Home பெண்கள் அழகு குறிப்பு முகம் அழகு பெற எட்டு எளிய குறிப்புகள்

முகம் அழகு பெற எட்டு எளிய குறிப்புகள்

76

பொதுவாக அழகு என்றாலே பெண்கள் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் அந்த அழகை எல்லோரும் பாதுகாக்கிறார்களா என்றால், இல்லை. ஒருசிலர் மட்டுமே, அதுவும் பணியில் இருப்பவர்கள் மட்டும், மற்றவர்கள் முன் தன்னை அழகாக காட்ட வேண்டும் என்று நினைத்து, ஏதேதோ புதிதாக வந்துள்ள கிரீம்களை எல்லாம் உபயோகப்படுத்தி, முகத்தை வீணாக்குகிறார்கள்.

நம்முடைய முகம் ஒரு குழந்தையின் தோலைப் போன்று, மிகவும் மெருதுவாக இருக்கும். அதில் ஓரளவுக்கு மட்டுமே நாம் கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக கிரீம்களை உபயோகப்படுத்தினால், முகத்தோல் வீணாகி, சுருங்கி வயதானவர்கள் போன்று தோற்றமளிக்கும்.

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி “பியூட்டி பார்லல்” க்கு சென்று அடிக்கடி ஃபேசியல் செய்தால், தோல் வறண்டு, முகம் மாறிவிடும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஃபேசியல் செய்தால் போதும்.

முதலில் செல்லும்போது, யாரும் கோல்டன் ஃபேசியலோ, அல்லது மற்ற ஃபேசியலோ செய்ய வேண்டாம். ஃபுருட் ஃபேசியல் செய்தால் முதலில், முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வந்து விடும். பிறகு, அடுத்த மாதம் செல்லும் போது, அதற்கு அடுத்தது என்ன ஃபேசியலோ அதை செய்ய வேண்டும்.

முடிந்தவரை, “பியூட்டி பார்லல்” போவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆடம்பரம் என்று நினைத்து, உங்கள் முகத்தை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் பணமும், வேஸ்ட். நேரமும் வேஸ்ட். ஃபேசியல் செய்தால், அந்த 2 நாட்கள் மட்டும் தான் முகம் பளபளப்பாக இருக்கும். பிறகு மறுபடியும், முகத்தில் சொரசொரப்பு ஏற்பட்டு, முகத்தில் பருக்கள் வந்து விடும். இது தேவையா?

அதற்கு தான் முடிந்த வரையில், நமது முகத்தை பாதிக்கும் கீரிம்களை உபயோகிக்காமல், வேறு எந்த வகையிலாவது முகத்தை பாதுகாக்க முடியுமா என்று பாருங்கள். அதற்கு சில டிப்ஸ்கள் உள்ளன. அதை முறையாகப் பயன்படுத்தினால் போதும். நீங்கள் குறைந்தது ஒரு “டிப்ஸ்”- ஐ 1 மாதத்திற்காவது தொடர்ந்து உபயோகப்படுத்தினால் தான், அதன் பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வெறும் 3 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தினால், அதன் ரிசல்ட் கிடைக்காது.

இரவு தூங்கும் முன் முல்தானிப் பொடியுடன், சிறிது ரோஸ் வாட்டர், அல்லது தண்ணிரை லேசாக ஊற்றி, நன்கு கலக்கி முகத்தை கழுவி விட்டு பூசி, மறுநாள் காலை எழுந்தவுடன் வெறும் தண்ணிரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்துவிடும்.
சப்பாத்தி மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து அதனுடன் தண்ணீரையும் விடு, நன்கு கலக்கி முகத்தில் பூசினால், முகம் பளபளப்பாக இருக்கும்.
கடலை மாவையும், பாசிப்பருப்பு மாவையும், நன்கு கலக்கி வைத்து, குளிக்கும் முன், சிறிது தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் பூசி வந்தால் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
தக்காளியுடன், புளித்த தயிரும் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் 2 மணி நேரம் தடவி வந்தால், முகம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைகிழங்கை இரண்டாக வெட்டி கண்களின் மேல் வைத்தால், கருவளையம் மறையும்.
பருக்களை, தயவு செய்து யாரும் கையால் கிள்ள வேண்டாம். பிறகு, அது அப்படியே கரும்புள்ளியாக மாறிவிடும்.
முடிந்த வரை கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தினாலே போதும். முகம் பொலிவு பெரும்.
தேங்காய் பாலுடன் சிறிது கடலை மாவையும் சேர்த்து, பசைபோல் கலந்து, முகத்தில் 1 மணி நேரம் ஊறவைத்து கழுவினால், முகம் பளிச்சிடும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
மேற்சொன்ன அனைத்து “குறிப்புகள்” களையும் குறைந்தது, 1 மாதத்திற்காவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு பிடித்திருந்தால் மேலும் அதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.