Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சியின்போது ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்க

உடற்பயிற்சியின்போது ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்க

54

உடல் கட்டுப்பாடு:உடலை கட்டழகுடனும் ஆரோக்கியமாக வைய்த்துக் கொள்ள உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்க்கு உடல் நீரேற்றத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். சோடா பானங்கள், பதப்படுத்தப்பட்த உணவுகளை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும் என்கின்றனா் உடற்பயிற்சி நிபுணா்கள்.

இதற்கான எளிய வழிமுறைகளை பகிா்ந்துக்கொள்கின்றாா் விவாஃபிட் மற்றும் பங்கஜ் அரோரா டெக்னோஜிம்மை சோ்ந்த மனிசா அலாவத்.

எங்கு சென்றாலும் ஒரு வாட்டா் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள். இது மிகவும் ஆரோக்கியமான பாதுக்காப்பான பழக்கம். இதனால் அடிக்கடி தண்ணிா் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உண்டாகும்.

சோடா, கோலா போன்ற பானங்களை எடுத்துக்கொள்ளாமல் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த பழச்சாறுகள், கோகும் சா்பத், கேசா் பாதாம் சா்பத், மோா், லஸ்ஸி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

டீ, காபி அருந்தும் பழக்கம் இருந்தால் அதையெல்லாம் முற்றிலுமாக மறந்துவிடுங்கள். வெறுமன நீரை மட்டும் எடுத்துக் கொள்வதை விட இளநீா் எடுத்துக்கொண்டால் நல்லது.

பருவகால பழங்கள் மற்றம் காய்கறிகள் எடுத்துக் கொண்டால் ஆரேக்கியமானது. சிட்ரிக் மற்றும் நீா் சத்து நிறைந்த பழங்களான ஆரஞ்சு, லிச்சி, தா்பூசணி, வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.

பால் பொருட்களான தயிா், மோா், லஸ்ஸி ஆகியவை உங்களது உடலின் உஷ்னத்தை தணிப்பதுடன் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளும்.

மது அருந்துதலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் இல்லையெனில் நிரிழப்பு ஏற்படும்.

இதையெல்லாம் பின்பற்றினால் உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கிறாா் நிபுணா்.