Home ஆரோக்கியம் பொது மருத்துவம் உங்களுக்கு குளிக்க தெரியுமா…? இதுவரை இப்படி குளித்தது தவறு..!

உங்களுக்கு குளிக்க தெரியுமா…? இதுவரை இப்படி குளித்தது தவறு..!

245

பொது மருத்துவம்:குளிக்காமல் எந்த காரியத்தையும் செய்ய மனதே வராது அல்லவா…வெளியில் கூட செல்ல முடியாது அல்லவா..? சரி ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள்….

குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. நாம் எப்படி குளிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க…

குளியல் = குளிர்வித்தல்

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம்

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம்.

=பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம்

குளிக்கும் முறை :

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.

இனியாவது எந்த நேரத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு குளிப்பது ஆக சிறந்தது