Home ஜல்சா மார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு

மார்பங்களை பெரிதாக்க வேண்டும் லண்டனில் பிச்சை எடுத்த பெண்ணால் பெரும் பரபரப்பு

36

நோர்­வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதி­யோ­ரத்தில் நின்­று­கொண்டு, தனது மார்­ப­கங்­களை பெரி­தாக்­கு­வ­தற்கு பொது­மக்­க­ளிடம் யாசகம் பெற்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார். ஜூலியன் ஸ்னேக்­ஸடட் எனும் இந்த யுவ­தியே இவ்­வாறு விசித்­திர நோக்­கத்­துக்­காக பணம் சேக­ரிப்­பதாகக் கூறி யாசகம் பெற்றார். பிரித்­தா­னிய தலை­நகர் லண்­ட­னி­லுள்ள வீதி­யொன்றில் கறுப்பு நிற நீச்­ச­லுடை மாத்­திரம் அணிந்த நிலையில் இவர் நின்­று­கொண்­டி­ருந்­த­துடன், தான் ஒரு மொடல் எனவும் மார்­பக சத்­திர சிகிச்­சைக்­காக பணம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் எழு­தப்­பட்ட பதா­கை­யொன்­றையும் ஏந்­தி­யி­ருந்தார்.

ஜூலி­ய­னுக்கு சிலர் பணம் கொடுத்­தனர். ஆனால், வேறு பலர் அவரின் நட­வ­டிக்­கையால் அதி­ருப்தி தெரி­வித்­தனர். குறிப்­பாக பெண்கள் பலர், வெளிப்­ப­டை­யா­கவே தமது அதி­ருப்­தியை தெரி­வித்­தனர். ஜூலி­ய­னுக்கு அறி­வுரை கூறிய பெண் ஒருவர், ‘அழகு என்­பது வெளித்­தோற்­றத்­துடன் மாத்­திரம் தொடர்­பா­ன­தல்ல. அது உள்­ளி­ருந்து வரு­வது. நீங்கள் அதை எவ்­வாறு வெளிப்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­பதில் இது தங்­கி­யுள்­ளது’ எனக் கூறினார்.

தனது 5,000 ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 900,000 ரூபா) தேவைப்­ப­டு­வ­தாக ஜூலியன் தெரி­வித்தார். அவ்­ வ­ழியே சென்ற பலர் ஜூலி­ய­னுக்கு பணம் வழங்­கிய நிலையில் சிலர் அவ­ருடன் செல்பீ படம்­பி­டித்­துக்­கொண்­டனர்.