Home சூடான செய்திகள் இரவில் தூங்க போகும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

இரவில் தூங்க போகும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

18

தினமும் இரவு வேலையை முடித்து விட்டு தூங்கப் போகும் முன், பற்களை துலக்கி வைட்டமின்களுக்கு புத்துணர்வு தருகிறீர்களா? கண்டிப்பாக இல்லை. அன்றாடம் நாம் அழகாக காட்சி அளிக்கவும், சருமம் மற்றும் தலை முடியை பாதுகாக்கவும், நம்மில் பலர் முனைப்பு காட்டுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதே அக்கறையை இரவு நேரங்களில் காட்டுவதில்லை. வீடு தானே என்று அசால்ட்டாக இருந்து விடுவோம். தலை முடியும், சருமமும் படுக்கைக்கு தயாராக உள்ளதா? அப்படியானால் தூங்க போகும் முன் தலை முடியையும், சருமத்தையும் தயார் செய்ய வேண்டும். தூங்கும் நேரத்திற்கான அழகு சடங்குகளைப் பற்றி காஸ்மெட்டிக் சருமவியலார் டாக்டர் ரேகா செத் மற்றும் ஹேர் ஸ்டைலிஸ்ட் பெர்ரி படேல் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா… மேலும் கீழ்கூறியிருக்கும் அனைத்தும் தலை முடி மற்றும் சருமத்திற்கான சரிபார்ப்புப் பட்டியல். ஆகவே அவற்றைப் படித்து எதையும் தவறவிடாதீர்கள்.

முதலில் செய்ய வேண்டியது, அழுக்கான தலை முடியுடன் தூங்க செல்லக்கூடாது. அது சரும துவாரங்களை அடைத்துவிடும். அதனால் முடி அழுக்காக இருந்தால், அதனை கழுவுங்கள். இதனால் காலையிலும் சிறிது நேரத்தை சேமிக்கலாம் அல்லவா?

ஈரத் தலையுடன் தூங்க செல்லாதீர்கள். தூங்க செல்லும் போது, முடி முழுவதும் காய்ந்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முடி பிசுபிசுவென ஒட்டிக் கொண்டு ஒரு மாதிரி ஆகிவிடும்.

முடியில் சிக்கு அதிகம் இருந்தால், அதனை சரிசெய்து தூங்கச் செல்ல வேண்டும்.
வைட்டமின் ஈ மாத்திரை ஒன்றை எடுத்து சருமம் அல்லது தலையில் பாதிப்படைந்த இடங்களில் தடவ வேண்டும். இதனால் முடி உதிர்தல், வறண்ட தலை சருமம், முடி அடர்த்தி குறைதல், முடி வெடிப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இது உதவி புரியும்.

தூங்க செல்லும் போது கூந்தலை மேலேற்றி குதிரை வாலிட்டு கொள்ளுங்கள். அதனால் சருமம் மூச்சு விட முடியும். குறிப்பாக கூந்தலை முடியும் போது இறுக்கமாக கட்டாதீர்கள். முக்கியமாக நீளமான கூந்தல் உடையவர்கள் கூந்தலை லூசாக கட்டிக் கொள்ளுங்கள்.

இரவில் கடைசி சொட்டு மேக் அப் போகும் வரை க்ளென்சிங் லோஷனை கொண்டு நன்றாக துடைத்து எடுங்கள். பின் நல்ல பேஸ் வாஷ்ஷை கொண்டு முகத்தை கழுவுங்கள்.

சரும வகை எப்படி இருந்தாலும் சரி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ள மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச உதவி இதுவாகத் தான் இருக்கும். மேலும் இதனை 20 வயதிலிருந்தே தினமும் இரவில் செய்ய தொடங்கி விட வேண்டும்.
இந்திய வானிலையால் சருமத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் மாறிவிடுகிறது. இதனைத் தான் டான் என்று சொல்வார்கள். எனவே டான் வருவதற்கு முன்பாக சருமத்தை வெளுப்பாக்கும் லோஷனை பயன்படுத்துங்கள்.

இறந்த செல்களை நீக்குதல் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆர்வக் கோளாறில் அளவுக்கு அதிகமாக சருமத்தை தேய்த்தால், சருமத்திலுள்ள இயற்கை எண்ணெய்கள் வெளியேறிவிடும். ஆகவே சருமத்தில் உள்ள துவாரங்களை திறக்க வெதுவெதுப்பான நீரை முகத்தில் ஊற்றி கழுவுங்கள். பின் மிதமான பேஸ் வாஷ் கொஞ்சம் எடுத்து, ஒரு ஸ்பாஞ்சில் தடவி, நுரை வரும் வரை முகத்தில் மெதுவாக வட்ட வடிவில் தேய்க்கவும். கடுமையான பொருட்களை கொண்டு இறந்த செல்களை நீக்குவதற்கு பதில் இந்த எளிய முறையை கையாளலாம்.
இருப்பினும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் போனால், இவை அனைத்தையும் கடைபிடித்தாலும் புண்ணியம் இல்லாமல் போய்விடும்
கண்களின் அழகைக் கெடுப்பதில் கருமையான கரு வளையங்கள் தான் முதலில் உள்ளது. ஆகவே அத்தகைய தோற்றத்தை தடுக்கும் ஆற்றல் வாய்ந்த க்ரீமை கண்களுக்கு அடியில் தடவுங்கள்.

கைகள் மற்றும் கால்களில் எண்ணெய் சுரப்பி எதுவும் இல்லாததால். அவைகள் சீக்கிரமே வறண்டு வயதான தோற்றத்தை பெறும். பெரும்பாலும் முகத்தை பராமரிப்பதில் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கைகளுக்கும் கால்களும் அளிப்பதில்லை. ஆகவே கைகளுக்கு க்ரீம் வகை பொருட்களை அதிகமாக பயன்படுத்துங்கள். அதில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலம் இருந்தால், இன்னும் நல்லது. மேலும் கால்களுக்கும் இது பொருந்தும்.

Previous articleகர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது ஏன்?
Next articleஅரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்