Home ஆண்கள் 10-ல் ஒரு ஆணும், 8-ல் ஒரு பெண்ணும் செய்யும் தவறு!

10-ல் ஒரு ஆணும், 8-ல் ஒரு பெண்ணும் செய்யும் தவறு!

22

nightசமீபத்தில் ஐரோப்பாவில் நடந்த ஆய்வொன்றில் பத்தில் ஓர் ஆணிற்கும், எட்டில் ஓர் பெண்ணுக்கும் கருவள குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 42.7 % பெண்களும், 46.8% ஆண்களும் கருவள குறைபாட்டிருக்கு சிகிச்சை மேற்கொள்வதில்லை என்ற அதிர்ச்சியான தகவலும் தெரியவந்துள்ளது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், நன்கு படித்த, நல்ல வேலையில் பணிபுரியும் ஆண், பெண்கள் தான் கருவள குறைபாட்டிற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். ஆம், இவர்கள் மத்தியில் இது குறித்த ஒருவித அச்சம் அல்லது தயக்கம் நிலவுகிறது.

ஆய்வு!
சமீபத்திய ஐரோப்பாவில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் நடத்திய ஆய்வில், பெண்கள் மத்தியில் அதிகளவில் கருவள குறைபாடு தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. முக்கியமாக 35 வயதுகளில். மேலும், ஆண்கள் மத்தியிலும் 35 – 40 வயதில் ஆண்மை குறைபாடு அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

முந்தைய தலைமுறை!
முந்தைய தலைமுறை ஆண்களோடு ஒப்பிடுகையில். இன்றைய தலைமுறை நடுவயது ஆண்களிடம் ஆண்மை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது.

கருத்தரிப்பு கடினம்!
மூன்றில் ஒரு பெண்ணிற்கு 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமமாக இருக்கிறது. 25 வயது பெண்களோடு ஒப்பிடுகையில் முப்பது வயதை தாண்டிய பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

ஷிப்ட் வேலைகள்!
மற்ற பெண்களோடு (வேலைகள்) ஒப்பிடுகளில் ஷிப்ட் வேலைகளில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் கருவளம் குறைபாடு, கரு திறன் / ஆரோக்கியம் குறைபாடு அதிகமாக தென்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

பலவீனம்!
கருவளம் குறைபாடு உள்ளவர்கள் மனதளவில் மிகவும் பலவீனமடைகின்றனர். மன அழுத்தம், பதட்டம், வாழ்க்கை மீதான விரக்தி இவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

அச்சம்!
கருவளம் குறைபாடு உள்ளவர்கள் பலரும் இதற்கான சிகிச்சை மேற்கொள்வதில்லை. மேலும், இதற்கான சிகிச்சைக்கு அதிக செலவாகுமா என சிலரும். இதற்கு எப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது என சிலரும் தயக்கம் காண்பிப்பதே கருவள குறைபாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.