Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒல்லியான உருவமா உங்களுக்கு? நீங்கள் குண்டாக ஒரு அற்புத மூலிகை !

ஒல்லியான உருவமா உங்களுக்கு? நீங்கள் குண்டாக ஒரு அற்புத மூலிகை !

36

06-1473156532-neckpainஇந்தியா முழுவதும் சாலை, மலை, என பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒருகாலத்தில் மூலிகைகளாகவே இருந்தது என நம்புவீர்களா? இப்போதும் அப்படித்தான். என்ன செடி என்றே அறியாமல் அதனை தேவையில்லாத புதர்கள் என நினைத்து வெட்டியெறிந்துவிடுகிறோம். அப்படி வேலிகளில் படர்ந்து வளரும் ஒரு தாவரம்தான் பிரண்டை. நீர் அவசியமில்லாதது. அதன் தண்டை நட்டு வைத்தா போதும் அதுவே வளர்ந்து விடும். பிரண்டை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடியாகும். இந்த பிரண்டையின் மகத்துவத்தை இப்போது படியுங்கள்.

பிரண்டை வகைகள் : பிரண்டைச் செடிகளில் ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டைஎன இன்னும் பல வகைகள் உள்ளன. அதில் முப்பிரண்டை என்னும் வகை கிடைப்பதற்கரியது. இது மலைப் பகுதியில்தான் அதிகம் காணப்படும். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. இத்தாவரத்தில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள் : இலைகளும், இளம் தண்டுப் பகுதிகளும் உடல்நலத்திற்கு வலிமை தருபவை. வயிற்றுவலி போக்க வல்லது. இதன் பொடி ஜீரணகோளாறுகளுக்கு மருந்தாகிறது. தண்டின் சாறு எலும்பு முறிவுகளில் பயன்படுகிறது. ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும். வேரின் பொடி எலும்பு முறிவில் கட்டுப்போட உதவுகிறது.

உடல் குண்டாக : ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையில் உள்ள நாரை உரித்த பின், நெய்யில் அல்லது நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, இஞ்சி வரமிளகாயுடன் வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் பூசியதுபோல் இருக்கும்,

பசியின்மைக்கு : பசி எடுக்கதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் , வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

முதுகுப் பிடிப்பிற்கு : வாய்வினால் எலும்பு மற்றும் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கிவிடும். பின் அவை முதுத் தண்டு மற்றும் கழுத்துப் பகுஇதிக்கு இறங்கி பசை போல் அங்கேயே இருந்து தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும். இதனால் கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவஸ்தை படுவார்கள். இவர்கள் பிஞ்சு பிரண்டையை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகுவலி மற்றும் கழுத்துவலி குணமாகும்.

மாத விடாய் வலிக்கு : பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும். பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

இதய நோய்களை தடுக்க : உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

Previous articleஇரவு இரவாக ஓடும் ஹுசைன் போல்டின் ஓட்டம் – காம கழியாட்ட விளையாட்டை விட்டபாடாக இல்லை
Next articleஉங்கள் அந்தரங்கப் பகுதியில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இதோ அதற்கான சில வழிகள்