Home பாலியல் திருமணத்துக்குமுன் செக்ஸ் காட்சிகளை கற்பனை செய்து பரவசம் அடைவது தவறா?

திருமணத்துக்குமுன் செக்ஸ் காட்சிகளை கற்பனை செய்து பரவசம் அடைவது தவறா?

57

எனக்கு வயது இருபத்தெட்டு. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த சில வருடங்களாகவே செக்ஸ் காட்சிகளைக் கற்பனை செய்து பரவசப்படும் பழக்கம் எனக்கிருக்கிறது. இது சரியா, தவறா? என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்களோடு விவாதிக்கவும் தயக்கமாக இருக்கிறது. இப்பழக்கம் நல்லதா, கெட்டதா? என்று நீங்களாவது சொல்லுங்களேன்.

பருவ வயது மனிதர்களுக்கு பாலியல் பகல்கனவுகள் ஏற்படுவது ரொம்ப நார்மல்தான்! அதுவும் ஆண்களுக்கு இப்படிப்பட்ட பகல்கனவுகள் அதிகமாக ஏற்படத்தான் செய்கின்றன.

வயிற்றுப் பசியில் கிடப்பவனுக்கு இட்லி, தோசை, பிரியாணி, பரோட்டா, பிஸ்கெட் என்று பலதும் சாப்பிடுவதாகக் கற்பனைகள் தானாகப் பொங்கி எழும். உடல்தேவைகளைக் கற்பனையிலாவது பூர்த்தி செய்ய மனம் முயல்வதின் அறிகுறி இது.

அதுபோலத்தான் பாலியல் பசியும். அதைப் பூர்த்தி செய்யவே மனம் பல கற்பனைகளைச் சிறகடித்து விரிய வைக்கிறது.

இரண்டு பசிகளுமே அடிப்படை உயிர்த் தேவைகள். அவற்றைக் கற்பனையிலாவது நிறைவேற்றிக் கொள்வது அடிப்படை மன இயக்கம் என்பதால் இது ஓர் இயற்கையான விஷயம்தான்.

ஆனால் விகாரமான, வக்கிரமான, கொடூரமான, மூர்க்கத்தனமான பாலியல் கற்பனைகள் அடிக்கடி ஏற்பட்டாலோ, ஒரே கற்பனை ஓவராக மனத்தில் சுழன்று பதற்றத்தை ஏற்படுத்தினாலோ இது சில வகை மனநோய்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

இப்படிப்பட்ட கற்பனைகள் ஏற்படுவது ஆபத்து என்பதால் இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.