Home பாலியல் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும் பப்பாளி

மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும் பப்பாளி

11

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி…

இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலை தரக்கூடியவை. அதிலும் 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! பூப்பெய்தும் வயதில் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவங்களுக்கு ஆதாரம்.

பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கடக்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம்மாக்களின் பொறுப்பு. பூப்பெய்திய முதல் சில மாதங்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் இருப்பது சகஜமே.

அதிக பட்சம் ஒரு வருடத்துக்குள் அது முறைப்பட்டு விடும். ஆரோக்கியமான பெண்ணுக்கு 28 நாள்களுக்கொரு முறை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர்ச்சியான உடல்வாகு, தைராய்டு, சினைப்பை அல்லது கருப்பையில் பிரச்சனைகள்…

இப்படி ஏதேனும் இருந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும். முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு, புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுந்தங்களி, வெந்தயக்களி, எள்ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிறது.

பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதிரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பலப்படுத்த முடியும். தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் வரலாம்.

மூன்றே மாதங்களில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட்டுத்தான் போகும்.

உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது எல்லாம் ஹார்மோன் மருந்துகளின் வேலை! மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் தண்ணீரிலிருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கும் பங்குண்டு.

பப்பாளியும், அன்னாசியும் பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துபவை. வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகும். முருங்கைக்கீரை, முதுகெலும்பை வலுவாக்கும். தினம் மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண்டாது.

Previous articleதலை அரிப்பை தடுக்க வேண்டுமா?
Next articleஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?