Home உறவு-காதல் செல்போன் பேசும்போது நீங்கள் இதெல்லாம் செய்வீங்களா?… அப்போ இனி செய்யாதீங்க..

செல்போன் பேசும்போது நீங்கள் இதெல்லாம் செய்வீங்களா?… அப்போ இனி செய்யாதீங்க..

19

செல்போனைக் கையில் எடுத்துவிட்டால் நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பலர் இருப்பதுண்டு. செல்போனில் மூழ்கிப் போய்விடுவதுண்டு. ஆனால் செல்போன் பயன்படுத்துகிற எல்லோருமே கீழ்வரும் தவறுகளைச் செய்கிறோம்.

அப்படி நாம் எல்லோரும் செய்யும் இந்த பொதுவான தவறுகளால் ஏராளமான பிரச்னைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உண்டாகின்றன. அதனால் கீழ்வரும் தவறுகளை நீங்களும் இதுவரையில் செய்திருந்தால் இன்றோடு அதை விட்டுவிடுங்கள்.

அப்படி செல்போன் பேசும்போது என்ன மாதிரியான தவறுகளை நாம் செய்கிறோம்?

1. ஒரு எண்ணுக்கு டயல் செய்துவிட்டு ரிங் போய்க் கொண்டிருக்கிறதா என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தான் பலரது பழக்கம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. அந்த சமயத்தில் தான் செல்போனிலிருந்து அதிக அளவிலான கதிர்வீச்சுகள் வெளியேறும்.

அதனால் டயல் செய்துவிட்டு முகத்துக்கு சற்று தள்ளியே வைத்திருங்கள். எதிர்முனையில் இருப்பவர் போனை எடுத்தபின் காதில் வைத்துப் பேசுங்கள்.

2. இரவு தூங்கச் செல்லும்போது முக்கிய அழைப்பு வருவது போல், தலைக்கு மிக அருகாமையில் வைத்துக் கொள்வது. செல்போனின் கதிர்வீச்சு வெளியாகி மூளையைத் தாக்கும். நிம்மதியான தூக்கத்தை அது முற்றிலும் கெடுத்துவிடும். அதனால் தூங்கும்போது படுக்கைக்கு அருகில் வைக்க வேண்டாம்.

3. வீட்டில், அலுவலகத்தில் இருக்கும்போது, செல்போனை எப்போதும் கையிலும் பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டே இருக்கக்கூடாது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மழை பெய்து கொண்டிருக்கும்போது, இடி, மின்னல் வரும்போது செல்போனை அருகில் வைத்துக் கொள்ளாதீர்கள். அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள். ஏனெனில் மின்னல், இடியிலிருந்து வரும் கதிர்வீச்சுகளை இழுக்கும் தன்மை செல்போனுக்கு உண்டு.

இதுபோன்ற தவறுகளைத் தவிர்த்து இனியாவது செல்போன் விஷயத்தில் கவனமாக இருக்கலாம்.