Home குழந்தை நலம் குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இயற்கை மருத்துவம்

குழந்தைக்கு சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இயற்கை மருத்துவம்

28

A9C6E261-20A3-4F44-AEE0-D2976B143A97_L_styvpfபிறந்த குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எதற்காக குழந்தை அழுகின்றது என கண்டுபிடிப்பது தாய்மார்களுக்கு சிரமமான விஷயமாகும். பொதுவாக குழந்தை அழுவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்கும் ஒன்று பசி மற்றொன்று வயிறு வலி அல்லது வயிற்று சூடு.

பொதுவாக குழந்தையின் வயிற்று பகுதி மிகவும் சூடாக உணரப்பட்டால், வயிற்று வலியினால் தான் குழந்தை அழுகிறது என்று எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே செயற்கை மருந்து கொடுத்து பழக்குவது தவறான அணுகுமுறை ஆகும். இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு வீட்டு வைத்தியமும், பாட்டி வைத்தியமும் செய்தாலே போதுமானது.

* பெருங்காயத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து பசைப் போன்று ஆக்கிக் கொள்ளவும். பின்பு குழந்தையின் வயிற்று பகுதியில் மென்மையாக சுழற்சி முறையில் தடவி மசாஜ் போல செய்யவும். இது, குழந்தையின் உடல் சூட்டை தனித்து வயிற்று வலியை உடனடியாக குறைக்க உதவும்.

* சிறுதளவு ஓமத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு வயிற்று வலி என்று தெரியும் போது டீ ஸ்பூன் அளவில் கொடுத்து வந்தால் வலி குறையும்.

* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கும் அளவு காய்ச்சிய பின், நன்கு குளிர வைக்கவும். அந்த நீரை காற்று புகாத வண்ணம் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். இது, வயிற்று சூட்டை குறைத்து குளுமை அடைய செய்யும். வயிற்று வலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் குறைக்கவும் உதவும். இந்த நீரை காற்று புகாதபடி பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டுவது மிகவும் முக்கியமானது ஆகும்.

* சிறிதளவு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல குலைத்துக் கொள்ளவும். பின் அந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் வயிற்று பகுதியில் மெல்ல மென்மையாக சுழற்சி முறையில் மசாஜ் போல செய்து வந்தால், வயிற்று வலி குறையும்.

Previous articleஇடுப்பு, முதுகுத்தண்டு, கழுத்து எலும்புகளுக்கு வலிமை தரும் கூர்மாசனம்
Next articleலிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ்