்மையாக பேண சில டிப்ஸ் இதோ…..

சீறுநீர் கழித்தபின் பெண் உறுப்பை நீரினால் சுத்தம்செய்து பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இவ்வாரு செய்யாவிடின் பெண் உறுப்பின் ஈரப்பதன் காரணமாக பக்டீரியா தொற்று ஏற்பட்டு பெண் உறுப்பில் துர்நாற்றம் ஏற்படும்.

பெண்கள் தாம் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சுகாதார துவாய்களை 5 மணித்தியலாத்திற்கும் மேல் பயன்படுத்துதல் பெண் உறுப்பில் துர்நாற்றம் மற்றும் அரிப்பு ஏற்பட காரணமாகின்றது.

இறுக்கமான உள்ளாடைகள் அணிவதன்காரணமாக கற்றோற்றம் இன்மையால் பெண் உறுப்பில் வியர்வை உறுவகும். வியர்வையின்காரணமாக பெண் உறுப்பில் பக்டீரீயா தொற்று ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

பெண் உறுப்பானது இயற்கையாகவே அதன் ph மட்டத்தை பேணுகின்றது. பெண்கள் சவற்காரம் மற்றும் கேமிகல் கிலியரன்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி பெண் உறுப்பை சுத்தம் செய்வதால் பெண்உறுப்பின் ph ( 3.8-4.5) மட்டத்தில் மாற்றம் ஏற்படுவதன் காரணமாக பாதிப்பு ஏற்படும்.

பெண்கள் பெண் உறுப்பில் வளரும் முடியை ஷேவிங் செய்ய ஒவ்வெரு முறையும் புதிய பிலேடை பயன்படுத்தவேண்டும். பழைய பிலேடை பயன்படுத்துவதால் பெண் உறுப்பில் தொற்று ஏற்படுகின்றது.

பொண் உறுப்பை சுற்றி உள்ள பகுதிகளை அழுத்தமான பொருட்கள் கொண்டு தேய்ப்பதன் காரணமாக காயங்கள் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும்.

பெண் உறுப்பில் மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் திரவம் வெளியேறுமாயின். கண்டிப்பாக வைத்தியரை அனுக வேண்டும்.