Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை தெரிந்து கொள்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை தெரிந்து கொள்வது எப்படி?

36

Captureஇந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்துக்கும் ஒரு பாலியல் பலாத்கார குற்றம் பதிவாகிறது, ஒரு வருடத்தில் 7,200 குழந்தை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பாலியல் தொந்தரவை அனுபவித்த குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவர். அது அவரவர் வளர்ப்புச் சூழ்நிலையை பொருத்து அமையும். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே கொடூரர்களின் எளிய இலக்கு என்பதை முதலில் உணர வேண்டும்.

* 6-7 வயது குழந்தை, வழக்கத்துக்கு மாறாக சற்றுமுன் கழிப்பறை சென்று வந்திருந்தால்கூட படுக்கையறையில் கழித்தால் அதற்கு பாலியல் தொந்தரவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அவர்களை திட்டாமல் அமைதியாக அணுகினால் உண்மை என்ன என்பது தெரியும்.

* நடத்தையில் திடீர் மாற்றம். உதாரணமாக, அமைதியான குழந்தை திடீரென்று கத்துவது, சேட்டை செய்யும் குழந்தை வித்தியாசமாக அமைதியாக இருப்பது. அவர்கள் மனதில் ஆழமாக இதனை யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி நடக்கலாம்.

* இரவில் கெட்ட கனவுகள் கண்டு அலறுவது, பெற்றோர்கள் இல்லாமல் உறங்க மறுப்பது… இவையும் குழந்தைகள் பாதுகாப்பின்மை உணர்ந்தால் நடக்க கூடிய செயல்கள்.

* பிடிப்பில் வழக்கத்துக்கு மாறான சரிவு.

* யாரிடமும் பார்க்க, பேச விருப்பமில்லாமல் இருப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட நபரிடம் போக விருப்பமில்லாமல் இருப்பது.

* தொடர்சியான வயிற்று வலியில் அவதிப்படுவது. சிறு வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தால் இப்படி நடக்கும்.

* 9-11 வயது பெண் குழந்தை திடீரென தன்னை அலங்கரித்து கொள்ளாமல், அழுக்காக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிப்பது.

* 12-14 வயது குழந்தை 4-5 நாட்கள் தலை வாரிக் கொள்ளாமல் இருப்பது. 2-3 ஆடைகளை ஒன்றின்மேல் ஒன்று அணிந்து கொள்வது. இவையாவும் அவர்களை யாராவது ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்திருந்தால், அதனை தடுக்க / மறைக்க இவ்வாறு நடந்து கொள்வார்கள்.

* பள்ளியில் வழக்கத்துக்கு மாறாக அனைத்துப் பாட வேளையிலும் தூங்குவது மற்றும் யாரிடமாவது சண்டை போடுவது. இவையாவும் தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பதால் வெளிப்படும் கோபத்தின் செயல்கள்.

* எல்லா செயலிலும் குழப்பத்துடன் இருப்பது; பேசும் வார்த்தையில்கூட குழப்பம் இருப்பது. இவை பெரும்பாலும் குழந்தைகள் தனக்கு நடந்ததை யாராவது அறிந்து விடுவார்களோ என்று எச்சரிகையாக பேசுவதாக எண்ணி குழப்பத்துடன் பேசுவார்கள்.

இந்த செயல்கள் யாவும் அன்றாடம் நடக்கக் கூடிய செயல்களாக தெரியலாம். ஆனாலும், உங்கள் குழந்தை ஏன் இப்படி செய்கிறார்கள் இன்று பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

“முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். இதுவரை நாம் கடந்து வந்த குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அனைத்திலும் தவறு செய்யும் எந்த ஒரு நபரும் தன் வேலையை முதலில் காட்டுவதில்லை. அந்த குழந்தையை நெடு நாட்கள் நோட்டம்விட்டு பிறகு தான் ஆரம்பிக்கின்றனர்.

அதே போல் ஒரு குழந்தையும், இது போன்ற சம்பவங்கள் நடந்த உடனே அதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அவை சில மாதங்கள், சில சமயங்களில் வருடங்கள்கூட ஆகலாம். சில நேரங்களில் அந்தக் குழந்தை கோமாவுக்கு கூட செல்ல வாய்புள்ளது.