Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடை குறைக்கும் உணவு பொருட்கள்:

உடல் எடை குறைக்கும் உணவு பொருட்கள்:

19

* வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

* ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.

* மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது.

* ஒரு நாளைக்கு 10 டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

* எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

* பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 -10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

* கீரைகளில் அதிகப்படியான வைட்டமீன், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

* கீரின் டி உடல் எடையை குறைக்கும்.

* பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள் எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

* தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

* காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

* சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.