Home சூடான செய்திகள் Boys Hot கவர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆண்கள் செய்ய வேண்டிய 16 குட்டி, குட்டி விஷயங்கள்!

Boys Hot கவர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆண்கள் செய்ய வேண்டிய 16 குட்டி, குட்டி விஷயங்கள்!

21

காதலிக்கும் பெண்ணை, அல்லது மனைவியை எப்படியாவது தன்னை சார்ந்து கவர்ந்திழுக்கு வேண்டும் என காத்துக் கொண்டிருக்கும் ஆணா நீங்கள்? அப்படியானால் இந்த கட்டுரை முழுக்க, முழுக்க உங்களுக்காகவே எழுதப்பட்டது. பெண்களுக்கு எது பிடிக்கும் என தெரிந்து அவர்களை ஈர்ப்பதை காட்டிலும். பெண்கள் ஆண்களிடம் என்ன விரும்புவார்கள், எதை கவர்ச்சியாக எண்ணுகின்றனர் என்பதை அறிந்து முயற்சிப்பதே சிறப்பு. எதுவாக இருந்தாலும் இந்த செயல்களில் ஈடுபடும் போது நடிக்காமல், உங்கள் குணாதிசயமாக மாற்றிக் கொண்டு முயற்சித்தால் வெற்றிக்கனியை எளிதில் பறிக்கலாம்…

1 வீட்டில் யாரும் இல்லாத போது, அல்லது விருந்தினர், நண்பர்கள், காதலி உற்றார் வந்திருக்கும் சமைத்து அசத்துவது.

2 வெட்கப்படாமல் சில்லித்தனமான காமெடிகள் செய்வது. வெகுளியாக நடந்துக் கொள்வது.

3 பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்தி கொள்வது. இது கவர்ச்சியாக வெளிப்படுத்திக் கொள்ள உதவும் எனிலும், தலைகனம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 செல்லப்பிராணி வளர்ப்பது. இதனால் உங்கள் மீது அன்பு அதிகரிக்கிறதோ இல்லையோ… ஆனால், உங்கள் செல்ல பிராணியுடன் அவர்கள் நெருக்கமாகிவிட்டால். உங்கள் காதலியுடன் நீங்கள் நெருக்கம் ஆகிவிடலாம்.

5 தன்னை தானே கேலி செய்து சிரித்து கொல்வதற்கு சங்கோஜம் படாதிருப்பது.

6 பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனி நறுமணம் இருக்கிறது. அப்படி, உங்களுக்கான நறுமணத்தை தனித்துவமாக மெயின்டெயின் செய்ய வேண்டும். அதுவும் அவர்கள் உணரும்படி.

7 வீடு சுத்தம் செய்ய, பாத்திரங்கள் கழுவ, சமைக்க பேருதவியாக இருப்பது.

8 வாரணம் ஆயிரம் வந்த பிறகு பெரும்பாலான ஆண்கள் முயற்சி செய்தது தான். ஏதேனும் ஒரு இசை கருவி வாசிக்க கற்றுக் கொள்வது.

9 புத்தகம் வாசிப்பது. பெண்களுக்கு அறிவாக பேசும் ஆண்களை காட்டிலும் கற்பனை நயத்துடன் பேசும் ஆண்களை அதிகம் பிடிக்கும். புத்தகம் வாசித்தால் கற்பனை திறன் அதிகரிக்கும். எனவே, புத்தகம் வாசிப்பதன் மூலமாக பெண்கள் எதிரே கவர்ச்சியாக திகழ முடியும்.

10 கோட் சூட் அணிவதை காட்டிலும், வேட்டி சட்டையில் தூள் கிளப்பும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஓர் ஆண்மை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

11 புதிய நபராக இருந்தாலும், தன்னை காட்டிலும் சிறிய, எளிய நபர்களாக இருப்பினும் அவர்களிடம் கனிவாக நடந்துக் கொள்வது, பழகுவது.

12 தனக்கு பிடித்த வேலைகளை, ஹாபிகளை மறக்காமல், சரியான இடைவேளையில் செய்துக் கொண்டே இருப்பது. அது கிரிக்கெட், பாடல்கள் எழுதுவது, பயணம் மேற்கொள்வது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

13 பின்னாடி வந்து கட்டிப்பிடிப்பது, செல்லமாக தீண்டுதல், கொஞ்சுதல் போன்ற ரொமான்டிக் செயல்களில் ஈடுபடுதல்.

14 எப்படி இருக்க, என்ன பண்ற, ஓகே வா… என பிசியாக இருந்தாலும், வெட்டியாக இருந்தாலும் மெசேஜ் செய்துக் கொண்டே இருக்க வேண்டும்.

15 ஜிம் சென்று, விளையாடி விட்டு, அப்படியே வேர்க்க விறுவிறுக் கட்டுமஸ்தாக வீடு வந்து காட்சியளிப்பது.

16 குழந்தைகளிடம் அன்பாக பழகுதல், அவர்களுடன் சேர்ந்து சுட்டி சேட்டைகளில் ஈடுபடுதல்.