Home பெண்கள் அழகு குறிப்பு இளமையாக பெண்கள் தோற்றமளிக்கும் அழகுத் தகவல்

இளமையாக பெண்கள் தோற்றமளிக்கும் அழகுத் தகவல்

83

அழகு பெண்கள்:வயது முதிர்வு என்பது இயற்கையானது. உங்கள் சருமம் எவ்வளவு அழகானதாக இருந்தாலும், அதிலிருந்து தப்பிக்க இயலாது. இதை தவிர்க்க வழிகளே இல்லை என்று அர்த்தம் இல்லை. சில சமயம் உங்கள் உண்மையான வயதை விட, உங்கள் சருமம் வயதை அதிகமாக காட்டும். அதற்கு காரணமாக பலவற்றை சொல்லலாம். குறிப்பாக பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் இந்த பிரச்சினனை வரக்கூடும். இதனை கட்டுக்குள் வைக்க அதற்கு தேவையானவற்றை நீங்கள் செய்வது அவசியம். வயதாவதற்கான அறிகுறியும் அதனை சரிசெய்யும் வழிமுறைகளும் இங்கே தரப்பட்டுள்ளது.

வயது முதிர்வின் அறிகுறிகள்
1 சரும தொய்வு
தொடர்ச்சியாக எடையை கூடுவதும், இழப்பதும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதிக்கும். இதனால் உங்கள் சருமம் தொய்வானதுபோல் காட்சியளிக்கும்.

2 கரும் புள்ளிகள்
கரும் புள்ளிகள் ஹைபர்பிக்டினேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது, தோல் காயங்கள், முகப்பரு, வீக்கம் மற்றும் சூரிய ஒளியால் இது ஏற்படலாம்.

3 வறட்சியான சருமம்
வறட்சியான சருமம் அரிப்பு, எரிச்சல் தவிர சுருக்கங்கள் மற்றும் உலர் கோடுகளையும் உருவாக்குகிறது.

4 மந்தமான தோல்
இது காற்று, வெப்பநிலை, மற்றும் சுற்றுசூழல் மாற்றத்தால் ஏற்படுகிறது. இது தோலில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும்.

5 கோடுகள் மற்றும் சுருக்கங்கள்
சுருக்கங்கள் வயது முதிர்வின் தவிர்க்க முடியாத பகுதியாகும். ஒரு கட்டத்தில் நாம் இதனை பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் வெப்பத்தாலும், புகையாலும் உங்கள் வயதை விட சுருக்கங்கள் அதிகமாக இருக்கும்.

6 துளைகள்
இதுபோன்ற துளைகள் மூக்கின்மேல் ஏற்படும். இந்த துளைகளால் உங்கள் மூக்கு ஸ்ட்ராபெர்ரி என்று கிண்டலுக்கு ஆளாகலாம். இது மூக்கின்மேல் மட்டுமின்றி கழுத்து, மார்பு போன்ற பகுதிகளிலும் தோன்றும்.

7 திட்டுதிட்டான சருமம்
இதற்கு முக்கிய காரணம் சருமத்தின் அனைத்து பாகங்களையும் ஒரேமாதிரி பராமரிக்காமல் இருப்பதுதான். மட்டுமின்றி வெளிநாட்டு இரசாயனங்கள் அடங்கிய முகப்பூச்சுகளை முகத்தில் அதிகம் சேர்க்கும்போது இவ்வாறு ஏற்படலாம்.

8 வயதான அறிகுறிகள்
இந்த புள்ளிகள் கல்லீரல் புள்ளிகள் என்றழைக்கப்படும். இது பல ஆண்டுகளாக சூரிய ஒளியில் சுற்றுவதால் ஏற்படும் பழுப்பு நிற புள்ளிகளாகும். இவை முகப்பருக்களை விட பெரியதாக இருக்கும். பெரும்பாலும் காய், முதுகு, மற்றும் பாதங்களில் இருக்கும்.

பாதுகாக்கும் வழிமுறைகள்
1 நன்றாக தூங்குதல்
தூக்கம் உடலின் பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்யும். மேலும், உடலை சீரமைக்கும்.

2 புகை பிடிக்காமலிருத்தல்
புகைபிடித்தல் உங்களை மெதுவாக கொல்வதோடு உங்கள் சருமத்தையும் பாதிக்கும். நிகோடின் சருமத்தை வறட்சி, மந்தம், மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்துவதோடு அதன் நெகிழ்வுத்தன்மையையும் பாதிக்கும்.

3 சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்தல்
சூரிய ஒளி வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதுதான். ஆனால், அளவுக்கதிகமான சூரியஒளி உங்கள் சருமத்திற்கு உகந்ததல்ல. எனவே சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவது உங்களை சூரியனின் கதிர்வீச்சிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

4 வைட்டமின் ஏ அளவை அதிகரித்தல்
வைட்டமின் ஏ திசுக்களை பாதுகாக்கும். எனவே பால், முட்டை, வெண்ணெய் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

5 அதிகளவு ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எடுத்துக்கொள்ளுதல்
ஆன்டிஆக்ஸிடென்ட்கள் திசுக்கள், டிஎன்ஏ போன்றவற்றை பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். தக்காளி, பெர்ரீஸ், திராட்சை மற்றும் பூண்டு போன்றவற்றில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகளவு நிறைந்துள்ளது.

6 சரியான துணிகளை தேர்ந்தெடுத்தல்
அகலமான தொப்பி உங்கள் கண், தலை, கழுத்து போன்றவற்றை பாதுகாக்கும். குளிர்கண்ணாடி போடுவது உங்களின் கண்களை 90% முதல் 100% வரை சூரியஒளியிலிருந்து பாதுகாக்கும். சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது சற்று தளர்வான உடைகளை அணிவது நல்லது.

7 மனஅழுத்தத்தை குறைத்தல்
உங்களின் மனஅழுத்தம், சருமத்தை பாதிக்கும் ஹார்மோன்கள் மற்றும் இரசாயனங்களை உருவாக்கும். எனவே யோகா, தியானம் போன்ற மனஅழுத்தத்தை குறைக்கும் செயல்களை செய்யுங்கள்.

8 மதுவை தவிர்த்தல்
மது உங்களின் சருமம் மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்குமே ஆபத்தானது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் அதிக மது குடிப்பவர்களுக்கு வயது முதிர்வு விரைவில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.