Home ஆண்கள் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க செய்யும் கருப்பு காரட்

ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க செய்யும் கருப்பு காரட்

356

ஆண்மை அதிகரிப்பு:அனைத்து நாட்களிலும் கிடைக்கும் ஒரு ஆரோக்கியமான பொருள் கேரட் ஆகும். கேரட் பல வழிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேரட் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு காய் அதைவிட நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்பது நாம் அறியாத ஒரு தகவல்.

மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட். இதனை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை மங்கள் முள்ளங்கி என்று அழைக்கிறார்கள். இதனை பெரும்பாலும் அலங்கார பொருளாகவே நாம் பயன்படுத்துகிறோம் ஆனால் இது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. இந்த பதிவில் கருப்பு கேரட்டின் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஸ்ட்ராபெரி சிவப்பு நிறத்திலிருந்து அடர் ஊதா நிறம் வரை அனைத்தும் இதனை சரியான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் பெறலாம். செயற்கை நிறமூட்டிகளை விட இவை சிறப்பான நிறத்தை வழங்கும் அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செயற்கை நிறமூட்டிகளை உபயோகிக்கும்போது உங்களுக்கு கிடைப்பது பிரச்சினைகள் மட்டும்தான்.

பொதுவாகவே கேரட்டுகள் குறைந்த கலோரிகள் உடைய காயாகும். மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வெள்ளை கேரட்டை தவிர அனைத்து கேரட்டிலும் கரோட்டினாய்டுகள் உள்ளது. ஆனால் மற்ற கேரட்டுகளை விட இதில் அதிக ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது.

பல ஆய்வுகளின் படி ஆன்தோசயனின்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான சத்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரவு நேர பார்வையை அதிகரிக்க, விழித்திரையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட்டினோதெரபி என்னும் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

கருப்பு கேரட் சீரான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள அதிகளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புசத்து எலும்பு மற்றும் பற்களை வலுவாக்க உதவுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் கஞ்சி உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள எதிர்ப்பு அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் காரணமாக இவை முடக்குவாதம், கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களை குணமாக்க பயன்படுகிறது.

அதிகளவு ஆன்தோசயசினின் இருப்பதால் கருப்பு கேரட் உங்களை புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடக்கூடியவை. மேலும் உடலில் ஏற்படும் கதிர்வீச்சுகளின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக தினமும் இதை உணவில் சேர்த்துக்கொண்டால் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைக்கப்படுகிறது. மேலும் இதன் சாறை தினமும் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சினைகள் குணமாவதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

100 கிராம் கருப்பு கேரட் சாப்பிட்டால் அதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது 36 கலோரிகள் மட்டுமே. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் கருப்பு கேரட்டை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அனைத்திற்கும் மேலாக இது வழக்கமான கேரட்டுகளை விட அதிக சுவை கொண்ட கேரட்டாகும்.

கேரட்டின் இந்த அடர் ஊதா நிறத்திற்கு காரணம் அதிலுள்ள ஆன்தோசயசினின்தான். இது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த களஞ்சியமாகும். நரம்பியல் கோளாறு காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் போன்ற மூளை தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

கருப்பு கேரட்டில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பயன்படுகிறது. இதனால் அதிகளவு கொழுப்பால் ஏற்படும் இதய கோளாறுகள் தடுக்கப்படுகிறது.

கருப்பு கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது ஈரலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் இது உடலில் அதிகளவு கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.