Home சூடான செய்திகள் பெண்களின் கட்டிலறை ஆசைகள் ஆண்கள் செய்யவேண்டியது

பெண்களின் கட்டிலறை ஆசைகள் ஆண்கள் செய்யவேண்டியது

315

girls like bedroom maters:சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான ஜோடிகளைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் ஆண்களிடம் பெண்கள் விரும்புவது என்ன என்பது குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஆறுதலாக இருக்கும் ஆண்கள் சென்சிடிவ் சுபாவம் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் பாராட்டுவார்கள்.

காதல் என்று வரும்போது, பாரம்பரிய வீர பண்புகள் நிறைந்த ஆடவனை பெண்கள் விரும்புவார்கள். இந்த பண்புகளை காதலின் முதல் கட்டத்தில் இருக்கும் பெண்கள் விரும்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்கள் உடை மற்றும் அழகில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் முதல் பார்வையில் இருந்து தேனிலவிற்கு பிறகும் தனது தேவதைக்கு பிடிக்கும் வகையில் உடை உடுத்த வேண்டும்.

சிவப்பு ஆடை அணியும் ஆண்களுக்கு பெண்கள் விரைவில் கிடைப்பார்கள் என பெண்களின் உள்ளுணர்வை சோதித்த உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிறம், ஆண்களை சக்திமிக்கவராக – கவர்ச்சியானவராக – பெண்களுக்கு பிடித்தமானவராக வெளிப்படுத்துவதாக தெரியவந்துள்ளது

உங்கள் தவறுகளை மறைக்க வேண்டாம் ஒரு நல்ல மனிதன் மிக நல்ல மனிதானாக மாற்றம் பெறுவதைப் போல் வேறு ஒரு சிறந்த விஷயம் ஒரு பெண்ணைக் கவருவதில்லை.

பெண்கள் சிந்தனையும் உணர்ச்சிகளும் உள்ள ஒருவரை நேசிக்கிறார்கள். அவன் தன் குறைபாட்டை உணர்ந்து கொண்டால் அதை அவள் விரும்புகிறாள்

ஒரு பெண்ணை எதாவது ஒன்று பாதிக்கும்போது, அவள் அதைப் பற்றி கூறும்போது காது கொடுத்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அது உறவை ஆழப்படுத்துகிறது.”

ஒரு பெண்ணிற்கு பாலியல் உணர்வு திருமணத்திற்கு பின் உடனே தோன்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் உறவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம்பிக்கை மற்றும் புரிதல் ஏற்பட்ட பின் அதனைத் தொடங்க ஒரு பெண் நினைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

பாதுகாப்பு உணர்வைப் பற்றி இருவரும் யோசிக்க வேண்டும். ஆண்கள் பெண்களை பாதுகாப்பாக அரவணைப்பதை எல்லா பெண்ணும் விரும்புவார்கள். பெண்கள் எப்போதும் தங்கள் மனதில் உள்ளதை இரவில் கணவருடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவார்கள்.

ஆணின் மனநிலையை பிரதிபலிப்பதன் மூலம், அவரைப் பிடிக்கும் என பெண் உணர்த்துகிறார். ஆணுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம், பிடித்த நிறத்தை அணியலாம், அவளை அணைக்கும்போது புன்னகை செய்யலாம்.

துணை, ஆணின் ஸ்வெட்டர் அல்லது சட்டையை எடுத்து அடிக்கடி அணிந்து கொள்ளலாம். ஆண்களின் சென்ட் வாசனை சில பெண்களுக்கு ரிலாக்ஸ் உணர்வைத் தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதை ஆண்கள் அடிக்கடி சொல்ல வேண்டும் என்றும், ஆண்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்பதையும் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அழகாக உடை அணிந்தால் பாராட்ட வேண்டுமென்று என்று எதிர்பார்க்கின்றனர். புதிய ஹேர் கட், புதிய உடற்கட்டு போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது சரியாக நடக்கிறது, எது தவறாக நடக்கிறது, எல்லாம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி உங்கள் துணை உங்களிடம் கலந்து பேசுவது ஒரு நல்ல விஷயம் தான்.

கண்ணை பார்த்து பேசுங்கள் நீங்கள் உங்கள் துணையின் பக்கத்தில் அமர்ந்து பேசுவதை சௌகரியமாக உணரலாம். ஆனால் தனிமையில் இருக்கும்போது பெண்களின் கண்களைப் பார்த்து பேசும் ஆண்களை அவர்களுக்கு பிடிக்கும்.

ஒரு பெண் எப்போதும் காதல் தருணங்களை அதிகம் விரும்புவாள். அது காதலிக்கத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆனாலும் இருபது வருடம் ஆனாலும், இந்த விருப்பம் இருக்கும்.

Previous articleகட்டில் உறவு திருப்தியை பெற இதை நீங்கள் தவிர்க்க வேண்டும்
Next articleதிருமணத்திற்கு வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமா?