Home காமசூத்ரா காமமும் ஒரு கலையே! கற்றுத் தேர்ந்தால் ஜெயிக்கலாம்…

காமமும் ஒரு கலையே! கற்றுத் தேர்ந்தால் ஜெயிக்கலாம்…

108

மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் பல்வேறு கணவர்களுக்கும் தாம்பத்யத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே மனைவியின் திருப்திக்கு முன்பே தனது உச்சநிலை முடிந்து விடுவதுதான். இந்த நிலை மாற என்ன செய்யலாம்?. உடலுறவில் கண்ட கண்ட மாத்திரை மற்றும் ஸ்பிரேக்களை உபயோகிக்காமல் இயற்கையான வழியிலேயே நீண்ட நேரம் நீடித்திருந்து மனைவியையும் திருப்திப்படுத்தும் வழிகள் ஏராளமுண்டு.

கணவன் உறவில் நீண்ட நேரம் நிலைத்திருக்க எப்படி அதற்கானச் சரியான நேரத்தை அமைத்துக் கொள்வது அவசியமோ அதேப்போல இன்னும் சில வழிமுறைகளும் கூட உண்டு.

# மனைவியின் திருப்திக்கு முன்னமே… சீக்கிரம் உச்சக்கட்டத்தை அடையும் கணவன் எப்போதும் உறவில் ஃபோர்ப்ளே எனப்படும் முன் விளையாட்டுகளைத் தவிர்த்தல் அவசியமானதாகும்.

# அதேபோல் உறவின் போது எண்ணிக்கையை அளப்பது போன்ற கவுண்ட்டிங் முறையை பயன்படுத்துவதும் ஓரளவுக்குப் பலனளிக்கும். இது உறவில் ஈடுபட்டிருக்கும் போது நம்பர் ஆஃப் ஸ்ட்ரோக்ஸ்சை எண்ணிக்கொண்டே இயங்கும் முறையாகும். இதில் ஆணின் மனம் முழுவதுமாய் உறவில் லயிக்காமல் அவனது சிந்தனை கவுண்ட்டிங்கிலும் ஈடுபடுத்தப்படுவதால் உறவில் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படும்.

# இந்த கவுண்ட்டிங் போன்றே மற்றொரு வழிமுறையும் உண்டு. கணவன் உறவில் ஈடுபட்டிருக்கும்போது உச்சநிலையை அடையப் போவதாக உணரும் சில நொடிகளுக்கு முன்பே ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடவேண்டும். வெளியில் எடுக்கப்பட்டதும் ஃப்ரெஷ் காற்று படுவதால் ஆணுறுப்பு உச்சநிலையை அடைவது தவிர்க்கப்படும். பின்னர் ஆணுறுப்பை ஒரு சுத்தமான துணியினால் துடைத்துவிட்டு சிலநொடிகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் உறவைத் தொடரலாம். இவ்வாறு இயங்கும் உறவில் இன்பம் அவ்வப்போது தடைப்பட்டாலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் வெளியிலெடுத்து விட்டு மீண்டும் உறவைத் தொடரலாமென்பதால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறவில் நீடித்திருக்கமுடியும். உச்சநிலையை எட்டாமல் சரியான நேரத்தில் ஆணுறுப்பை வெளியில் எடுப்பதே இதில் அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.

# சரியா, தவறா? என்று நிரூபிக்கப்படாத இன்னொரு வழிமுறையும் உண்டு. சுயஇன்ப பழக்கமுள்ள ஆண் மனைவியுடன் உறவு கொள்ளும் அரைமணி நேரத்துக்கு முன்பு, ஒரு முறை சுயஇன்பம் அனுபவித்துக்கொண்டால் அதற்குப்பின் மனைவியுடன் ஈடுபடும் உறவில் விரைவாய் உச்சக்கட்டத்தை எட்டாமல் வழக்கத்தைவிட அதிக நேரம் நீடித்திருக்க முடியும்.

# ஆண் நீண்டநேரம் நிலைத்திருக்க ‘’காமசூத்திரம்’’ காட்டும் வழிமுறையும் உண்டு. ‘’கலவித் தொழில் செய்யும் ஆணுக்கு விந்து வெளிப்படப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட பெண் நீட்டிய விரல்களுடன் ஆணினுடைய புட்டத்தில் தட்டலாம். இதைப் பலமாகச் செய்தால் விந்து வெளிப்படுவதைத் தடுக்கலாம். காம உச்ச நிலையை தான் அடையும் வரை பெண் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க வழி ஏற்படும்’’.

# பெண் கீழே ஆண் மேலே என்ற வழக்கமான நிலையில் உறவு கொள்ளாமல் ஆண் கீழேயும் பெண் மேலேயுமான நிலையில் ஆணால் வழக்கத்தைவிட அதிக நேரம் நீடித்திருக்கமுடியும்.

# மனைவியுடன் உறவில் ஈடுபட்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த சினிமா நடிகையையோ… இல்லை வேறெதாவது பெண்ணைப் பற்றியோ சிந்தித்தல் கூடாது. மனைவியுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போது தான் ரசிக்கும் வேறெதாவது பெண்ணைப் பற்றிக் கற்பனையில் சிந்திப்பது வழக்கத்தை விட வெகு விரைவாய் உறவு முடிந்து விட வழிவகுத்துவிடும்.

இன்றைய சூழலில் பெரும்பாலான கள்ளக்காதலில், கணவனிடம் திருப்தி கிடைக்காத பெண்களே எளிதில் சேற்றில் விழுந்து வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கிறார்கள். கணவனிடம் திருப்தியென்பது வெறும் உடலால் மட்டுமன்றி மனதையும் சார்ந்த விஷயமாகும். உடலால் மனைவியைத் திருப்திப்படுத்த இயலாத ஒரு கணவன் தனது மனதார நேசிப்பால் அவளை வழி தவறாமல் கட்டுண்டு கிடக்கச் செய்யலாம். அதுபோலவே தனது மனைவியின் மீது பாசமும், காதலும் இல்லாமல் வெறுமனே உடலால் மட்டும் அவளை முழு திருப்திப்படுத்தும் திறனுள்ள கணவனும் தனது மனைவியை எப்போது வேண்டுமானாலும் கள்ளக்காதலில் பலிகொடுக்க நேரலாம்.

ஆகவே ஒவ்வொரு கணவனும் தனது மனைவியின் திருப்திக்கும் மதிப்பளித்து அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு ‘’அன்புடன் கலந்த திருப்தியான காமத்தை’’ அவளுக்கு அளிக்கும்போது மனம் வெறெங்கும் அலைபாயாமல் அழகான, சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

‘’காமமும் ஒரு கலையே! கற்றுத் தேர்ந்தால் ஜெயிக்கலாம்’’…

Previous articleஇதை செயல்படுத்துங்க அப்புறம் பாருங்க உங்க கட்டில் இன்பத்தை
Next articleஉங்கள் ஆண்மைகுறைவை போக்க வீடுத்தோட்ட செடிகள்